கவனித்துக்கொள்வோருக்கு இடை ஓய்வு

மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கு இடைஓய்வு அளிக்கும் பல அமைப்புகள் உள்ளன

சுதா ஒரு தொழில் நிறுவனத்தில் தொழில் மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இதற்காக அவர் பல இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். சமீபத்தில் சுதாவின் தாயாருக்கு அல்ஸைமர்ஸ் நோய் வந்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. இப்போது சுதா பெரும் குழப்பத்தில் இருக்கிறார், தான் பணிநிமித்தமாகப் பயணம் செய்யும்போது தன்னுடைய தாயை யார் கவனித்துக்கொள்வார்கள் என்று அவர் குழம்புகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல், சவாலான ஒரு பணிதான். குறிப்பாக அல்ஸைமர்ஸ் போன்ற சிதைவு நிலைக் குறைபாடு உடைய ஒருவரைக் கவனித்துக்கொள்ளும்போது, அவ்வாறு கவனித்துக்கொள்கிறவருக்கும், மன அழுத்தம், களைப்பு போன்றவை உருவாவது இயல்பு, சில காலத்திற்குப் பிறகு அவர்கள் மிகவும் சோர்ந்துவிடக்கூடும்.

இதுபோன்ற நேரங்களில், மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் ஓர் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு அவருடைய குடும்பம்தான் முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. அதே சமயம், இவ்வாறு கவனித்துக்கொள்கிற குடும்ப உறுப்பினர்களுக்கும் வேறு தனிப்பட்ட வேலைகள் இருக்கலாம், பணிசார்ந்த தேவைகள் இருக்கலாம், அதனால் அவர்களுக்கு தாற்காலிகமான இடைஓய்வு, அல்லது மாற்று ஏற்பாடு தேவைப்பட்டால் அதை வழங்கக் கூடிய பல அமைப்புகள் உள்ளன.

இந்த வசதிகளை இடைஓய்வுப் பராமரிப்பு வசதிகள் என்று அழைக்கிறார்கள். இவை மனநலம் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக்கொள்கிறவருக்கு தற்காலிக இடைஓய்வு அளிக்கின்றன, அதன் மூலம் அவர்கள் தங்களுடைய பராமரிப்பில் இருப்பவர்களையே இங்கே விட்டுவிட்டு தங்களது வழக்கமான வேலை அல்லது மற்ற பணிகளைக் கவனிக்கச் செல்லலாம்.

இந்த இடைஓய்வுப் பராமரிப்பு வசதிகள் இரண்டு வகைகளில் கிடைக்கின்றன: வீடு சார்ந்த பராமரிப்பு மற்றும் வீடு சாராத பராமரிப்பு. இந்த இரண்டில் எந்த இடைஓய்வு வசதியை தேர்ந்தெடுப்பது என்பது பல காரணிகளைப் பொறுத்து அமையும் : மனநல பாதிப்பின் தீவிரம், பாதிக்கப்பட்டவர் எந்த அளவு செயலில் இருக்கிறார், அவரது சமூக – பொருளாதார நிலை. அப்படிப்பட்ட ஒரு சேவை அவர்கள் வசிக்கும் இடத்தில் கிடைப்பவை போன்றவை. ஒருவருடைய மனநல பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரால் தன்னுடைய சுத்தம் மற்றும் தினசரி வேலைகளைக் கூட செய்ய இயலவில்லை என்றால், வீடு சார்ந்த ஓர் இடைஓய்வைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பாதிக்கப்பட்டவரால் தன்னுடைய தினசரி வேலையைச் செய்ய இயலுகிறது, ஆனால் அவர் ஒரு தொழிலையோ அல்லது ஒரு பணிசார்ந்த பழக்கத்தையோ உண்டாக்கிக்கொள்ள விரும்புகிறார் என்றால் வீடு சாராத ஓர் அமைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

இல்லம் சார்ந்த பராமரிப்பு: இந்த அமைப்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒரு வீடு போன்ற அமைப்பில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு தங்குகிறார். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவை வழங்கப்படும். அது போன்று வழக்கமான மருத்துவ பரிசோதனைகள், புனர்வாழ்வு நடவடிக்கைகளும் இருக்கும். பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர் குடும்பத்தினரின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க இந்த வகையில் பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

வீடு சார்ந்த இடைஓய்வு அமைப்புகள், இரு வகைகளில் அமையலாம்:

  • பாதிதூர இல்லங்கள்: தீவிர மனநலப் பிரச்னை உள்ள ஒருவருக்கு சிகிச்சை வழங்கி அவர் ஓரளவு குணமான பிறகு, தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அவருடைய திறன்களை வளர்க்கவும், சமூக மற்றும் உரையாடல் திறன்களை ஏற்படுத்தவும், பணி சார்ந்த திறன்களை கற்றுக்கொள்ளவும், தலையீடுகள் தேவைப்படும். அதுபோன்ற சூழ்நிலைகளில் இந்தப் பாதிதூர இல்லங்களைப் பயன்படுத்தலாம். இத்தகைய இல்லங்களில் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த பட்சம் ஆறு மாதங்களாவது தங்கியிருக்கவேண்டும்.
  • கால்தூர இல்லங்கள்: இங்கே தீவிரமான மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர், குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் தங்குவார்.

பாதிதூர / கால்தூர இல்லங்களில், மருத்துவர்கள், உளவியளாளர்கள், உளவியல் சமூக ஊழியர்கள் மற்றும் உளவியல் செவிலியர்கள் அடங்கிய குழு இருக்கும். ஏதேனும் மருத்துவ நெருக்கடிகள் ஏற்பட்டால் அவற்றை கையாளுகிற திறனையும் இவர்கள் பெற்றிருப்பார்கள்.

பாதிதூர / கால்தூர இல்லங்கள் எப்படி வேலை செய்கின்றன?

ஒருவர் தனக்கு ஏற்ற இல்ல அமைப்பு எது என்று தேர்ந்தெடுத்த பிறகு, அங்கே ஒரு குறுகிய காலகட்டத்திற்கு தங்கிப் பார்க்கலாம். இதனை வெள்ளோட்டத்தங்குதல் என்று அழைப்பார்கள். வெள்ளோட்டத்தங்குதலின் நோக்கம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் தாங்கவிருக்கும் இடத்தை ஓரளவு பழக்கப்படுத்திக்கொள்ளுதல். இப்படித் தங்கிய பிறகு அது அவருக்கு பிடித்திருந்தால், அதை அவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால், அவர்களை அங்கே அனுமதித்துப் பதிவு செய்வார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கே நீண்ட காலத்திற்குத் தங்கலாம்.

பாதிதூர / கால்தூர இல்லங்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் செய்யப்படும்?

தீவிர மனநலக் குறைபாடுகள் கொண்டவர்களுக்கு, பல விதமான பிரச்னைகள் இருக்கும்; உதாரணமாக அவர்கள் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளான பல்தேய்த்தல், குளித்தல் போன்றவற்றைக் கூட செய்ய இயலாமல் இருக்கலாம். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வேண்டிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான தேவையும் இருக்கும்.

இதற்காக, பாதிதூர இல்லங்களில் தங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கால அட்டவணை உருவாக்கப்படும். இதில் அவர்கள் துணிகளைத் தோய்ப்பது, தங்களுடைய அறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வாது. தங்களுடைய உடலை சுத்தமாக பராமரித்துக்கொள்வது. என்று பல விஷயங்களைக் காற்றுக்கொள்வார்கள். நாள் முழுக்க இவர்கள் தொடர்ந்து ஏதாவது வேலையில் ஈடுபட்டிருக்கும்படி, அந்த இல்லத்தின் பணியாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். இவர்களுடைய தினசரி கால அட்டவணையில், உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகளும் இருக்கும். கலை, கைவினைப் பொருட்களை செய்வது போன்றவையும் கற்றுத்தரப்படும்.

இல்லம் அல்லாத பாராமரிப்பு

மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து குணமாகிக் கொண்டிருக்கிறார். அவரால் தினசரி நடவடிக்கைகளைச் செய்ய இயலுகிறது என்றால், வீடு அல்லாத இடைஓய்வு அமைப்பு ஒன்றை, முயன்று பார்க்கலாம். இது போன்ற அமைப்புக்களில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கனவே உள்ள திறன்களை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும். இல்லம் அல்லாத பராமரிப்பு அமைப்புக்களில் டே கேர் சென்டர் எனப்படும் பகல்நேரப் பராமரிப்பு அமைப்புகளும் உண்டு. இங்கே மனநலம் பாதிக்கப்படவார் காலையில் வருவார், நாள் முழுக்க பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பார். மாலையில் தான் குடும்பத்தினரோடு திரும்பிவிடுவார். இது போன்ற மையங்களில் நடத்தப்படும் சில விளையாட்டுகள், புதிர்கள், சமூகத் திறன்கள், வாழ்கைத்திறங்களுக்கான பயிற்சிகள், கலைச் சிகிச்சை, அசைவுச் சிகிச்சை, யூகா மற்றும் இசைச் சிகிச்சை. போன்ற மாற்று சிகிச்சைகள், மெழுகு வர்த்தி செய்வது, தையல், அச்சிடுதல், கூடை பின்னுதல், பேக்கிங் மற்றும் கணினிப் பயிற்சி போன்ற பணி சார்ந்த பயிற்சிகள். அவரவருடைய திறன்கள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்ப அவர்கள் இந்தத் திரங்களில் ஒன்றையோ அல்லது தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளலாம்.

குடும்பத்தின் பங்கு

ஒருவருக்கு உளவியல் சார்ந்த புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்படும்போது, அவருடைய குடும்பத்தின் பங்களிப்பு அதற்கு அவசியம் தேவை. அவர்கள் வீடு சார்ந்த பராமரிப்பு மையங்களுக்கு சென்று தங்கினாலும் சரி, வீடு சாராத பராமரிப்பு மையங்களுக்கு சென்று வந்தாலும் சரி. சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர், வீடு சார்ந்த பராமரிப்பு மையங்களில் ஒரு புதிய திறனைக் கற்றுக்கொண்டு நான்கு முன்னேறுவார், ஆனால் அதே சமயம் தங்களுடைய குடும்பத்தினரிடம் திரும்பிய பிறகு அந்தத் திறன்கள் சரியத்தொடங்கலாம். எனவே ஒருவர் வீடு சார்ந்த பாராமரிப்பு மையத்தில் சேர்ந்து பணியாற்றும்போது, அவருடைய குடும்பத்தினரும் நிபுணர்களோடு சேர்ந்து பணியாற்றவேண்டும், அதன் மூலம் வீட்டுச் சூழல் அவர் குணமாவதற்கு மேலும் உதவக் கூடிய வகையில் அமையும். இவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் வீடு திரும்பும்போது தங்களுடைய திறன்களை மறக்காமல் இருப்பார்கள், அவர்கள் குணமாவது தொடரும்.

ஓர் இடைஓய்வுப் பராமரிப்பு அமைப்பை எப்படித் தேடுவது?

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர் தனக்கு இடைஓய்வு தொடங்குகிற நேரத்தில், முதலில் தங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசவேண்டும், அவர்கள் யாரேனும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார்களா என்று கேட்கவேண்டும். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், தான் யாரைக் கவனித்துக்கொள்கிறோமோ, அவருக்குச் சிகிச்சை தரும் மனநல மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவேண்டும் அல்லது தங்கள் வீட்டருகே இருக்கிற எந்த ஒரு மனநல மருத்துவரையும் சந்தித்துப் பேசலாம். இதன்மூலம், தங்களுடைய பகுதியில் இருக்கிற பல்வேறு இடைஓய்வு அமைப்புகளின் பெயர்கள் அவர்களுக்குத் கிடைக்கும். அதில் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிற ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org