தீவிர பழக்கங்களிலிருந்து மீண்டுவருதல்

போதைப்பொருளுக்கு அடிமையாதல் இந்தியாவில் இன்றைக்கு ஒரு பெரிய பிரச்னையாகும். இதனால் பாதிக்கப்படுவது, போதைப்பொருளுக்கு அடிமையான தனிநபர்மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், சமூகத்தினர் என எல்லாரும்தான். அதன் ஆழமான தாக்கங்களை யாராலும் கற்பனை செய்யக்கூட இயலாது.

துரதிருஷ்டவசமாக, போதைப்பொருளுக்கு அடிமையாகிச் சிரமப்படுகிறவர்களைச் சமூகம் பலவீனமானவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகவே பார்க்கிறது. அவர்கள் நினைத்தால் அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தாமல் நிறுத்திவிடலாம் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். உண்மையில், இந்தப் பிரச்னை மிகவும் சிக்கலானது. இந்தப் பழக்கம் ஒருவருடைய மூளையின் கட்டமைப்பைப் பாதிக்கிறது. அவரால் வலுவான தீர்மானங்களை எடுக்க இயலாதபடி செய்துவிடுகிறது, அப்படியே எடுத்தாலும், அவரால் அவற்றைத் தொடர்ந்து பின்பற்ற இயலுவதில்லை.

போதைப்பொருள்களுக்கு அடிமையான ஒருவர், அவரது நண்பர்கள், குடும்பத்தினர், சமூகத்தினர் ஆதரவுடன் அதிலிருந்து மீளலாம். அவர்களுடைய போராட்டங்களைப்பற்றிப் பிறர் தெரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் தங்களுடைய பிரச்னையை அடையாளம் காண்பதற்கும், உதவி நாடுவதற்கும், குணமாவதற்கும் உதவவேண்டும்.

இந்தப் பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையாதலைப்பற்றிய பல்வேறு அம்சங்கள் பேசப்படுகின்றன. உதாரணமாக, மதுவுக்கு அடிமையாதல், புகையிலைக்கு அடிமையாதல், போதைமருந்துக்கு அடிமையாதல் போன்றவை. 

உள்ளே காண்க

மேலும் வாசிக்க