குடும்பத்தினர் / கவனித்துக்கொள்வோருக்கான குறிப்புகள்

Q

என்னுடைய உறவினர் ஒருவருக்கு மனநலப்பிரச்சனை வந்திருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்பட்டால், நான் அவரை ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்க இயலுமா என்று கோரலாமா? ஒருவேளை அவர்கள் சிகிச்சை பெற விரும்பவில்லை என்றால் நான் என்ன செய்வது?

A

உங்கள் உறவினர் ஒருவருக்கு மனநலப்பிரச்சனை இருந்து, அவர்கள் அதற்கு சிகிச்சை பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் உங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்டை அணுகவேண்டும், அவரிடம் ஓர் ஏற்றுக்கொள்ளல் ஆணையைப் பெறவேண்டும். இந்த ஆணை வழங்கப்பட்டுவிட்டால், அதன்பிறகு உங்களுடைய உறவினரை ஒரு மனநல மருத்துவமனை அல்லது நர்சிங் ஹோமில் அனுமதித்து அங்கேயே சிகிச்சை வழங்கலாம். (பிரிவு19, 20, MH சட்டம்)

Q

ஏற்றுக்கொள்ளல் ஆணை என்றால் என்ன?

A

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக ஒரு மனநல மருத்துவமனையில் சேர மறுக்கிறார் என்றால், அவருடைய குடும்பத்தினர் அல்லது அவருடைய மருத்துவர், அந்த மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட்டை அணுகி ஓர் ஏற்றுக்கொள்ளல் ஆணையைக் கோரலாம்.

இந்த விண்ணப்பதைக் காணும் மாஜிஸ்ட்ரேட், இரண்டு விஷயங்களை மதிப்பிடுவார்:

  • பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடு மிகவும் தீவிரமானதா, அதனை குணப்படுத்துவதற்காக அவரை ஒரு மனநல மருத்துவமனையில் தனியே வைத்து சிகிச்சை தருவது அவசியமா?
  • அவர்களுடைய சொந்த பாதுகாப்பு, சுற்றியுள்ள மற்றவர்களுடைய பாதுகாப்பைக்கருதி அவர்களைத் தனியே தடுத்துவைத்துச் சிகிச்சை தருவது அவசியமா?

இதைத்தீர்மானிப்பதற்காக மாஜிஸ்ட்ரேட் சம்பத்தப்பட்ட நபரையும் அவருடைய மருத்துவ ஆவணங்களையும் பரிசோதிப்பார், அதன் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளல் ஆணையை வழங்குவதா வேண்டாமா என்று தீர்மானிப்பார். (பிரிவு 20,22 MH சட்டம்)

Q

நான் என்னுடைய குழந்தையை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்தேன், இப்போது நான் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இதற்கான வழிமுறை என்ன?

A

நீங்கள் உங்களுடைய குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்பினால், எந்த மனநல நிபுணர் உங்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டாரோ அவரிடம் இதைப்பற்றி பெசவேண்டும், உங்கள் குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதி கேட்க வேண்டும். உங்களுடைய குழந்தை குணமாகி விட்டது என்று அந்த மனநல மருத்துவர் எண்ணினால், அவர் உங்கள் குழந்தையை வீட்டுக்கு அனுப்பலாம். (பிரிவு 18, MH சட்டம்). அதேசமயம் உங்களுடைய குழந்தை போதுமான அளவிற்குக் குணமாக வில்லை என்றால் இன்னும் சில நாள் அங்கே இருந்து சிகிச்சை பெறவேண்டும் என்று உளவியல் நிபுணர் சொல்லக்கூடும்.

Q

என்னுடைய உறவினர் அல்லது நண்பருக்கு மனநலப்பிரச்சனை இருந்தது, ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் ஆணையைப் பெற்று அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று, நானே கவனித்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

A

மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வரும் உங்களுடைய உறவினர் அல்லது நண்பரை நீங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினால், அதற்காக அவருடைய மனநல நிபுணரிடம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர் உங்களுடைய விண்ணப்பத்தையும் தங்களுடைய கருத்துகளையும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்புவார்.

இந்த விண்ணப்பத்தையும் குறிப்புகளையும் காண்கிற மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டுள்ளவரை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வீர்களா என்று உறுதி கோருவார். இத்துடன் அவர் விரும்பும் ஒரு தொகையை பணயக் கட்டணமாகவும் நீங்கள் செலுத்தவேண்டி இருக்கும். மனநலப்பிரச்சனைக்காக சிகிச்சை பெற்றுவருகிற ஒருவரை நீங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றால் அவர் தன்னையோ பிறரையோ காயப்படுத்தாதபடி  நீங்கள் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த அம்சங்கள் அனைத்தையும்  கவனித்தில் கொண்டு மாஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்டவரை உங்களுடன் அனுப்பலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பார். அதற்கான ஆணையை வெளியிடுவார். (பிரிவு 42 MH சட்டம்)

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org