நிபுணர்களுக்கான குறிப்புகள்

Q

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தானே என்னை அணுகு தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை அதன் பெற்றோர் என்னிடம் அழைத்துவந்து அதனை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோருகிறார்கள். அப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

A

ஒரு வயதுவந்த நபர் தானாக உங்களை அணுகி, மனநலப் பிரச்சனைக்கு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருமாறு கோரினால் அல்லது ஒரு குழந்தையின் பெற்றோர்  உங்களை அணுகி தங்கள் குழந்தைக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை தருமாறு உங்களைக் கோரினால், நீங்கள் பாதிக்கப்பட்டவரைப் பரிசோதித்து அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பது அவசியமா என்று தீர்மானிக்கவேண்டும். அதன்பிறகு, இந்தப் பரிசோதனையில் அடிப்படையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீர்மானிக்கவேண்டும் (பிரிவு 17, MH சட்டம்).

Q

தானே முன்வந்து மனநல மருத்துவமனையில் சேர்ந்த ஒருவர் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று கேட்கிறார். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுகிறது என்று நான் கருதினால் என்ன செய்யவேண்டும்?

A

தானே முன்வந்து மனநல சிகிச்சை பெறுகின்ற ஒருவர் வீடுதிரும்ப வேண்டும் என்று கோரினால், அவருடைய மனநலப் பிரச்சனை குணமாகிவிட்டதா இல்லையா என்பதை நீங்கள் மதிப்பிடவேண்டும். அவர் குணமாகிவிட்டார் அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லது என்று நீங்கள் கருதினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிடலாம். ஒருவேளை அவர் இன்னும் குணமாகவில்லை அவரை வீட்டிற்கு அனுப்புவது நல்லதல்ல என்று நீங்கள் நினைத்தால், அவர் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்று கோரி 72 மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். இந்தக் குழுவில் இரண்டு மனநல நிபுணர்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அவர்கள் இருவரும் தனித்தனியே நோயாளியைப் பரிசோதிக்கவேண்டும். இந்தப் பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை தருவது நல்லது என்று அவர்களும் கருதினால், நீங்கள் அவரை வீட்டிற்கு அனுப்ப மறுக்கலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அடுத்த 90 நாட்களுக்கு அவருடைய சிகிச்சையைத் தொடரலாம் (பிரிவு 18, MH சட்டம்)

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org