மனநலம் பாதிக்கப்பட்டோரின் கல்வியுரிமை

Q

எங்களது குழந்தைக்கு மனநலப்பிரச்சனை உள்ளது, எங்கள் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் அவரைச் சேர்க்க இயலுமா?

A

இந்திய அரசியல் சட்டத்தின் 21-A பிரிவின் கீழ், இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி உரிமை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி உரிமைச்சட்டம் (RTE) இதை மேலும் உறுதிப்படுத்துகிறது. இதன்படி ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தன் வீட்டிற்கு அருகிலுள்ள பள்ளியில் இலவசமாகக் கல்வி பெறுகிற உரிமை உண்டு, இது அனைவருக்கும் கட்டாயக்கல்வியாக வழங்கப்படவேண்டும்.

உங்களுடைய குழந்தைக்கு இருக்கக்கூடிய மனநலப்பிரச்சனை, குறைபாடுள்ளோர் சட்டம் (PWD சட்டம்) 1995இன் படி ஒரு குறைபாடாகச் சான்று அளிக்கப்பட்டிருந்தால் அவருக்கு 18 வயது வரை இலவசக்கல்வி கிடைக்கும்.

Q

என்னுடைய குழந்தைக்கு விசேஷக் கல்வித் தேவைகள் உள்ளன, வழக்கமான ஒரு பள்ளியில் இந்தத் தேவைகள் பூர்த்தியாகாது. அப்படியானால் நான் என் குழந்தையை எங்கே படிக்க அனுப்பலாம்?

A

குறைபாடுள்ள குழந்தைகளுக்கு விசேஷக் கல்வித் தேவைகள் இருக்கும் என்பதால், அவற்றைப் பூர்த்தி செய்யக்கூடிய விசேஷ பள்ளிகளை உருவாக்கக்கூடியது அரசாங்கம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் கடமை, அவை அரசாங்கப் பள்ளிகளாக இருந்தாலும் சரி, தனியார் பள்ளிகளாக இருந்தாலும் சரி. இது PWD சட்டத்தின் பிரிவு 26(c)யின் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதே சட்டத்தின் பிரிவு 26(d)ம் பிரிவு அத்தகைய பள்ளிகளில் பணி சார்ந்த வசதிகளும் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறது. இதன்மூலம், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இங்கே கற்றுக்கொள்ளும் வேலைகளைச் செய்து தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.

Q

என்னுடைய குழந்தைக்கு விசேஷ தேவைகள் உள்ளதால், அவர்களுக்கு உதவக்கூடிய விசேஷத் திட்டங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

A

ஆம், சில விசேஷச் சூழ்நிலைகளில் உங்களுடைய குழந்தையின் படிப்புக்கு உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமை. உங்களுடைய குழந்தையின் மனநலப்பிரச்சனை காரணமாக அதனால் முழுநேரம் பள்ளி செல்ல இயலவில்லை என்றால், அரசாங்கம் பகுதி நேர வகுப்புகளை நடத்தி உங்கள் குழந்தை கல்வி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதேபோல் அரசாங்கம் திறந்த நிலை பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் அமைத்து குறைபாடுள்ள குழந்தைகள் அத்தகைய கல்வியைப் பெறுவதை உறுதிசெய்யவேண்டும். குறைபாடுள்ள குழந்தைகளுக்குத் தேவைப்படும் புத்தகங்கள் மற்றும் விசேஷ கற்கும் கருவிகளை, இலவசமாக வழங்குவதற்கான திட்டங்களையும் அரசாங்கம் ஏற்படுத்தி நடத்த வேண்டும். அரசாங்கத்தின் இந்தப் பொறுப்புகள் அனைத்தும் PWD சட்டத்தின் பிரிவு 27ல் வரையறுக்கப்பட்டுள்ளன.

Q

என்னுடைய குழந்தைக்கு உள்ள விசேஷ கற்றல் தேவைகளை வழக்கமாக உள்ள ஆசிரியர்கள் புரிந்துகொள்வார்களா?

A

குழந்தைகளின் விசேஷ கல்வித் தேவைகளை எல்லா ஆசிரியர்களும் புரிந்துகொள்வதில்லை. அதேசமயம், PWD சட்டத்தின் பிரிவு 29இன் கீழ் இதற்கான ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். அதன்மூலம், விசேஷப் பள்ளிகளிலும், எல்லாவிதக் குழந்தைகளும் படிக்கின்ற வழக்கமான பள்ளிகளிலும், மனநலப் பிரச்னைகள், குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குக் கல்வி வழங்கக்கூடிய ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

Q

என்னுடைய குழந்தைக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், விசேஷ கல்வித் தேவையுள்ளவர்களுக்கான விசேஷப் பள்ளி ஒன்றிற்கு நான் என் குழந்தையை அனுப்பவேண்டுமா?

A

PWD சட்டம் 1996 பிரிவு 26(b) இன் படி குறைபாடுள்ள குழந்தைகளும் வழக்கமான பள்ளிகளில் இணைக்கப்படுவதை அரசாங்கம் அல்லது உள்ளூர் நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org