தற்கொலையைத் தடுத்தல்

ஒவ்வோர் ஆண்டும், இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் (1,00,000) தற்கொலை செய்துகொள்கிறார்கள். உண்மையில், தேசியக் குற்றவியல் ஆவணங்கள் பிரிவு (NCRB) தொகுத்துள்ள தரவுகளின்படி, சென்ற பத்தாண்டுகளில் (2002-2012) நாட்டில் தற்கொலை விகிதம் 22.7 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சமூகத்தின் வெவ்வேறு கலாசாரங்கள், பிரிவுகளுக்கேற்ப தற்கொலைக்கான காரணங்கள் மாறுபடுகின்றன. காரணம் எதுவானாலும் சரி, மற்றவகை மரணங்களைவிட, தற்கொலையைத் தடுப்பது எளிது. ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் என்றால், அவருக்கு உதவி தேவை என்பதுதான் பொருள். இப்போதெல்லாம் தற்கொலை முயற்சியை ஓர் உளவியல் நெருக்கடியாகவே பார்க்கிறார்கள். தற்கொலையைத் தடுக்கவேண்டிய பொறுப்பு, சமூகத்தில் எல்லாருக்கும் உண்டு.

ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அவருக்குத் தெரிந்த பலரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பகுதியில், தற்கொலைபற்றி விரிவாகக் காணலாம். இந்த மரணங்களைத் தடுப்பதில் நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பங்கு என்ன என்று தெரிந்துகொள்ளலாம். பல நேரங்களில், அனுதாபத்தோடு ஒருவரிடம் பேசினாலே அவருடைய தற்கொலையைத் தடுத்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இந்தப் பகுதியில் உள்ள கட்டுரைகள் இதுபற்றி விரிவாகப் பேசுகின்றன.

உள்ளே காண்க

மேலும் வாசிக்க