பத்திகள்

டாக்டர் அனில் பாடில்

 • டாக்டர் அனில் பாடில்  மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு ஏற்படும் மனக்கவலைகள் அல்லது நீண்டநாளாக இப்பணியைச் செய்வதால் ஏற்படும் அழுத்தங்களால், அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம், பதற்றம் உண்டாகலாம், அவர்கள் பிறரிடமிருந்து விலகி வாழலாம், அவர்களது மனநலம்கூடப் பாதிக்கப்படலாம்.

  கேரெர்ஸ் வேர்ல்ட்வைட் அமைப்பின் நிறுவனர், செயல் இயக்குநர் டாக்டர் அனில் பாடில். எந்தவிதமான பொருளாதாரப் பலனும் பெறாமல் தங்கள் குடும்பத்தினரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை இவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது, கையாள்கிறது. 2012ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு UKயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது, வளரும் நாடுகளில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரைக் கவனித்துக்கொள்கிறவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறது. டாக்டர் பாடிலும் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் நிறுவனத்தின் தன்னார்வலரான ருத் பாடிலும் இணைந்து இந்தப் பத்தியை எழுதுகிறார்கள்.

  மேலும் விவரங்களுக்கும் நீங்கள் கேரர்ஸ் வேர்ல்ட்வைட் இணையத்தளத்துக்குச் செல்லலாம். இந்தப் பத்திகளின் எழுத்தாளர்களைத் தொடர்புகொள்ள, நீங்கள் இந்த மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம்: columns@whiteswanfoundation.org

டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

 • டாக்டர் ஷ்யாமளா வத்ஸா

  கல்வி என்பது வேலை பெறுவதற்கான ஒரு கருவி என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதைக்கொண்டு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றலாம், கடன்களைத் திரும்பச் செலுத்தலாம் என்றுமட்டுமே அவர்களுடைய சிந்தனை இருக்கிறது. சில இளைஞர்கள்மட்டும், இந்த வலையிலிருந்து வெளியேறி, தங்களுடைய மனத்துக்குப் பிடித்தவற்றைச் செய்கிறார்கள்.

  இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மனநலத்துறையில் பணியாற்றிவரும் டாக்டர் ஷ்யாமளா வத்ஸா பெங்களூரைச் சேர்ந்த மனநல நிபுணர். இளைஞர்களைப்பற்றி இவர் எழுதும் பத்தி இது, பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை இங்கே வெளியாகும். இதுபற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் அல்லது கேள்விகள் இருந்தால், பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் இந்தப் பத்தி எழுத்தாளரைத் தொடர்புகொள்ளலாம்: columns@whiteswanfoundation.org

மௌலிகா ஷர்மா

 • மௌலிகா ஷர்மா

  குழந்தைகளை வளர்த்தல் எளிய பணியன்று. பெற்றோருக்குப் பல பதற்றங்கள் வரும், போகும், தந்தையோ, தாயோ, அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும், அந்தப் பதற்றமே வாழ்க்கை என எண்ணிவிடக்கூடாது.

  பெங்களூரைச் சேர்ந்த மௌலிகா ஷர்மா, தனது கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு மனநலத்துறையில் ஆலோசகரானவர். தற்போது ரீச் க்ளினிக், பெங்களூரில் அவர் பணிபுரிகிறார். இந்தப் பத்திபற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை columns@whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பதினைந்து நாளுக்கு ஒருமுறை இந்தப் பத்தி வெளியாகும்போது, உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படும்.

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

 • டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

  டாக்டர்  எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள எஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். தனிப்பட்டமுறையில் அவர் ஒரு மருத்துவ உளவியலாளராகவும் பணியாற்ற உரிமம் பெற்றுள்ளார், உளவியல் மற்றும் அது தொடர்பான பிற துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். இவற்றில் அல்ஃப்ரெட் அட்லெர் மற்றும் ஆப்ரஹாம் மாஸ்லோவின் வாழ்க்கை வரலாறுகள் பல பரிசுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

  டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து ‘நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல்’ என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். டாக்டர் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். அவரது ஓய்வுநேர ஆர்வங்கள், புல்லாங்குழல் வாசித்தல், நீச்சல்.