உடையக்கூடிய குணம் கொண்ட பெண்ணுக்கு உதவுதல்

ஜென்னி இருபதுகளின் மத்தியில் இருக்கும் தொழில்முறை மாடல். மருத்துவமனையின் புறநோயாளிகள் துறையின் வராண்டாவில் இயல்பாக நடந்துசெல்வார், மருத்துவமனைப் பணியாளர்களுக்குக் “காலை வணக்கம்” சொல்லி” எங்கும் உற்சாகத்தைப் பரப்புவார்.

வெளியே உள்ள இந்த உற்சாகம் மற்றும் நல்லியல்பு, உள்ளே காயம்பட்ட, குழப்பமடைந்த ஒரு சிறு பெண்ணைப் பாதுகாக்கும் ஒரு கேடயம் ஆகும். அவருடைய குழந்தைப்பருவம் அவர்மீது அவருடைய குடும்பத்தினர் உள்ளிட்ட நபர்களால் சுமத்தப்பட்ட பேசஇயலாத கொடூரங்களுடன் தீவிர வலிமிகுந்ததாக இருந்தது. அவர் தெளிவான அறிவு கொண்டிருந்தாலும் பள்ளி ஒரு கொடுங்கனவாக இருந்தது. 15 வயதில் அவர் தான் ஒரு முட்டாள் இல்லை, டிஸ்லெக்சிக் என்று உணர்ந்தார், தன்னைத்தானே கற்றல் குறைபாடுகளுக்காக சோதனைக்குட்படுத்தினார். ஏனெனில் யாரும் தன்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்றூ அவர் உணர்ந்தார்.

அவருடைய பதின்வயதிலிருந்து தொடர்ச்சியாக அவருக்கு ஆண் நண்பர்கள் இருந்தனர், அவர் நிறைய நம்பிக்கை, உண்மை மற்றும் நேர் எண்ணத்துடன் தொடங்கிய ஒவ்வோர் உறவிலும், ஒவ்வொருவரும் துன்புறுத்துபவர்களாகவும்  இருந்தார்கள், ஒருவருக்கொருவர் சளைக்காமல் அவரைத் துன்புறுத்தினார்கள். அவர் தன்னை உண்மையில் விரும்பிய ஒரே ஒரு சிறப்பான நபரைமட்டுமே வேண்டினார், இந்த நம்பிக்கையுடன் ஒவ்வோர் உறவுக்குள்ளும் தன்னை முழுமையாகக் கொடுத்தார்.

அவர் மக்களைக் கருப்பு, வெள்ளையில் பார்க்கும் இயல்பு கொண்டிருந்தார், அவர் ‘பொருத்தமானவர்கள்” என்ற உயரத்தில் வைத்த நபர்களுடன் பழங்கினார், பெரும்பாலும் நேர்மையற்றவர் என்ற பெயருடைய அழகான பையன்களுடன் வெளியே செல்வதைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒட்டிக் கொண்டு உடைமையென நினைப்பவராக மாறும்போது, மாறவியலாத வெள்ளை பொய்யான கருப்பாக மாறியது. அதன்பின் ஆண் நண்பர்கள் அவரைத் தவிர்க்கத்தொடங்குவார்கள், அவருடைய அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கமாட்டார்கள். இது அவரைக் கண்ணீர் ஆவேசங்களுக்கு அனுப்பியது, அவர் கையில் கிடைத்த கைபேசி, காபிக் கோப்பைகள், புத்தகங்கள் என எல்லாவற்றையும் தரையில் போட்டு உடைப்பார். பின்னர் அந்த நண்பனுக்கு அவன் வேறு யாரையாவது நேசிக்கிறானா என்று எண்ணற்ற செய்திகளை அனுப்புவார். இது ஒவ்வோர் உறவிலும் பலமுறை நடக்கும். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் சகஜமாவார்கள்.

அவர் ஒருபோதும் உறவை முடிக்க நினைத்ததில்லை, ஏனெனில் அவருடைய மோசமான பயம், தான் கைவிடப்பட்டுத் தனியாகிவிடுவோமோ என்பதாக இருந்தது. இதன் விளைவாக உறவுகள் எப்போதும் ஒரு மோசமான சண்டைக்குப்பிறகு பையன் விலகிச்சென்று, அவரை முழுமையாகப் பேரழிவுக்குள்ளாக்கிப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் விட்டுச் செல்வதிலேயே முடிந்தன.

இப்படிப்பட்ட முறிவுகளுக்குப்பிறகு, “வலியை மரத்துப்போகச்செய்ய” விரும்பினார் அவர், தன் நண்பர்கள் கொடுத்த ஒவ்வொரு போதை மருந்தையும் முயற்சிசெய்தார். அவர் சாகும் விருப்பம் கொண்டு, தன்னுடைய தாய்க்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அதிகம் உட்கொண்டார், அதற்கு முன்பு இருமுறை வயிற்றைச் சுத்தம் செய்ய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஒருநாள், உள்ளார்ந்த மனநிலையில், அவர் தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இருக்கும் வரையில் மட்டுமே தான் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார், அது வழக்கமாக மது மற்றும் போதையும் சேர்ந்ததாக இருக்கும். அவரால் தனியாக இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தன்னுடைய அறையில் இரவில் தனியே இருக்கும்போது தான் இல்லாதது போலே உணர்ந்தார்; அவர் மற்றவர்களுடன் உரையாடும்போது மட்டுமே ஒரு நபராக உணர்கிறார். அவரைப் பொறுத்தவரையில், அவர் நிலையான அடையாளமோ, அவர் யாரென்ற உணர்வோ கொண்டிருக்கவில்லை.

பெரும்பாலான நேரம் அவர் உணர்வில்லாததாக உணர்வார், அவர் அதனை “ஆன்மாவின் வெறுமை” என வர்ணிக்கிறார். அவர் ஏதேனும் ஒன்றை உணரத் தன்னுடைய முன்கையைச் சவரக்கத்தியால் வெட்டிக் கொண்டதைக் கன்னங்களில் கண்ணீர் வழிய நினைவுபடுத்துகிறார்: வெறுமையை விட வலிகூட விரும்பத்தக்கது. அதன் பிறகும் அவர் ஒன்றும் உணராததால் உடைந்தபோய் எல்லா இரவிலும் அழுதார். சிலநேரங்களில் அந்த இருட்டான நேரங்களில் தன்னுள் ஆழமாக உள்ள வலி மற்றும் கவலையினை அறிந்து கொண்டார். நாள் விடிந்ததும் அவர் தனக்கு “மனச்சோர்வு” உள்ளதாக தெளிவின்றி முடிவெடுத்து, மருந்துகள் பெற மனநல மருத்துவரைப் பார்க்கத் தீர்மானித்தார்.

ஆரம்ப நேர்காணல்களில் அவருடைய மனச்சோர்வுற்ற நிலை தெளிவாக இருந்தது. மனச்சோர்வை நீக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். அதேவேளையில், அவருடைய “மனச்சோர்வு நிகழ்வுகளின்” கண்டறிதல் அவருடைய பிரச்னையை முழுமையாக வரையறுக்கவில்லை என்பதும் சம அளவில் தெளிவாக இருந்தது. மருந்துகள் செயல்படத் தொடங்கும்வரையில் நான் அவருக்கு உதவ அவரை வாரம் ஒருமுறை சந்தித்தேன், பின்னர் அவரை மனநலச் சிகிச்சைக்காக ஒரு மருத்துவ மனநலவியலாளருக்கு பரிந்துரைத்தேன் அதேவேளையில் மருந்துகளைப் பரிசோதிப்பதற்காக மாதம் ஒருமுறை அவரைத் தொடர்ந்து பார்த்தேன்.

இந்த வகைத் தன்மையின் பரவல் ஒருவர் நினைப்பதையும்விட அதிகமானது. அது பையன்களை விடப் பெண்களிடம் அதிகம் உள்ளது. பெரும்பாலான பெண்களால் ”அழுகை ராணிகள்” என்றோ அதைவிட மோசமாகவோ அழைக்கப்படும் பெண்களுக்கு, அவர்களுக்குத் தங்களுடைய குழப்பமான மற்றும் அதிர்ச்சியுட்டும் உள் வாழ்க்கையைத் தெளிவுபடுத்த அனுபவமிக்க மருத்துவ மனநல ஆலோசகரின் உதவி தேவை, அத்துடன் அதுபோன்ற உடையக் கூடிய தன்மை கொண்ட நபர்களிடம் இருக்கும் மாற்றமில்லாத மனநல நிலைகளுக்குச் சிகிச்சையும் தேவை.

இந்தத் தொடரில் மருத்துவர் சியாமளா வத்சா, பதின்பருவ மாற்றங்கள் ஆரம்பநிலையிலுள்ள மனநலப் பிரச்னைகளை மறைக்க முடியும் என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கட்டுரைகள் மனநலக் குறைபாட்டின் ஆரம்பகால அறிகுறிகள் ஒரு சாதாரணப் பதின்பருவ நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. தேவையின்றி வருந்திய இளம் நபர்களுடைய கதைகளில் காட்டப்பட்டதுபோல், சாதாரண எல்லைகளைத் தாண்டி ஒரு நடத்தை இருக்கும்போது அதனை அடையாளம் கண்டு, அவை கையை மீறிப் போகும் முன் உதவியை நாடுவது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முக்கியமாகும்.

மருத்துவர் சியாமளா வத்சா இருபது ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப்பணியாற்றிவருகிற, பெங்களுரைச் சேர்ந்த மனநல நிபுணர். உங்களுக்குப் பகிர்வதற்கு ஏதேனும் கருத்துகள், கேள்விகள் இருந்தால், தயவுசெய்து columns@whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org