எங்களைத் தொடர்புகொள்க

மனநலம் பற்றி நாம் இன்னும் அதிகம் பேசவேண்டும் என்று நீங்கள் நம்பினால், மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட யாரையாவது நீங்கள் அறிந்திருந்தால், மனநலம்பற்றிய ஒரு தனிப்பட்ட நிகழ்வை நீங்கள் பகிர்ந்துகொள்ளவிரும்பினால், எங்களுடன் பேசுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம். எங்களுக்கு எழுதும்போது, தலைப்பில் 'நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்' என்று எழுதுங்கள், உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

எங்களுடன் இணையுங்கள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்தோடும் அக்கறையோடும் பணிபுரிகிறார்கள். மனநலத்துறையில் ஒரு மாற்றத்தை உருவாக்கவேண்டும் என்ற துடிப்புடன் அவர்கள் செயல்படுகிறார்கள். இந்த மாற்றத்தைத் தூண்டக்கூடியவர்களாக நாங்கள் எங்களை அர்ப்பணித்துக்கொண்டு பணிபுரியக் காரணம், எங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு தனிப்பட்ட கதை இருக்கிறது. நீங்கள் இந்தப் பயணத்தில் இணைய விரும்பினால், நீங்கள் இந்த முயற்சிக்கு எவ்வாறு பங்களிக்க விரும்புவீர்கள் என்பதுபற்றி எங்களுக்கு எழுதுங்கள். அந்த மின்னஞ்சலின் தலைப்பில் 'நான் இணைய விரும்புகிறேன்' என்று குறிப்பிடுங்கள்.

நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்

எங்கள் இணையத்தளத்திலிருந்த விவரம் உங்களுக்குப் பயன்பட்டதா? இந்தப் பக்கங்களில் எது உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது என்று எங்களுக்குச் சொல்லுங்கள். அத்துடன், இந்தத் தளத்தை முழுமையாக்க நாங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதுபற்றிய உங்களுடைய ஆலோசனைகளையும் சொல்லுங்கள். உங்களுடைய மின்னஞ்சலின் தலைப்பில் 'சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள்' என்று குறிப்பிடுங்கள்.

சட்டப்பூர்வமான கேள்விகள்

மனநலம் தொடர்பான சட்டப்பூர்வமான கேள்விகள் ஏதேனும் இருந்தால், எங்களுக்கு அவற்றை அனுப்பிவையுங்கள். அத்துடன் சுருக்கமான தகவல் பின்னணியையும் வழங்குங்கள். மாதம் இருமுறை நிபுணர் ஒருவர் இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பார். உங்கள் மின்னஞ்சலின் தலைப்புப் பகுதியில் “Legal queries” என்று குறிப்பிடுங்கள்.

உங்களைப்பற்றிய விவரங்கள்

வொய்ட் ஸ்வான் வலைத்தளச் செய்திகளைப் பெற விரும்புகிறேன்