பெண்களுக்கு மனச்சோர்வு வரும் வாய்ப்பு அதிகமா?

மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற மனநலப் பிரச்னைகளால் பெண்கள் ஆண்களைப் போன்று இருமடங்கு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பால் வேற்றுமையை உருவாக்குவதாக நம்பப்படும் சில காரணங்கள் இதோ.

   1    ஹார்மோன்கள்: பெண்கள் ஆண்களைவிட அதிக ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கிறார்கள். இந்த ஏற்ற இறக்கங்கள் மனச்சோர்வு அறிகுறிகளுடன் தொடர்புடையவை. ஒரு பெண் பருவமடையும்போது, மாதவிடாய் நிற்கும்போது என அவருடைய வாழ்க்கையின் பல நிலைகளில் ஏற்படுகின்றன. மாதவிடாயின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் மனச்சோர்வு போன்ற மனநிலை மாற்றங்களுக்கு ஒரு காரணமாகின்றன.

   2    ஜீன்கள்: ஒரே மாதிரியான மற்றும் வேறுவேறான இரட்டையர்களைப்பற்றிய ஆய்வுகளில், பெண்கள் மனச்சோர்வுக்கான ஒரு வலுவான மரபியல் காரணியைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்குமட்டும் குறிப்பான சில மரபியல் பிறழ்வுகள் உள்ளன, அவை மனச்சோர்வின் வளர்ச்சியுடன் இணைந்தவை.

   3    சுற்றுச்சூழல் காரணிகள்: சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இந்தப் பாலியல் வேறுபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பெண்கள் அழுத்தம் மிகுந்த வாழ்க்கை நிகழ்வுகளால் துன்புறுகின்றனர் – குழந்தைப்பருவத்தில் பாலியல் துன்புறுத்தல், வீட்டு வன்முறை அல்லது வளர் இளம் பருவத்தில் பாலியல் துன்புறுத்தல். அழுத்தம் தரும் நிகழ்வுகளின்போது அவற்றுக்கு எதிர்வினையாகப் பெண்கள் எளிதில் மனச்சோர்வு அடைவதை ஆய்வுகள் காட்டுகின்றன.

   4    பெண்கள், குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் இருவருக்கும் முழு நேரப் பராமரிப்பாளர்களாக மாறுகின்றனர். இவை அதிகப்படியான அழுத்தத்திற்குக் காரணமாகாவிட்டாலும், அழுத்தத்தின் நீண்ட கால இயல்பு, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படக் காரணமாகலாம்.

   5.   மனச்சோர்வுக்கு இட்டுச் செல்லும் பிற சுற்றுச்சூழல் காரணிகள் சில: வறுமை, ஒற்றைப் பெற்றோர், வேலை மற்றும் குடும்பப் பொறுப்புக்கிடையே தடுமாறல் ஆகியவை.

   6    கண்டறிதல்: பெண்களுக்கு மனச்சோர்வு வருவது கண்டறியப்பட வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்படுகிறது. இது பாலியல் இடைவெளிக்கு வழிவகுக்கிறது. இதற்கு ஒரு காரணம், ஆண்கள் குறைவாக மனப் பிரச்னைகளைப் பகிர்கின்றனர் அல்லது மனப் பிரச்னைகளின்போது அதிகம் உதவியை நாடுவதில்லை. ஆண்களில் வன்முறை நடத்தை அல்லது மதுப்பழக்கம் ஆகியவையும் மனச்சோர்வை மறைக்கும் காரணிகள் ஆகும்.

   7    உடல் நலம்: பெண்களுக்கு ஹைப்போதைராய்டிஸம் வரும் வாய்ப்பு அதிகம். இது மனச்சோர்வுடன் தொடர்புடையது. குறைந்த உடற் செயல்பாடுகளும் மனச்சோர்வின் அறிகுறிகளுக்குப் பங்காற்றுகின்றன.        

மூலங்கள்:

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org