அவமதிக்கப்படும் வயதான நபருக்கு உதவுவது எப்படி?

அவமதிப்பு மிகவும் சிக்கலான நிகழ்வு ஆகும், பல விஷயங்கள் ஓர் அவமதிப்பை உண்டாக்கலாம் (இங்கே படிக்கவும்). இருப்பினும், ஒருவர் தனக்குத் தெரிந்த ஒருவர் அவமதிக்கப்படும் நிலையில் இருப்பதை அறிந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? அவரை அவமதிப்பவர், அந்த முதியவர் பொருளாதாரரீதியாகச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர் என்னும்போது என்ன செய்வது? அந்த முதிய நபர்கள் அவர்களை அவமானப்படுத்த விரும்பாமலிருக்கலாம், எனவே அவர்கள் உதவ மறுக்கலாம். அப்போது அவர்களுக்கு உதவச் சில நடவடிக்கைகள் எடுக்கலாம்:

·       அந்த அவமதிப்பு வாழ்விற்குத் தீங்கிழைப்பது எனில், முதியோர் உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது அவர்களைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ள விருப்பத்துடன் இருக்கும் மற்றொரு குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொள்ள உதவலாம்.

·       வயதானவர்களுடன் நம்பிக்கையாக இருக்க முயற்சிசெய்யலாம். பெரும்பாலும் வயதானவர்கள் தங்களுடைய கவலைகள் அல்லது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள யாரும் இருப்பதில்லை. அவர்களை உரையாட ஊக்குவிக்கிறவர் அதன்மூலம் உணர்வுரீதியில் அவர்களை ஆதரிப்பதோடு மட்டுமில்லாமல் அவர்கள் தங்களுக்காக உரையாடவும் அதிகாரமளிக்கிறார்.

·       சிலநேரங்களில் கவனித்துக்கொள்கிறவருடைய தரப்பில் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை, மேலும் பல நேரங்களில் அவர்கள் வயதான நபருக்குத் தேவையான ஆதரவின் வகை மற்றும் புரிந்துகொள்ளலை உணர்வதில்லை. கவனித்துக்கொள்பவருக்குக் கற்பிப்பது, எதிர்காலத்தில் வரக்கூடிய தவிர்த்தல் மற்றும் தவறான உரையாடல்களைத் தடுக்கலாம்.

·       சில குறிப்பிட்ட நிகழ்வுகளில் குடும்பச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கலாம், இது, குடும்பத்தினர் சில தொடர்புப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவுகிறது (பெரும்பாலான உணர்வு அவமதிப்பு நிகழ்வுகளுக்குத் தவறான உரையாடல் வடிவங்கள் மற்றும் பிள்ளைகள் பெரியவர்களால் குறிப்பிட்ட வழியில் வளர்க்கப்பட்டது போன்றவை காரணங்களாக இருக்கலாம்.).

·       வயதானவர்கள் அதேபோன்ற அனுபவத்தைப் பெற்ற நபர்கள் கொண்ட ஆதரவுக் குழுவைக் கண்டறிவதில் உதவலாம்.

ஏதேனும் ஒரு முதியவர் அவமதிக்கப்பட்டார் என்று சந்தேகித்தால், நைட்டிங்கேல்ஸ் மெடிக்கல் டிரஸ்டின் முதியோர் உதவி மையத்தை1090ல் அல்லதுஹெல்பேஜ் இந்தியா உதவிமையத்தை 1800-180-1253ல் அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org