பருவமடைந்துள்ள என் மகளிடம் என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

வளரிளம் பருவமானது பருவமடைவதில் தொடங்குகிறது என்பது அனைவராலும் அறியப்பட்டது. இந்தக் கட்டம் குழந்தைகளின் உடலின் உள்ளே மற்றும் வெளியே ஏற்படும் பல மாறுபாடுகளால் சவால் மிக்கது. பருவமடைவதுடன் ஏற்படும் குறிப்பிட்ட வகை மாறுபாடுகள் இருப்பினும், அவை நடைபெறும் காலம் மற்றும் வேகம் மாறுபடுகிறது. ஊட்டச்சத்துகள், மரபியல் மற்றும் சமூகக்காரணிகள் பருவமடைவதின் தொடக்கத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.எனவே, குழந்தை, குழந்தைப்பருவத்திலிருந்து வளரிளம் பருவத்திற்கு நகர்வதைக் காட்டும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த இயற்கையான மற்றும் உடல்நல மாற்றங்களை கவனிப்பது மற்றும் அறிந்திருப்பது பெற்றோருக்கு உதவியாக இருக்கும்.

அதே சமயத்தில்,  பருவமடைவதின் தொடக்கம் ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு நேரத்தில் நடக்கிறது மேலும் வழக்கமாக இது 9 மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கிறது. தொடக்கத்தில் மற்றும் பதின்பருவத்தில் நடைபெறும் மாறுபாடுகள்:

  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெவ்வேறான உடல் வளர்ச்சி மற்றும் மாறுபாடு காலகட்டம் 
  • பாலியல் உறுப்புகளில் மாறுபாடுகள்
  • உணர்வு மற்றும் சமூக மாறுபாடுகள்
  • அறிவுத்திறன் மாறுபாடுகள்

பருவமடைதல் ஆண்கள் மற்றும் பெண்களில் இனப்பெருக்க உறுப்புகளான, பெண்களில் அண்டம் மற்றும் ஆண்களில் விந்தகத்தில், பாலுணர்வு ஹார்மோன்கள் வெளியாவதிலிருந்து தொடங்குகிறது. பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்களில் மாறுதல்களைத் தூண்டும் ஹார்மோன்கள் முறையே ஈஸ்ட்ரோஜன் மற்றுப் டெஸ்டோஸ்டீரான் ஆகும்.   

வளரிளம் பருவப் பெண்ணிடம் எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள்

உடல் மாறுபாடுகள்:

  • உங்கள் மகள் பருவமடைவதின் தொடக்கத்தில் தீடீர் வளர்ச்சியைப் பெற்று உயரமாக வளர்வாள். பெண்கள் பொதுவாக 16-17 வயது வரை வளர்கிறார்கள்.
  • அவள் உடல் வடிவமும் மாறத் தொடங்கும். அவளது உயரத்திலும் அதிகரிப்பு இருக்கலாம். அவள் இடுப்புகள் அகலமாகலாம். அவளது பிட்டங்கள், தொடைகள் மற்றும் வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாகலாம்.
  • வழக்கமாக மார்பகங்களின் வளர்ச்சி பருவமடைவது தொடங்குவதின் அடையாளமாகும். 
  • மறைவிட முடி, கையின் கீழ்பகுதி முடிகள் வளரத் தொடங்குகின்றன.
  • அவளது மாதவிடாய் (சுழற்சி) தொடங்கும். அவளது மாதவிடாய்க்கு முன் வலி அல்லது பிடிப்பு ஏற்படாலாம். சில பெண்களில், தொடக்க மாதங்களில் மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கலாம்.
  • ஹார்மோன் மாறுபாடுகளால், அவள் அதிகமான எண்ணெய்பத சருமம் மற்றும் வியர்வையை உணரலாம். முகப்பரு மற்றும் கொப்புளங்கள் வளரிளம் பெண்களின் பொதுவான பிரச்சினைகளாகும்.
     

உணர்வு மற்றும் சமூக மாறுதல்கள்:

வளரிளம் பருவத்தின் போது, நீங்கள் உங்கள் மகள் உடலியல் மாறுபாடுகளைச் சமாளித்து மாற்றமடைந்து, ஒரு தனித்த அடையாளத்துடன் உருவாகிறாள் என்பதைச் சுட்டிக்காட்டும் சமூக மற்றும் உணர்வு மாறுபாடுகளைக் கவனிக்கலாம். 

பல உடலியல் மற்றும் ஹார்மோன் மாறுபாடுகளால், நீங்கள் பின்வரும் உணர்வியல் மாறுபாடுகளைக் கவனிக்கலாம்:

  • சில நேரங்களில் கடும் உணர்வுகள் அல்லது ஆழ்ந்த உணர்ச்சிகளைக் காட்டுதல்:  இது உணர்வு மாறுபாடுபோல் தோன்றினாலும், அவளது மூளை வளர்ந்த நிலையில் எப்படிச் செயல்படுத்துவது மற்றும் உணர்வுகளை வெளிக்காட்டுவது என்று இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்வது முக்கியமானதாகும்.
  • உணர்ச்சிவயப்பட்டவராக இருப்பது: அவள் இன்னும் மற்றவர்களின் உணர்வுகளை படிக்கும் மற்றும் செயல்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் எனவே உணர்வயப்படுபவராக அல்லது சில சமயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகள் அல்லது உடல்மொழியைத் தவறாகப் புரிந்து கொள்ளபவராக இருக்கலாம். 
  • சுய உணர்வுடையவராக இருத்தல், குறிப்பாக உடல் தோற்றம் மற்றும் மாறுபாடுகள் குறித்து: அவள் அவளது உடலை தனது நண்பர்கள் மற்றும் உடனொத்தவர்களுடன் ஒப்பிடலாம்.

நீங்கள் பின்வரும் சமூக மாற்றங்களைக் கவனிக்கலாம்:

  • தனித்த அடையாளத்தை உருவாக்கும் செயல்முறையில், அவள் தன்னை அறிந்து புரிந்து கொள்ளும் பொருட்டு ஆராயலாம் அல்லது தன்னிடம் கேள்வி எழுப்பலாம். இந்த அடையாளத் தேடல் பாலினம், சக குழுக்கள், கலாச்சாரப் பிண்ணனி, ஊடகம், பள்ளி மற்றும் குடும்ப எதிர்பார்ப்புகளால் தாக்கத்திற்குட்படலாம்.
  • அவளைப் புரிந்து கொள்ளும் செயல்முறையில், அவள் தனது சுதந்திரம் அதே நேரத்தில் சார்பினை உங்களிடமோ அல்லது உங்கள் துணையிடமோ சில அம்சங்களில் முயற்சிக்கலாம். இது அவள் எடுக்கும் முடிவுகள் மற்றும் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் அவளுடைய உறவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவள் தனக்காக ஒரு அதிக இடத்தை உருவாக்கும் பொருட்டு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
  • அவளது நண்பர்கள் மற்றும் உடனொத்தவர்களுடனான தொடர்பு குடும்பத்தை விட முன்னிலை பெறலாம். அவளது நடத்தை, சுய உணர்வு மற்றும் சுயமதிப்பு ஆகியவை நண்பர்கள் மற்றும் உடனொத்தவர்களின் ஏற்பின் அடிப்படையில் தாக்கம் பெறும்.
  • இயற்கையிலேயே அவளது மூளையின் வளர்ச்சி புதிய அனுபங்களை நாடும் வகையில். எனவே, சில பதின்பருவத்தினர் (அனைவரும் இல்லை) அவர்கள் தேடலில் துணிந்து சில இடர் தரும் நடத்தைகளைச் செய்யலாம். ஆனால் இன்னும் அவர்கள் தங்கள் தூண்டுதல்களின் மீது கட்டுப்பாட்டை வளர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
  • அவள் தன் பாலியல் மற்றும் பாலியல் அடையாளத்தையும் ஆராயலாம். தன்பாலினம் அல்லது எதிர்பாலினத்திர் இடைய உணர்வுகள் தோன்றுவது இயற்கைதான்.அவள் காதல் உறவுகளைத் தொடங்கலாம் அல்லது காதலில் இருக்கலாம்.
  • அவள் வேறுவழிகள் தொடர்புகொள்ளத் தொடங்கலாம். மொபைல், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள், அவள் எப்படி நண்பர்களுடன் உரையாடுகிறாள் மற்றும் உலகைப் பற்றி அறிந்து கொள்கிறாள் என்பதின் மீது முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தலாம்  .

அறிவுத்திறன் மாறுபாடுகள்:

இந்தக் காலகட்டதில் தான் உங்கள் குழந்தையின் மூளை பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பதின்பருவத்தில் தான் மூளையில் வெற்றெண்ணம், முடிவெடுத்தல், இலக்குகளை அமைத்தல், தீர்ப்பளிக்கும் உணர்வு போன்ற உயர்ந்தமூளைச் செயல்பாடுகள் வளர்ச்சியடைகின்றன. நீங்கள் பின்வரும் மாற்றங்களைப் பார்க்கலாம்:

  • அவள் கற்பனையாகச் சிந்திக்கத் தொடங்குகிறாள் மேலும் எது சரி, எது தவறு என்பது பற்றிய கேள்விகளை எழுப்புகிறான். இச்செயல் முறையில், அவள் அவளுடைய தனிப்பட்ட மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்கலாம்.
  • அவளது முடிவெடுக்கும் திறனைப் பொருத்த வரையில் இன்னும் வளர்ச்சியடையாததால், அவள் செயல்களின் விளைவுகளைப் பற்றி அறிந்து புரிந்து கொள்வதற்கு நேரமெடுக்கலாம்.
  • அவள் இலக்குகளை அமைப்பதை நோக்கி செயலாற்றலாம் மேலும் நீண்டகால இலக்குகளான தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில், ஈடுபட வேண்டிய பொழுதுபோக்குகள் இன்னும் பலவற்றைக் குறித்து சிந்திக்கத் தொடங்கலாம்.

உங்கள் மகள் உடல், உணர்வு மற்றும் சமூகரீதியில் எப்படி வளர்ச்சியடைகிறாள் என்பதைக் குறித்து தெரிந்திருத்தல் என்பது புரிந்து கொள்வதற்கும் மாற்றங்களுக்கு ஏற்ப அவளுக்கு ஆதரவளிக்கவும் உங்களுக்கு உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org