வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையைப்பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

சான்றுகள்

  • “என் தாய்க்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிய எந்தக் களங்கவுணர்வும் இருக்கவில்லை,” சுப்ரதோ பாக்சி, தலைவர், வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை

  • “என்னுடைய கதை நல்லவிதமாக மாறியது எப்படி,” அமித் பால், தொழில்நுட்ப ஆலோசகர்


“மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரை

மனநலனைச் சூழ்ந்துள்ள களங்கவுணர்வைத் தடுத்து நிறுத்துவதற்காக நாங்கள் ஆண்டுதோறும் நடத்தும் பரப்புரை இது. அறிவுச் சாத்தியங்களைப் பன்மடங்காகப் பெருக்குவதன்மூலம் மனநல விழிப்புணர்வை உண்டாக்கும் முயற்சிகளுக்கு நன்கொடை வழங்குங்கள்.

நன்கொடைபற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உங்களுடைய நன்கொடை எப்படிப் பயன்படுத்தப்படும்?
வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையின் மையப் பணி, நம்பத்தகுந்த, உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய ஓர் அறிவு வளத்தை உருவாக்குவது. நாங்கள் மிகவும் பொருத்தமான தகவல்களை மிகவும் மதிப்புமிக்கமுறையில் எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குகிறோம். இதை உறுதிசெய்வதற்காக நாங்கள் ஒரு கட்டமைப்புள்ள செயல்முறையைப் பின்பற்றுகிறோம். உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான தீவிரச் செயல்முறையை அறிந்துகொள்வதற்கு, தயவுசெய்து இங்கு க்ளிக் செய்யுங்கள். நாங்கள் பதிப்பிக்கிற, எங்களுடைய பார்வையாளர்கள்/வாசகர்களுக்கு வெளியிடுகிற ஒவ்வொரு படைப்பும், பல வாரச் சிந்தனை, விவாதங்கள், தயாரிப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல்களுக்குப்பிறகுதான் வெளியாகிறது.

நீங்கள் வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்கு வழங்கும் நன்கொடையானது, அறிவுசார்ந்த இந்தப் படைப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். எங்களுடைய பரப்பல் தளங்களைக் கட்டமைக்கவும் வலுப்படுத்தவும்கூட உங்களுடைய ஆதரவு எங்களுக்கு உதவும். வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை பலவிதமான தளங்களின்வழியாகத் தன்னுடைய உள்ளடக்கங்களைப் பரப்புகிறது.எடுத்துக்காட்டாக, இணையத்தளம், செய்திமடல், வீடியோ கருத்தரங்குகள், மின்னூல்கள், இணையத்தில் மற்றும் இணையத்துக்கு வெளியிலான பரப்புரைகள்.

வளரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, இணையத்தளத்தில் மேம்பட்ட தேடல் வசதிகளை வழங்குவதில் தொடங்கி, இன்னும் இயல்பான வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பை வழங்குவதுவரை இன்னும் பல விஷயங்களை நாம் செய்யலாம். எங்களுடைய தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் உங்கள் நிதி உதவி எங்களுக்கு உதவும்.

இணையத்தை அணுக இயலாத பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எங்களுடைய உள்ளடக்கங்களின்மூலம் பலன் பெறுவதற்காக, நாங்கள் அவற்றை அச்சிடுகிறோம். இந்தப் பணிக்கும் உங்கள் நன்கொடை எங்களுக்கு உதவும்.

யார் பங்களிக்கலாம்?
“மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரைக்கு யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருக்கலாம், குழுவாக இருக்கலாம், ஒரு நிறுவனமாகக்கூட இருக்கலாம். நீங்கள் இந்தியாவில் வசிக்கலாம், அல்லது, உலகின் எந்தப் பகுதியிலும் வசிக்கலாம். எங்களுடைய பணி உங்களுக்குப் பிடித்திருந்தால், மனநலப் பராமரிப்புத் துறையில் அது உண்டாக்கும் தாக்கம் உங்களுக்குப் பிடித்திருந்தால், இந்தப் பரப்புரையில் பங்களிப்பதன்மூலம் உங்களுடைய ஆதரவைக் காட்டுங்கள் என்று நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய பார்வைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன்மூலம், அவர்களுக்கும் “மனநலனுக்காக வழங்குங்கள்” பரப்புரையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நன்கொடைக்காக எனக்கு வரிச் சலுகை கிடைக்குமா?
வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்குச் செலுத்தப்படும் நன்கொடைகள் வருமான வரிச் சலுகையின் 80G பிரிவின்கீழ் வரும். வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் பொருந்தும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.