ஆரோக்கிய உள்ளம்

டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

டாக்டர்  எட்வர்ட் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்திலுள்ள எஷிவா பல்கலைக்கழகத்தில் கூடுதல் இணை உளவியல் பேராசிரியர் ஆவார். தனிப்பட்டமுறையில் அவர் ஒரு மருத்துவ உளவியலாளராகவும் பணியாற்ற உரிமம் பெற்றுள்ளார், உளவியல் மற்றும் அது தொடர்பான பிற துறைகளில் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்/தொகுத்துள்ளார். இவற்றில் அல்ஃப்ரெட் அட்லெர் மற்றும் ஆப்ரஹாம் மாஸ்லோவின் வாழ்க்கை வரலாறுகள் பல பரிசுகளை வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஹாஃப்மன் சமீபத்தில் டாக்டர் வில்லியம் காம்ப்டனுடன் இணைந்து ‘நேர்வித உளவியல்: மகிழ்ச்சி மற்றும் மலர்ச்சியின் அறிவியல்’ என்ற நூலை எழுதியுள்ளார். இவர் இந்திய நேர்வித உளவியல் சஞ்சிகை மற்றும் மனிதாபிமான உளவியல் சஞ்சிகையின் ஆசிரியர் குழுக்களில் பணியாற்றுகிறார். டாக்டர் ஹாஃப்மன் நியூ யார்க் நகரத்தில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். அவரது ஓய்வுநேர ஆர்வங்கள், புல்லாங்குழல் வாசித்தல், நீச்சல்.