We use cookies to help you find the right information on mental health on our website. If you continue to use this site, you consent to our use of cookies.
டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

ஆரோக்கிய உள்ளம்

எதிலும் நல்லதைப் பார்ப்பது மனநலனை மேம்படுத்தும் - டாக்டர் எட்வர்ட் ஹாஃப்மன்

1919ல் ஜெரோம் கெர்ன் மற்றும் ஜார்ஜ் டிசில்வாவின் பிரபலமான அமெரிக்கப் பாடல் ஒன்று “Look for the Silver Lining” என்று தூண்டியது. அதாவது, எதிலும் நல்லதைப் பார்ப்பது. நியூயார்க்கில் பிறந்த, வெளிநாட்டிலிருந்து குடியேறிவர்களுடைய வெற்றிகரமான மகன்களான அவர்கள் இருவரும் வாழ்க்கை பற்றிய உற்சாகமான நன்னம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டு அதனை இசையின் வலியாக வலிமையாக வெளிப்படுத்தினர். வரலாற்றில் பயங்கரமான போர் அப்போதுதான் முடிந்து, முப்பது மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களை விட்டுச் சென்றிருந்தது. இருப்பினும் பாடலின் உற்சாக இசையும் வரிகளும் வாழ்வில் எப்போதும் வசந்தகாலத்தை எதிர்பார்க்கவும், மேகங்களுக்குப் பின் பொற்கதிர்களைத் தேடவும் அறிவுறுத்தின. குறைகூறுபவர்களால் குழந்தைபோன்ற அனுபவமில்லாப் பார்வை என்று விமர்சிக்கப்பட்டாலும், அது இன்றைக்கு நேர்விதமான மனநலவியலால் தீவிரமாக ஆதரிக்கப்படுக்கிறது. அறிவியல் ஆய்வுகளுடைய குறிப்பிடத்தக்க பகுதிகள், நம்முடைய விளக்கும் பாங்கு (நாம் நமக்கு நடக்கும் கெட்ட நிகழ்வுகளை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பது), நம்முடைய மன மற்றும் உடல்நலத்தில் பெரும் விளைவுகளைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கருத்தாக்கத்தை வலியுறுத்தும் ஒரு முன்னணி நபராக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் Dr மார்டின் செலிக்மன் உள்ளார். அவர் 1980களின் மத்தியில், அமெரிக்க பேஸ்பால் ஆட்டக்காரர்கள் மற்றும் மேலாளர்களுடைய விளக்கும் பாங்கை ஆய்வு செய்யத் தொடங்கினார். உள்ளூர்ச் செய்தித்தாள்களில் கூறப்படும் அவர்களுடைய பொது அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்வதன்மூலம், செலிக்மன் “நம்பிக்கையான அணிகள்” (அதாவது, தங்களுடைய எதிர்காலச் செயல்திறன் பற்றி நம்பிக்கையுடன் கூறுபவர்கள்) தங்களுடைய முந்தைய வெற்றி-தோல்வி சாதனைகளை விட நன்கு செயல்பட்டனர். அதற்கு நேர் எதிர் மாற்றமாக, ‘நம்பிக்கையற்ற அணிகள்’ (தங்களுடைய எதிர்காலச் செயல்திறன் பற்றித் தெளிவற்றுப் பேசியவர்கள்) உண்மையில் மோசமாகச் செயல்பட்டார்கள்.  

அதே காலகட்டத்தில், அமெரிக்காவுடைய தேசியக் கூடைப்பந்துக் கூட்டமைப்பு ஆய்வும் அதே முடிவுகளைத் தெரிவித்தது: தனிநபர்களுக்கும் அணிகளுக்கும் அடையாளம் கண்டு அளவிடக்கூடிய விளக்கும் பாங்கு இருந்தது. மேலும் செலிக்மனின் பார்வையில் இந்தப் பாங்குகள் முழுமையானத் தடகளத் திறனுக்கும் மேல் வெற்றியை முன்கணித்தது. எப்படி? ஏனெனில், களத்தில் வெற்றிக்காக விளையாடுவது நம்பிக்கையுடன் தொடர்புடையது. அதேநேரம் தோல்வி நம்பிக்கையின்மையுடன் தொடர்புடையது. அதாவது, நம்பிக்கை நிறைந்ததன்மையானது அடுத்தடுத்த தடகளச் செயல்திறனில் உண்மையான தாக்கம் கொண்டிருந்தது.

நிச்சயமாக, தொழில்முறை விளையாட்டில் வெற்றி என்பது மனிதச் சாதனை அல்லது நலத்தின் ஒரு சிறிய அம்சம் ஆகும். இதன்விளைவாக, செலிக்னம் மற்றும் அவருடைய சகாக்கள் விளக்கப் பாங்கை வாழ்வுடைய மிக முக்கியமான பகுதியான உடல் நலத்தில் ஆராய்ந்தனர். ஆளுமை மற்றும் சமூக மனநிலையின் ஆய்விதழில் தெரிவிக்கப்பட்ட மைல்கல் ஆய்வு அறிக்கையில் அவர்கள் நம்பிக்கையற்ற விளக்கப்பாங்கு கொண்டிருப்பது உடல் நோய்களுக்கான ஒரு முக்கிய இடர்க்காரணியாகும் என்பதைக் கண்டறிந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்பு – இரண்டாம் உலகப்போரின் போது - ஹார்வேர்டு பல்கலைக்கழக வகுப்புத்தோழர்களிடையே சேகரிக்கப்பட்ட ஆளுமை மற்றும் உடல் தரவைப் பயன்படுத்தி, செலிக்னம் குழுவினர் விளக்கப் பாங்கு மாணவர்களுடைய அடுத்தடுத்த உடல் நலத்தை முப்பதுகளிலிருந்து அறுபதுகள்வரை பாதிக்கிறது என்று வெளிப்படையாகத் தீர்மானிக்க முடிந்தது. அதாவது கல்லூரி மாணவர்களாக நம்பிக்கையற்று இருந்தவர்கள் பிரகாசமான நம்பிக்கை கொண்டிருந்தவர்களைவிடப் பிற்காலத்தில் மோசமான உடல்நலம் கொண்டிருந்தனர். ஆச்சரியப்படும் வகையில், விளைவு உடனடியாக வெளிப்படவில்லை – ஆனால் 40 வயதில் புள்ளிவிவர அளவில் முக்கியத்துவத்துடன் இருந்து 45 வயதில் உச்சம் அடைந்தது. பெரும்பாலும், இந்தக் கண்டுபிடிப்புகள் உடல்நலப் பிரச்னைகள் ஆரம்பகால வயதுகளைவிட மத்திய வயதில் தொடங்குகின்றன என்பதைப் பிரதிபலிக்கின்றன.

தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தை நம்பிக்கையற்றுப் பார்ப்பவர்கள் நம்பிக்கையுடன் பார்ப்பவர்களைவிடப் பெரும் உடல்நலப் பிரச்னைகளை வளர்த்துக் கொள்வது ஏன்? இதற்குச் சாத்தியமான பல விளக்கங்கள் உள்ளன. ஒருவேளை நம்பிக்கையற்றவர்கள் விதிமீது நம்பிக்கை கொண்டிருக்கலாம் – அதாவது, நல்ல உடல்நலத்தை உணவுமுறை, உடற்பயிற்சி, போதுமான தூக்கம் போன்றவற்றின் வழியாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல், புகைபிடித்தல், குப்பை உணவுகளை நுகர்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களில் ஈடுபட்டிருக்கலாம். கூடுதலாக, நம்பிக்கையற்றவர்கள் தொல்லையான வலி மற்றும் சுகக்குறைவிற்கு மருத்துவர்களைப் பார்ப்பது குறைவு, அவர்கள் நம்பிக்கையற்ற எண்ணம் கொண்டுள்ளதால்: அவர்கள் மருத்துவ உதவியை நாடாமல் தாமதிக்கிறார்கள், தவிர்க்கிறார்கள், அதனால் தங்களுடைய உடல்நலச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள்.     

அறிவியல் ஆய்வு, நம்முடைய விளக்கப் பாங்கு, வேலைச் சாதனைகள் மற்றும் ஆரம்பகாலப் பள்ளிக் கல்வித் திறன்களையும் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, இலண்டன் பல்கலைக்கழகத்தின் Dr பிலிப் கோர் மற்றும் Dr கோப்ரி கிரே, பிரிட்டன் காப்பீட்டு நிறுவன விற்பனை நபர்களின் நம்பிக்கையான விளக்கப் பாங்கு அவர்களுடைய பண விற்பனைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடு இரண்டிலும் பணி வெற்றியை முன் கணித்தது என்பதைக் கண்டறிந்தனர். அரிசோனா பல்கலைக்கழகத்தின் Dr பிளேக் ஆஷ்போர்த்தால் வழிநடத்தப்பட்ட பிந்தைய ஆய்வில், மருந்து நிறுவன மேலாளர்களுடைய வெற்றிகரமான பணி ஒப்பந்தங்கள் அவர்களுடைய விளக்கப் பாங்குடன் இணைக்கப்பட்டன. மேலும் கல்விக் களத்தில்,  ஆஸ்திரேலிய பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் Dr ஷெர்லி யேல்ஸ், நம்பிக்கை மிகுந்த ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிமாணவர்கள் தங்களுடைய நம்பிக்கையற்ற சக மாணவர்களை விடச் சிறந்த கணிதச் சாதனைகளைக் கொண்டிருந்தனர் என்று கண்டறிந்தார். எனவே நம்முடைய வாழ்வின் விளைவு ஆரம்பத்தில் தொடங்குவதாகத் தெரிகிறது!

சமகால ஆய்வாளர்கள் விளக்கப் பாங்கை மூன்று வெவ்வேறு அம்சங்களைக் கொண்டதாகப் பார்க்கின்றனர். இவை இவற்றுடன் தொடர்புடையன: (1) நீடித்தநிலை: அதாவது, ஒருவர் துயரமான சூழ்நிலை எப்போதும் உள்ளது என்று நினைக்கிறாரா அல்லது தற்காலிகமானது மட்டுமே என்று நினைக்கிறாரா? எடுத்துக்காட்டாக, வேலை இழப்பையோ விவாகரத்தையோ அனுபவிக்கும் ஒருவர் துயரம் ஒருபோதும் முடியாது என்று நினைக்கலாம். அதேநேரம் அவருடைய நண்பர் அதே போன்ற சூழ்நிலையைக் குறுகிய காலப் பிரச்னையாகப் பார்க்கலாம். (2) தொடர்ந்துவருதல்: அதாவது, மகிழ்ச்சியற்ற சூழ்நிலைகள் அனைத்தும் ஒன்று கூடிவருவதாக அல்லது தனித்த இயல்புடையதாக ஒருவர் காண்கிறாரா? ஒரு பாடத்தில் தோல்வியடையும் ஒரு கல்லூரி மாணவன் அனைத்திலும் நம்பிக்கை இழக்கலாம்,

ஒருவர் தன்னுடைய விளக்கப் பாங்கை மாற்றுவதற்குக் கற்க முடியுமா? நாம் பார்த்ததுபோல், துருதிருஷ்டவசமான சூழ்நிலையை நீண்டகாலம் நீடிப்பதாக, எல்லாப்புறமும் சூழ்ந்திருப்பதாக, சொந்தத் திறமையின்மை காரணமாக வந்தததாகப் பார்ப்பதை மனநல நிபுணர்கள் மோசமான வெளித்தோற்றம் என்று நம்புகிறார்கள். ஒருவரால் எவ்வளவு அதுபோன்ற சிந்தனையைக் குறைக்க முடியுமோ, அந்த அளவுக்கு அவருடைய மனநலம், உடல் நலம் இருக்கும். குறிப்பாக, இதனை எப்படிச் செய்யலாம்?

இதோ ஒரு பயனுள்ள குறிப்பு: ஒருவர் தனக்கு மோசமாக மாறிய ஒரு கடந்தகால அனுபவத்தை நினைவு கூரலாம்—ஒரு விடுமுறை, ஒரு கல்லூரிப் படிப்பு, ஒரு வேலை, ஒரு நட்பு அல்லது ஒரு காதல் உறவை எண்ணிக்கொள்ளலாம்—அதற்காக அவர்கள் தங்கள்மீது குற்றம் சுமத்தியிருக்க வேண்டும். அந்தச் சரிவை விவரித்தபிறகு, இப்போதைய சிந்தனையுடன் அவர்களுடைய வழக்கமான சுய உரையாடலுக்கு மாறலாம். முதலில், நிகழ்வு நடந்து முடிந்துவிட்டது; அது இனிமேல் இல்லை என்று உறுதியளிக்கலாம். இரண்டாவதாக, அது அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு பகுதியில்தான் நிகழ்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். நிறைவாக, பொறுப்பு கொண்ட ஒரு நபரை அல்லது சூழ்நிலையை அடையாளம் காண்பதன்மூலம் தவறு 100% தங்கள்மீது இல்லை என்று தீர்மானிக்கலாம், மற்றொரு கல்வித் துறைக்கு மாற வேண்டுமா இல்லையா என்பதைக்கூட மதிப்பிடலாம்.

(3) தனித்துவப்படுத்தல்: அதாவது, அவர் ஒரு மோசமான நிகழ்வுக்குத் தன்னை முழுமையாகக் குற்றம் சொல்கிறாரா, அல்லது அந்தக் குற்றத்தைப் பிறர்மீதும் பரப்புகிறாரா? அவர் சந்தேகிப்பதுபோல், ஏதாவது தவறாக நடக்கும்போது தன்னைத்தானே திட்டிக் கொள்வதில் ஈடுபடுவது மனநல அடிப்படையில் ஆரோக்கியமானது இல்லை. சிற்பி தன்னுடைய திறமையான மாணவன் மால்வினா ஹாப்மனுக்குக் (இந்த கட்டுரையாளருடன் எந்த தொடர்பும் இல்லை) கற்பிக்கும்போது கூறியதுபோல், “நீ அனுபவத்தைப் பயனுள்ளவகையில் பயன்படுத்தினால் எதுவும் நேர விரயம் இல்லை.”

இப்போது, அதை விட்டுவிடலாம். இதன்மூலம் அவர்கள் இன்னும் சிறப்பாக உணர்வார்கள்.   

Drஎட்வார்டு ஹாப்மன் நியூயார்க்கின் யேசுவா பல்கலைக்கழகத்தின் கூடுதல் இணை மனநலவியல் பேராசிரியர் ஆவார்.தனிப்பட்டமுறையில் பணியாற்றும் உரிமம் பெற்ற மருத்துவ மனநல நிபுணராகிய இவர்,மனநலவியல், தொடர்புடைய துறைகளில்25புத்தகங்களுக்குமேல் ஆசிரியராக/தொகுப்பாளராக இருந்துள்ளார்.சமீபத்தில்Dr ஹாப்மன்Dr வில்லியம் காம்படனுடன் நேர்ச்சிந்தனை உளவியல்: மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அறிவியல் என்ற நூலின் சக ஆசிரியராகச் செயலாற்றினார்,இந்திய நேர்ச்சிந்தனை ஆய்விதழ் மற்றும் மனித உளவியல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றுகிறார்.நீங்கள் அவருக்கு columns@whiteswanfoundation.org என்ற முகவரியில் எழுதலாம்.