முக்கியக் கட்டுரைகள்

காயங்களை ஆற்றும் இசை

அன்றுமுதல் இன்றுவரை, இசையும் தாளமும் நம் வாழ்வில் இணைந்துள்ளன. உலகக் கலாசாரங்கள் அனைத்திலும் இசைக்கு முக்கிய இடமுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள், இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன: குழந்தைப் பிறப்பு, திருமணம், திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சி, மற்ற சமூக, கலாசார நிகழ்வுகள்... அனைத்திலும். அதேபோல், இசையை ஆரோக்கியத்துக்காக, சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதும் பலகாலமாக வழக்கத்தில் உள்ளது. இசைச் சிகிச்சை என்றால் என்ன? இசைச் சிகிச்சை என்பது, ஒருவருடைய உளவியல் தேவைகளைப் ...

மேலும் வாசிக்க

வீடியோக்கள்

img

கவனித்துக்கொள்பவரின் உலகம்

புகைப்படக் கதை

மானஸ் பட்டாச்சார்யா

ஸ்கிஜோஃப்ரெனியா உள்ள மகனைக் கவனித்துக்கொள்பவர்

" நான் எதனாலும் அதிர்ச்சியடைவதில்லை, என்ன நடந்தாலும் சரி, அமைதியாக அதைக் கவனிப்பேன், என்னுடைய கட்டுப்பாட்டில் என்ன உள்ளதோ அதைச் செய்யத் தொடங்குவேன். என் மகனுக்கு இப்போது வயது 45. சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்னால், அவனுக்கு ஸ்கிஜோஃப்ரெனியா இருப்பது கண்டறியப்பட்டது. என் மனைவி இறந்ததும், நான்மட்டுமே அவனைக் கவனித்துக்கொள்கிறேன். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறேன், கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் பளுதூக்கும் பயிற்சி. என்னை நானே நன்றாகக் கவனித்துக்கொள்கிறேன், பதற்றமில்லாமல் வாழ்கிறேன், அப்போதுதான் என்னால் என் மகனை நன்கு கவனித்துக்கொள்ள இயலும்.”

க்ளோரி ஜோசஃப்

மனநலச் செவிலியர்

"சிறுவயதிலிருந்தே, நான் ஒரு செவிலியராகப் பணிபுரிய விரும்பினேன். ஆனால், மனநலத்துறையில் செவிலியராகப் பணியாற்றுவதுபற்றி நான் சிந்தித்ததே கிடையாது. நான் NIMHANSக்கு வந்தபோது, இங்குள்ள நோயாளிகளையும் அவர்கள் சந்திக்கும் அதிர்ச்சியையும் விரக்தியையும் கண்டேன், கொஞ்சம்கொஞ்சமாக அவர்களைப் புரிந்துகொள்ளத்தொடங்கினேன். தீவிர மனநலப் பிரச்னை கொண்ட ஒருவர் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணமாட்டார்; மனச்சோர்வு கொண்ட ஒருவர் “நான் ஏன் வாழவேண்டும்?”, “நான் வாழ விரும்பவில்லை” என்றெல்லாம் நினைக்கலாம். அவர்கள் எதிர்பார்ப்பது, யாரேனும் அவர்களிடம் பேசவேண்டும், அவர்கள்மீது அக்கறை காட்டவேண்டும், அவ்வளவுதான்."

டாக்டர் என் ஜனார்த்தனா

மனநலச் சமூகப் பணியாளர்

ஒருவருக்கு மனநலப் பிரச்னை வந்துவிட்டது என்றால், அவருடைய குடும்பத்தினரும் சமூகமும் அவரைப் பாரமாக நினைக்கின்றன. ஒரு மனநலச் சமூகப் பணியாளர் என்றமுறையில், நான் அவர்களோடு பணிபுரிகிறேன், அவர்களைச் சுதந்தரமாகச் செயல்படத் தூண்டுகிறேன், அவர்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன். அவர்களைச் சந்திப்பதன்மூலம், என் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் கிடைக்கிறது. அவர்களுடைய குடும்பத்தினர் என் பணியை அங்கீகரிக்கும்போது, என்னுடன் பேசுகையில் அவர்கள் பத்திரமாக உணரும்போது எனக்குப் பெருமையாக உள்ளது. பல நேரங்களில், அவர்கள் பெரிய தீர்மானங்களை எடுக்குமுன் என்னுடைய கருத்துகளைக் கேட்கிறார்கள்.”