ADHD என்றால் என்ன?
தான்யாவுக்கு பத்து வயது. அவள் மிகவும் சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடும் குழந்தை. தான்யாவின் ஆசிரியர்களிடம் அவளைப்பற்றிக் கேட்டால் ’அவள் ஓரிடத்தில் உட்காரவே மாட்டாள், பிறரைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பாள், வகுப்பில் அவள் பாடங்களைக் கவனிப்பது கிடையாது’ என்பார்கள்.
விளையாட்டுகளிலும் பிற வெளி நடவடிக்கைகளிலும் தான்யா மிகவும் சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வாள். ஆனால் விளையாடத்தொடங்கிவிட்டால் எப்போது நிறுத்துவது என்பதுமட்டும் அவளுக்கு தெரியாது. தான்யாவின் தோழர்களுக்கு அவளோடு விளையாடப் பிடிக்கும், ஆனால் அதேசமயம், அவள் எல்லார்மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவது, தன்னுடைய விளையாட்டுகளுக்குத் தானே புதிய விதிமுறைகளை உண்டாக்குவது போன்றவை அவர்களுக்குப் பிடிக்காது.
வீட்டில் தான்யாவின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம், அதனால், அவளுடைய சகோதர சகோதரிகள் எரிச்சலடைவார்கள். தான் இப்படி நடந்துகொள்வதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று தான்யாவுக்குத் தெரியாது, அவள் தான் நினைத்தபடி எதையும் செய்துகொண்டிருந்தாள்.
இது ஒரு கற்பனையான விவரிப்பு. இந்த குறைபாடு நிஜவாழ்க்கையில் எப்படி இருக்கும் என்று புரியவைப்பதற்காக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
தான்யாவைப்போல் நடந்துகொள்கிற குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கலாம் அல்லது அவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். இப்படி நடந்துகொள்ளும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) என்கிற பிரச்னை இருக்கலாம்.
ADHD என்பது நரம்பு மண்டல வளர்ச்சி தொடர்பான ஒரு குறைபாடு. இது ஒருவருடைய கற்றுக்கொள்ளுதல், கவனம் மற்றும் நடந்துகொள்ளும்விதத்தைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு கொண்டவர்கள் தொடர்ந்து அமைதியின்றிக் காணப்படுவார்கள், நினைத்ததை உடனே செய்துவிடுவார்கள், இவர்களுடைய கவனம் அங்கும் இங்கும் சிதறிக்கொண்டே இருக்கும், மிகையான செயல்களில் ஈடுபடுவார்கள். ADHD பிரச்னை கொண்ட குழந்தைகள் பள்ளியிலும் வீட்டிலும் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படக்கூடும். ADHD என்பது குழந்தைப் பருவத்தில் காணப்படும் மிகப் பொதுவான குறைபாடுகளில் ஒன்று, சில குழந்தைகளில் இந்தக் குறைபாடு தொடர்ந்துவரக்கூடும், அவர்களுடைய வளர் இளம் பருவத்திலும், அவர்கள் பெரியவர்களாக ஆனபிறகும்கூடத் தொடரக்கூடும்.
எது ADHD அல்ல?
குழந்தைகள் நினைத்ததை உடனே செய்வது, மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பது, பேசிக்கொண்டே இருப்பது, விளையாடும்போது நண்பர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவது, படிக்கும்போது எளிதில் கவனம் சிதறுவது போன்றவை இயல்புதான். இந்தப் பழக்க வழக்கங்களில் ஈடுபடும் ஒரு குழந்தை தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும் படிப்பு தொடர்பான விஷயங்களையும் இயல்பாகக் கையாண்டால் அதை எண்ணி நாம் கவலைப்படவேண்டியதில்லை. அது ADHD அல்ல.
குழந்தைகளுடைய கற்கும் திறனைப் பாதிக்கக்கூடிய இன்னொரு நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்னை, கற்றல் குறைபாடு. இது குழந்தைகள் படித்தல், எழுதுதல், பேசுதல், கவனித்தல் மற்றும் கணக்குப் போடுதல் ஆகிய திறன்களைப் பாதிக்கும். கற்றல் குறைபாட்டை ADHDயுடன் இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது.
ADHDயின் வகைகள்
ADHDயில் இரண்டு முக்கிய வகைகள் இருக்கின்றன. இரண்டு முக்கிய வகைகளையும் இணைத்து மூன்றாவது வகையொன்றும் காணப்படுகிறது.
கற்றல் குறைபாடு மற்றும் ADHD இடையே உள்ள ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்
ADHDயும் கற்றல் குறைபாடும் ஒன்றல்ல. ஆனால், ADHD ஒருவருடைய கற்றலைப் பாதிக்கக்கூடும். 15-20 சதவிகிதக் குழந்தைகளிடம் ADHD, கற்றல் குறைபாடு இரண்டும் ஒன்றாகக் காணப்படுவதை நிபுணர்கள் கவனித்துள்ளனர். ஆகவே, இந்த இரண்டு குறைபாடுகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகளைப் பெற்றோர் புரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து நீங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்கும்போது, குழந்தையிடம் காணப்படும் அறிகுறிகளை, குழந்தையின் மருத்துவ வரலாற்றை அவர் முழுவதுமாக மதிப்பிடுவார், குறிப்பிட்ட சில பரிசோதனைகளை நடத்தி, இதனுடன் தொடர்புடைய பிற நிலைகள் அந்தக் குழந்தைக்கு இருக்கின்றனவா என்பதை கண்டறிவார்.
ADHD | கற்றல் குறைபாடு (LD) |
---|---|
ஒற்றுமைகள் | |
விவரங்கள்/தூண்டுதல்களை மூளை எப்படிப் பெற்றுக்கொள்கிறது, எப்படிச் செயல்படுத்துகிறது மற்றும் அவற்றுக்கு எப்படி எதிர்வினை செய்கிறது என்பதைப் பாதிக்கும் நரம்பு சார்ந்த ஒரு நிலை | விவரங்கள்/தூண்டுதல்களை மூளை எப்படிப் பெற்றுக்கொள்கிறது, எப்படிச் செயல்படுத்துகிறது மற்றும் அவற்றுக்கு எப்படி எதிர்வினை செய்கிறது என்பதைப் பாதிக்கும் நரம்பு சார்ந்த ஒரு நிலை |
வேற்றுமைகள் | |
இது ஒரு தீவிரமான, நடந்துகொள்ளுதல் தொடர்பான குறைபாடு, இதன் தன்மைகள்: விடாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது, அனிச்சையாகச் செயல்படுவது மற்றும் கவனமின்றி இருப்பது. | ஒருவர் விவரங்களைப் பெறுவது, நினைவில் வைத்துக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது ஆகியவற்றைப் பாதிக்கும் குறைபாடுகளின் தொகுப்பு இது, இவற்றின்மூலம் அவருடைய கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது. |
அடிப்படைச் செயல்பாடுகளான பொருள்களை ஒழங்காக வைத்துக்கொள்ளுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல், கவனம் செலுத்துதல், விவரங்களைக் கூர்ந்து கவனித்தல், ஒரு வேலையைப் பூர்த்தி செய்வதற்காகத் தரப்படும் நெறிமுறைகள் அல்லது உத்தரவுகளைப் பின்பற்றுதல் போன்றவற்றில் பிரச்னைகள், கட்டுப்படுத்த இயலாதபடி நடந்துகொள்ளுதல். | கவனித்தல், படித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல், கணக்கு போன்றவற்றில் பிரச்னைகள், இதனால் டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராஃபியா, டிஸ்ப்ராக்ஸியா, டிஸ்கால்குலியா போன்ற குறைபாடுகள் உண்டாகலாம். |
பொதுவாக மருந்துகள் மற்றும் சிகிச்சைமூலம் குணப்படுத்தப்படுகிறது. இதற்குத் தலையீட்டுத் திட்டங்களும் மாற்றுக் கல்வியும் தேவைப்படலாம். | பழக்க வழக்கச் சிகிச்சை, கல்விக்கான மாற்று முறைகள் (உதாரணமாக மாற்றுக்கல்வி, தனித்துவமான கல்வித்திட்டம் (IEP) மற்றும் தலையீட்டுத் திட்டங்கள்) போன்றவற்றால் குணப்படுத்தப்படுகிறது. |
ADHD எதனால் வருகிறது?
ADHD குறிப்பாக எந்தக் காரணங்களால் வருகிறது என்பதை நிபுணர்களால் கண்டறிய இயலவில்லை. அதேசமயம், செய்திகளைக் கடத்திச்செல்லும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (டோபமைன் மற்றும் நார்எபிநெஃப்ரின்) அளவு குறைவதன்மூலம் இது ஏற்படலாம் என்பதை அவர்கள் கவனித்துள்ளர்கள். இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் கவனம், ஒழங்குபடுத்துதல் மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
ADHDயை உருவாக்கக்கூடிய சில காரணிகள்:
ADHDயின் அறிகுறிகள் என்ன?
பள்ளியில் ஒரு குழந்தை நடந்துகொள்ளும் விதம் மற்றும் செயல்திறனில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், பெற்றோரும் ஆசிரியர்களும்தான் அதை முதலில் கவனிக்கிறார்கள்.
ஒரு குழந்தைக்கு ADHD உள்ளது என்று தீர்மானிக்கவேண்டுமானால், அதற்கு ஏழு வயது ஆவதற்கு முன்பே ADHDயின் அறிகுறிகள் இருந்திருக்கவேண்டும். பள்ளி, வீடு மற்றும் சமூகச்சூழல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் ஏழுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெளிவாகத் தெரியவேண்டும். இந்த அறிகுறிகள் குழந்தையின் கற்றுக்கொள்ளும் பழக்கம், அதன் நடவடிக்கைகள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தி, அதன் தினசரி வாழ்க்கையைப் பாதித்தால்மட்டுமே அதனை ADHD என்று கருதலாம்.
குறிப்பு: இந்தக் குழந்தைகள் பெரியவர்களாகும்போது பெரும்பாலான அறிகுறிகள் நின்றுவிடும். அதேசமயம் அவர்கள் எதையும் சட்டென்று செய்வது மற்றும் கவனமில்லாமல் இருப்பது போன்றவை தொடரலாம், அதன்மூலம் அவர்களுடைய சமூக மற்றும் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
முக்கியமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ADHD பிரச்னை உள்ள ஒரு குழந்தைக்குக் கல்வியில் பிரச்னைகள் இருந்தாலும், அதற்குப் பிடித்த இன்னொரு செயல்பாட்டில் அந்தக் குழந்தை சிறந்து விளங்கலாம்.
கவனமின்மையின் அறிகுறிகள் | மிகைச்செயல்பாடு/எதையும் உடனுக்குடன் செய்தலின் அறிகுறிகள் |
கற்றுத்தரப்படும் பாடங்களைச் சரியாகக் கவனிப்பதில்லை, நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சிரமப்படுகிறார் | அமைதியின்றி இருக்கிறார், கைகள், கால்களை நோண்டிக்கொண்டே இருக்கிறார்; சில நிமிடங்களுக்குமேல் ஒரே இடத்தில் உட்கார மறுக்கிறார் |
படிக்கும்போது அல்லது எழுதும்போது அல்லது ஸ்பெல்லிங் சொல்லும்போது கவனக்குறைவால் பிழைகளைச் செய்கிறார் | வகுப்பறையில் அமர மறுக்கிறார், எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி அல்லது ஓடியபடி வகுப்பறையில் உள்ள எல்லாரையும் தொந்தரவு செய்யப்பார்க்கிறார். |
பொருள்களை ஒழங்காக வைத்தல் மற்றும் வரிசைப்படியிலான நடவடிக்கைகளைச் செய்தல் (புத்தகங்களை அடுக்கி வைத்தல், வீட்டுப்பாடம் செய்தல்) போன்றவற்றில் சிரமம் | நடப்பதற்குப் பதிலாக அடிக்கடி ஓடிக்கொண்டே இருக்கிறார் மேலும் கீழும் படியேறுகிறார், சாலையில் விதிமுறைகளை மதிப்பதில்லை இதனால் பெற்றோர் பதற்றமடைகிறார்கள், விபத்தோ காயமோ ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுகிறார்கள். |
பள்ளி வேலை அல்லது வீட்டு வேலை போன்ற வழக்கமான வேலைகளை விரும்புவதில்லை. வழக்கமான வேலைகள் இவருக்கு எளிதில் சலித்துவிடுகின்றன. | நண்பர்களுடன் சண்டை போடுகிறார், நியாயப்படி விளையாடுவதில்லை, பகிர்ந்துகொள்ள மறுக்கிறார் அல்லது தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். |
சத்தம், அசைவு போன்ற பல வெளிக்காரணிகளால் எளிதில் கவனம் சிதறுகிறார். | அதீதமாகப் பேசுகிறார், அடுத்தவர் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுகிறார், பொறுமையின்றி இருக்கிறார், அடுத்தவர் பேசி முடிக்கும் முன்னால் பதில் சொல்கிறார். |
பொருள்களை கவனித்துக்கொள்ள இயலுவதில்லை (எழுது பொருள்கள், வேலைகள், பொம்மைகள்). | தயக்கமின்றி உணர்வுகளை வெளிப்படுத்துகிறார், உணர்வு வெளிப்பாடுகளை இவரால் கட்டுப்படுத்த இயலுவதில்லை. |
தரப்பட்ட நெறிமுறைகளையும் பிற வழக்கமான தினசரி வேலைகளையும் (பல் தேய்ப்பது, ஷூ அணிவது, கைகளை கழுவுவது) எளிதில் மறந்துவிடுகிறார். | பின் விளைவுகளைப்பற்றி யோசிக்காமல் உடனே ஒரு வேலையைச் செய்துவிடுகிறார். |
ADHD எப்படிக் கண்டறியப்படுகிறது?
ADHDக்கென்று தனியாக ஒரு மருத்துவ, உடல் சார்ந்த அல்லது மரபணுப் பரிசோதனை எதுவும் இல்லை.
பெற்றோர் தங்கள் குழந்தையின் மருத்துவர் அல்லது ஒரு மனநல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்த நிபுணர்கள் பலவிதமான மதிப்பீடுகளை நடத்துவார்கள். உதாரணமாக, ADHD அறிகுறி செக்லிஸ்ட்டுகள் மற்றும் தரநிலைப்படுத்தப்பட்ட பழகுமுறை மதிப்பீட்டு அட்டவணைகள். மேற்கண்ட அறிகுறிகளைத் தூண்டக்கூடிய மற்ற குறைபாடுகள் அல்லது உடல் சார்ந்த நோய்கள் (உதாரணமாக: அதிகக் காய்ச்சல், கற்றல் குறைபாடு அல்லது வீட்டில் பிரச்னைகள்) அந்தக் குழந்தைக்கு இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வதற்காக, அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளையும் நடத்துவார்கள்.
சில நேரங்களில், பதற்றக் குறைபாடு, டிஸ்லெக்சியா, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு அல்லது ஆட்டிசம் போன்றவை ADHDயுடன் இருக்கக்கூடும். ஆகவே, பிற நிலைகள் எவையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கவனமான மற்றும் முழுமையான மருத்துவ மற்றும் கல்வி மதிப்பீடு அவசியம். வேறு ஏதாவது பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குறைபாடுகளை மதிப்பிட்டு ADHD சிகிச்சையோடு சேர்த்து அவற்றுக்கும் சிகிச்சை வழங்கவேண்டும்.
குறிப்பு: கவனக்குறைவு அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளைவிட, மிகைச்செயல்பாட்டு அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை சிபாரிசு செய்யப்படும் சாத்தியங்கள் அதிகம்.
ADHDக்குச் சிகிச்சை பெறுதல்
ADHDக்கான சிகிச்சையில், பிணிநீக்கல், ஆலோசனை, பழக்க வழக்க மற்றும் மாற்றுக் கல்விப் பயிற்சி ஆகியவை இடம்பெறலாம். அறிகுறிகளின் தீவிரத்தன்மை, குழந்தையின் ஆளுமை மற்றும் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். பெரும்பாலான குழந்தைகள் இந்த நிலையைச் சமாளித்து எல்லாரையும்போல் வாழத் தொடங்கிவிடுகின்றார்கள்.
குறிப்பு: ADHD பிரச்னை உள்ள ஒரு குழந்தை அந்த நிலைமையைச் சமாளிப்பதற்குப் பலரும் (பெற்றோர், ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள், சிகிச்சை அளிப்போர்) இணைந்து பணியாற்றவேண்டியிருக்கும்.
ADHD உள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்ளுதல்
இந்தியாவில் நல்ல மதிப்பெண் வாங்குவதுதான் மிகவும் முக்கியமான வெற்றியாகக் கருதப்படுவதை நாம் அறிவோம். ADHD பிரச்னை உள்ள குழந்தைகளுடைய பெற்றோர், தங்களுடைய குழந்தை கல்வி ரீதியில் பாதிக்கப்பட்டுவிடுமோ, அதன் வெற்றி குறைந்துவிடுமோ என்று கவலைப்படுவார்கள். அதேசமயம் ADHDபற்றி அவர்கள் மேலும் தெரிந்துகொள்ளும்போது, இந்தக் குறைபாடு அவர்களுடைய குழந்தையை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது, தாங்கள் இந்தக் குறைபாட்டை எப்படிக் கையாளலாம் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.
ADHDயைக் கையாள்வதில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
பின்வரும் நெறிமுறைகள் அவர்களுக்கு உதவும்:
பெரியவர்களில் ADHD
ADHD ஒரு தீவிரப் பிரச்னையாக இருப்பதை நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள், ADHD பிரச்னை கொண்ட குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்குப் பேர் பெரியவர்கள் ஆனபிறகும் இந்த அறிகுறிகள் தொடர்கின்றன. இதனால், அவர்கள் வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும் ஒழங்கற்று இருக்கலாம், கொடுக்கப்படும் வேலைகளைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய இயலாமல் சிரமப்படலாம், நெறிமுறைகளைப் பின்பற்றும்போது பொறுமையின்றி, அமைதியின்றிக் காணப்படலாம், வழக்கமான, ஒரே மாதிரியான வேலையைச் செய்வதில் சலிப்பு ஏற்படலாம், உறவுகளைக் கையாள்வதில் சிரமம் இருக்கலாம், இதுபோன்ற மற்ற பிரச்னைகளும் இவர்களிடம் காணப்படலாம்.
பெரியவர்களிடம் ADHD வரும்போது அது அவ்வளவாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை, காரணம், பெரியவர்களுடைய நடவடிக்கைகளை அதிகப் பேர் மதிப்பிடுவதில்லை. அது ஒரு பெரிய பிரச்னையாகக் கருதப்படுவதில்லை. சமூகப் பதற்றம், சமூக பயம், மனநிலைப் பிரச்னைகள், போதைப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பிரச்னைகள் ஒருவருக்கு வரும்போது, அவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்ன என்று பலரும் யோசிப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் ADHD நீண்டநாள் தொடர்கிறது, அதை யாரும் அடையாளம் கண்டு, சிகிச்சை அளிப்பதில்லை.
குறிப்பு: சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாக ADHDயின் அறிகுறிகள் அதிகமாகக்கூடும்.
பெரியவர்களில் ADHD அறிகுறிகள்
ADHD கொண்ட பெரியவர்களுக்கு பின்வரும் பிரச்னைகள் இருக்கலாம்:
பெரியவர்களுக்கு வரும் ADHDயைக் கண்டறிதல், சிகிச்சை தருதல்
பெரியவர்களில் ADHDயின் அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை. இதனால் மருத்துவர்கள் இது ADHDதான் என்று கண்டறிவது சிரமம். பெண்கள் இந்தப் பிரச்னையை பதற்றம் என்றோ மன நிலைப் பிரச்னைகள் என்றோ சொல்லக்கூடும், உண்மையில் அவற்றுக்குக் கீழே இருப்பது ADHDதான் என்பதை மருத்துவர்கள் அடையாளம் காணாமல் இருந்துவிடலாம்.
இதனால், சம்பந்தப்பட்ட நபருடைய குழந்தைப் பருவத்தில் தொடங்கி, அவருடைய வாழ்க்கைப் பதிவுகளை மனநல நிபுணர் அலசுகிறார், முந்தைய மருத்துவ வரலாற்றைப் பார்க்கிறார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசுகிறார், இதன்மூலம் ஒரு முழுமையான மதிப்பீட்டை நிகழ்த்துகிறார். ADHDயை மறைக்கக்கூடிய மற்ற உடல் அல்லது மனநலப் பிரச்னைகள் அவருக்கு இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்யப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்தச் சிகிச்சையின்போது, ஒருவருடைய இப்போதைய நிலை/ பிரச்னைகள்மீது மனநல நிபுணர் அதிகக் கவனம் செலுத்தமாட்டார். அதற்கு பதிலாக அவருடைய ஆளுமையை(பலங்கள், திறன்கள் மற்றும் தகுதிகள்), நடந்துகொள்ளும்விதத்தைக் கவனித்து அதிலுள்ள நேர்விதமான அம்சங்களில்தான் கவனம் செலுத்துவார்.
குறிப்பு: ADHDக்கு எந்த ஒரு சிகிச்சையையோ மருந்தையோ சிபாரிசு செய்வதற்குமுன்னால், பாதிக்கப்பட்டுள்ளவருடைய மருத்துவ வரலாற்றை அலசுவது மிகவும் முக்கியம்.
ADHDயைச் சமாளித்தல்
ADHD பிரச்னை கொண்டவர்களால் நன்றாகச் செயல்பட இயலும், ஆனால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் அதிக ஆற்றலையும் முயற்சியையும் வழங்கவேண்டியிருக்கும். இது அவர்களுக்கு எரிச்சல் ஊட்டலாம். ADHDயைப் புரிந்துகொள்வதன்மூலம் உங்களால் இந்த மாற்றத்தைச் சமாளிக்க இயலும், இதனைச் சமாளிப்பதற்கான நுட்பங்களைக் கற்றுக்கொண்டு இயல்பாக வாழ இயலும்.
சிறுவயதிலிருந்தே ADHDயைச் சமாளித்து வருகிறவர்கள், அது ஒரு பொதுவான விஷயம்தான் என்கிறார்கள். அதைப் பலவீனமாகவோ புத்திக்குறைபாடாகவோ இவர்கள் குறிப்பிடுவதில்லை. உண்மையில், ஒருவர் தன்னுடைய பலங்களையும் திறமைகளையும் கண்டறிய ADHD உதவுகிறது. இந்தப் பிரச்னை வந்தவர்கள் தங்களுடைய நிலையைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், இந்த நேர்விதமான பண்புகளில் கவனம் செலுத்தி, தங்களால் எந்தெந்த இலக்குகளை எட்ட முடியும் என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை வெல்லலாம். ஒருவர் பெரியவர் ஆன பிறகும் ADHD தொடரப்போகிறது என்பதால், நம்பிக்கை இழக்காமல் அதை புரிந்துகொண்டு அதைச் சமாளிப்பதுதான் சிறந்தது.
ADHDக்குச் சிகிச்சை வழங்கும் நிபுணர்கள்
ADHD பிரச்னை கொண்ட குழந்தைகளுடைய நிலைமையின் தீவிரத்தை பொறுத்து, அவர்கள் பின்வரும் நிபுணர்களில் சிலரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டியிருக்கும்: