வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையைப்பற்றி

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த், மன நலத் துறையில் அறிவால் வழிநடத்தப்படும் தீர்வுகளை வழங்குகிற லாப நோக்கற்ற ஓர் அமைப்பாகும். மன நலப் பிரச்னை கொண்டோர், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் மற்றும் சமூகங்களுக்கு நன்கு ஆராயப்பட்ட தகவல்களை நாங்கள் வழங்குகிறோம், மன நலப் பிரச்னைகளைக் கையாள்வது எப்படி என்பதுபற்றிய தகவலறிந்த தீர்மானங்களை எடுக்க இவை அவர்களுக்கு உதவும்.

வொய்ட் ஸ்வான் அறக்கட்டளைக் குழு, உலகெங்குமுள்ள மன நல வல்லுனர்கள், நேரடி அனுபவங்களைக் கொண்ட நபர்கள், ஒரேமாதிரியான மனம் கொண்ட தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறது, மன நலன் பற்றிய மிகச்சிறந்த தரம் கொண்ட அறிவை வழங்குகிறது.

எங்கள் மேற்கொண்டபணி

“மன நலம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைபற்றிய அறிவுச் சேவைகளை வழங்குதல்”

எங்கள் பணி

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த்யிலுள்ள நாங்கள், முதன்மையாக மன நல விழிப்புணர்வுத் துறையில் பணியாற்றுகிறோம்; இங்கு நாங்கள் நன்கு ஆராயப்பட்ட, பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட, பல சமூகங்களைச் சென்று சேரக்கூடிய படைப்புகளில் கவனம் செலுத்துகிறோம். எங்கள் பணி மற்றும் எங்கள் இதழாசிரியர் செயல்முறையைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள, இந்த வீடியோவைப் பாருங்கள்:

மனங்களை நகர்த்துதல்

Moving Minds

மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மன நலன்பற்றிய ஒரு புரிந்துகொள்ளலை அமைக்கும் நோக்கத்தைக் கொண்ட நிகழ்வுத் தொடர் இது. சமூகங்களாக மக்கள் வாழ்கிற பொது மற்றும் தனி இடங்கள் இரண்டிலும் நிகழும் உரையாடல்களில் மன நலனைக் கொண்டுவருவதற்காக இந்தத் தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையக் கருத்தரங்குகளாக, கதைசொல்லல்களாக, குழு உரையாடல்களாக, நாடக மற்றும் இசை நிகழ்ச்சிகளாக, இன்னும் பலவிதமான வடிவங்களில் ‘மனங்களை நகர்த்துதல்' நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பணியிட மன நலத் திட்டங்கள்

மன நலனுக்கு இதமான பணிச் சூழல்களை உருவக்குவதற்குப் பணியிடங்களுக்கு உதவுவதற்காக, அறிவால் வழிநடத்தப்படுகிற, பங்களிப்பைக் கொண்ட, ஊழியர்களைப் பின்னணியாகக் கொண்ட முன்னெடுப்புகளை நாங்கள் உருவாக்குகிறோம், நடத்துகிறோம். மன நலச் சேவைகளுக்கான அணுகலின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதே நேரத்தில், பணியிடங்கள் திறந்த மனப்பான்மை மற்றும் அனைவரையும் சேர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றின் மொழியைப் பேசினால், ஊழியர்கள் இந்தச் சேவைகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
நாங்கள் ஆலோசனை, மறுவாழ்வு அல்லது நேரடி மன நலச் சேவைகளை வழங்குவதில்லை.

எங்களோடு பணிபுரிவோர்

National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS)

Quintype

Twitter India

எங்கள் தொடக்கம்

2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி, பெங்களூரில் உள்ள தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்விக் கழகத்தின் (NIMHANS) கழக நாள் விழா நடைபெற்றது. மைண்ட் ட்ரீ லிமிடெட் தலைவர் சுப்ரதோ பாக்சி இதில் முதன்மைச்சொற்பொழிவை வழங்கினார்.

அப்போது அவர் இந்தியாவில் மன நலத்துறை சந்திக்கும் பல்வேறு சவால்களைச் சமாளிக்கவேண்டுமானால், இத்துறைபற்றிய அறிவைப் பெருக்குவது முக்கியம் என வலியுறுத்தினார். மனநல நிபுணர்களும் பிறரும் இதுபற்றிய சரியான விவரங்களைப் பரப்பவேண்டும், அப்போதுதான் பொதுமக்கள் இதைப்பற்றித் தெரிந்துகொண்டு தீர்மானங்களை எடுக்க இயலும் என்று அவர் சொன்னார். இதைத்தொடர்ந்து, சுப்ரதோவின் தலைமையில் இதுகுறித்த ஆய்வொன்றை நிகழ்த்தினார் மனோஜ் சந்திரன். இதற்கு அவர் இந்திய மன நலப் பிரிவையும், சில வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நெறிமுறைகளையும் கருத்தில் கொண்டார். தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கல்விக் கழகத்தின் (NIMHANS) இயக்குநர்/ துணைவேந்தர் டாக்டர் பி. சதீஷ்சந்திரா, அக்கழகத்தின் பல உளவியல் நிபுணர்களின் பேராதரவுடன், இந்தியாமுழுவதும் இன்னும் பல மன நல நிபுணர்கள், இந்தத் துறையில் பணிபுரிந்துவரும் சமூகத் தொழிலதிபர்களுடைய கருத்துகளைச் சிந்தித்து, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த்க்கான எங்கள் இலக்கை நாங்கள் தீர்மானித்தோம். மார்ச் 25, 2014 அன்று, நிறுவனச் சட்டத்தின் 25வது பிரிவின்படி லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக இது உருவாக்கப்பட்டது.

வொய்ட் ஸ்வான் அறக்கட்டளையின் தொடக்கத்துக்கு வழிவகுத்த தனிப்பட்ட கதையை சுப்ரதோ பாக்சி பகிர்ந்துகொள்கிறார், அதைப் பாருங்கள்:

தி வொய்ட் ஸ்வான், எங்களுடைய சின்னம்

எங்களுடைய காட்சிபூர்வமான அடையாளத்தை வடிவமைத்தவர், விருதுபெற்ற வடிவமைப்பாளர் சுஜாதா கேசவன் (Ray+Keshavan | Brand Union). மற்ற அன்னங்கள் இடப்பக்கமிருந்து வலப்பக்கம் நீந்தும்போது, இந்த அன்னம்மட்டும் வலப்பக்கமிருந்து இடப்பக்கம் நீந்துகிறது, மந்தை மனோபாவத்தை மீறி அது செல்கிறது. இங்கே அன்னம் ஒரு வடிவம் அல்ல, அது ஓர் எதிர்வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இங்கே எதுவுமே இல்லை: வடிவம் இல்லை, நிறம் இல்லை. வெறும் வெள்ளைக் காலியிடம்தான் இருக்கிறது. இங்கே நாம் ஓர் அன்னத்தைக் காணக் காரணம், மேலே உள்ள இடம் ஓர் அன்ன வடிவத்தினாலும் ஒரு நீலச் செவ்வகத்தாலும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஜெஸ்டால்ட் படம் என்பார்கள், இங்கே காலியிடம்தான் இருக்கிறது என்றாலும், உங்கள் மனம் தேவையான இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அங்கே ஓர் அன்னத்தைக் காண்கிறது. அன்னம் என்பது, மென்மையானது, நாசூக்கானது, அது அக்கறையான ஒரு தருணத்தைக் காட்டுகிறது. இந்த அன்னம், தனது குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல் தோன்றுகிறது. அந்தக் குட்டி அன்னங்களையும் நாம் கற்பனை செய்து காணலாம், அதன் மேலெழுந்த சிறகைப் பார்கும்போது, அது அசைந்துகொண்டிருப்பது தெரிகிறது, அது நீரில் ஊர்ந்து செல்வதை நாம் அறிகிறோம். இங்குள்ள வெட்ஜ்வுட் வகை நீலமும், பெரிய, சிறிய எழுத்துகள் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டிருக்கும் தன்மையும் எங்களது நோக்கத்தின் தீவிரத்தன்மையைக் காட்டுகின்றன, எங்களை யாரும் எளிதில் அணுகலாம், நாங்கள் அனைவரிடமும் அக்கறையோடு நடந்துகொள்வோம் என்பதை உணர்த்துகின்றன.

எங்கள் காட்சி அடையாளத்தை வடிவமைத்துள்ளவர், ரே+கேசவன் | பிராண்ட் யூனியனைச் சேர்ந்த விருது வென்ற வரைகலை வடிவமைப்பாளர் சுஜாதா கேசவன்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org