உடல் மற்றும் மனம்

புற்றுநோய் உணர்வு நலனைப் பாதிக்குமா?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

ஒருவருக்குப் புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டால், அவருடைய உணர்வு மற்றும் மனநிலையில் பெரிய தாக்கம் ஏற்படலாம்; அவர்மட்டுமல்ல, அவரைக் கவனித்துக்கொள்பவர்கள், குடும்ப உறுப்பினர்களும் இதனால் பாதிக்கப்படலாம். இந்த உணர்வுகளுக்குப் பல காரணிகள் இருக்கலா: உடல் தோற்றம், பணி, குடும்பப் பொறுப்புகள் மாறுதல், மரண பயம் போன்றவை. ஆற்றலின்மை, களைப்பு, தலைசுற்றல், வலி போன்ற உடல்சார்ந்த அறிகுறிகளும் உணர்வுத் துயரத்தை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் புற்றுநோய் வந்தவர்களிடையே பதற்றம், மனச்சோர்வு உள்ளதைப்பற்றி நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு, புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 11 சதவிகிதம்முதல் 37 சதவிகிதம்வரை மனச்சோர்வையும் உணர்வதாகச் சொல்கிறது; 2.6 சதவிகிதம்முதல் 19.4 சதவிகிதம்வரை அவர்கள் பதற்றப் பிரச்னைகளை அனுபவிப்பதாகவும் சொல்கிறது; இவை அனைத்தும் புற்றுநோய் கண்டறியப்பட்டபின் நிகழ்பவை.

புற்றுநோய்ச் சிகிச்சைத்துறையில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள ஆய்வுகளால், புற்றுநோய் கண்டறியப்பட்டவர்கள் உயிர்வாழும் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இப்போது, நுரையீரல் புற்றுநோய் அல்லது மெலனோமா கொண்ட ஒருவர் முறையாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பல ஆண்டுகள் நன்கு வாழலாம். இதன் பொருள், புற்றுநோய் உயிருக்கு ஆபத்தானது என்று எண்ணவேண்டியதில்லை, சில நேரங்களில் அது ஒரு நாள்பட்ட நோயாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒருவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபின் வரும் நாட்கள் பொதுவாக நிறைய உணர்வு அழுத்தத்துடன்தான் செல்கின்றன. அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொண்டாலும், உணர்வுத் தேவைகளை யாரும் கவனிப்பதில்லை, இதனால் அவர்கள் சிகிச்சைத் திட்டத்தைப் பின்பற்றுவது, உயிர்வாழும் வாய்ப்புகள், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் போன்றவை நேரடியாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கப்படலாம்.

ஒருவருக்குப் புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டபின், அவர்கள் அதற்குத் தங்களைப் பொருத்திக்கொள்ள நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகலாம் என்கிறது ஓர் ஆய்வு. இந்தக் காலகட்டத்தில்தான்  ஓர் உளவியலாளர் அல்லது ஓர் சைக்கோ-ஆன்காலஜிஸ்டின் ஆலோசனை தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களும் உணர்வு அழுத்தத்தை அனுபவிக்கலாம். இழப்பு நேரிடுமோ என்கிற பயமாக, அன்புக்குரிய ஒருவர் துயரப்படுவதைப் பார்க்கும் விரக்தியா அல்லது தாங்கள் போதுமான அளவு செய்யவில்லையோ என்கிற குற்றவுணர்ச்சியாக இது வெளிப்படுகிறது.

எப்போது உதவியை நாடவேண்டும்?

புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன் ஒரு நிபுணரின் உணர்வு ஆதரவை நாடுவது முக்கியமென்றாலும், அந்த நேரத்தில் சிகிச்சைத் தெரிவுகளைப் புரிந்துகொள்வதில்தான் மக்களின் கவனம் இருக்கும், மன நலன் முக்கியமாகக் கருதப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். 

அதே நேரத்தில், உளவியல் அழுத்தத்தின் அடையாளங்களையும் கவனிக்கவேண்டும். புற்றுநோய் வந்தவர் அல்லது அவரைக் கவனித்துக்கொள்கிற ஒருவரிடம் இந்த அடையாளங்கள் காணப்பட்டால், அவர்கள் உடனே நிபுணர் உதவியைப் பெறவேண்டும்:

·       தற்கொலை எண்ணங்கள் அல்லது

·       சாப்பிட இயலாமை, தூக்கமின்மை

·       பல நாட்கள் வழக்கமான செயல்பாடுகளில் ஆர்வமின்றி

·       சிகிச்சையில் ஆர்வம் இல்லாமை

·       தீவிர நம்பிக்கையின்மை மற்றும் குற்றஉணர்வு

·       முன்னர் சந்தோஷமாக அனுபவித்த விஷயங்களில் இப்போ இன்பம் காண இயலாமை

·       தினசரி செயல்பாடுகளைச் செய்யவிடாமல் குறுக்கிடும் உணர்வுகள்

·       குழப்பம், மறதி

·       வழக்கத்தைவிட அதிகமாக வியர்த்தல்

·       தீவிர அமைதியின்மை

·       கவலையைத் தரும் புதிய/அசாதாரணமான அறிகுறிகள்

ஒருவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர் பொதுவாகத் தன்னைத் தைரியமாகக் காட்டிக்கொள்வார்; காரணம், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சவுகர்யமாக உணரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அத்தகைய உத்திகள் கூடுதல் அழுத்தத்தைத்தான் உண்டாக்கும் என்று சமாளித்தல் ஆய்வுகள் சொல்கின்றன. புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அவர் பேசுவதைக் கவனித்துக் கேட்கத் தயாராக இருக்கவேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, பயந்தாலும் சரி, விரக்தியாக உணர்ந்தாலும் சரி, கோபப்பட்டாலும் சரி, அவர்களைத் தாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்வோம் என்று அவருக்கு உணர்த்தவேண்டும். இதனால், அவர்கள் தங்களுடைய உணர்வுகளைப்பற்றிப் பேசுவார்கள், தனியே துயரப்படமாட்டார்கள். புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தங்களுடைய உணர்வுகளை அலட்சியப்படுத்தக்கூடாது; தேவையானபோது தேவையான உதவியைப் பெறவேண்டும். 

தெரபிகளின் வகைகள்

கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD)

சைக்கோசொமாடிக் நோய்/ சோமடோஃபார்ம் குறைபாடு

பதின்பருவத்தினரின் மனநலன்