எங்களுடைய ஆசிரியர் குழுக் கொள்கை

 

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் ஆசிரியர் குழுக் கொள்கை

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் உங்களுக்கு மனநலம் மற்றும் ஆரோக்கியம்பற்றிய விவரங்களை மிக உயர்ந்த தரம், பொறுப்புடன் வழங்க உறுதிகொண்டுள்ளது.

எங்களுடைய விவரத்தளத்தை வாசிக்கும் வாசகர்கள்/ பார்வையாளர்கள் உள்பட, எங்களுடன் பலவிதங்களில் இணைந்து பணிபுரிவோருடைய நுண்ணுணர்வை மனத்தில் கொண்டு, நாங்கள் எங்களுடைய ஆசிரியர் குழுக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம். அதன் முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

எங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை அடிப்படைகள்

எங்கள் வாசகர்கள்/ பார்வையாளர்கள் எங்களுடைய விவரத்தளத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையை வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் மதிக்கும். இந்த நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டியது எங்கள் பொறுப்பாகும், இதனால், வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கான ஆசிரியர் குழுக் கொள்கைகளை நாங்கள் கண்டிப்பாகப் பின்பற்றுவோம், அதன் அடிப்படையில் நுண்ணுணர்வோடு செயல்படுவோம்.

மதிப்பளவுகள்

 • தரம்: நாங்கள் எங்களுடைய விவரத்தளங்களை வழங்குகிற அனைத்து மொழிகளிலும், உலகத்தரத்திலான மொழித்தரம் மற்றும் தகவல்தொடர்புத்தரத்தைக் கொண்டுவர வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஊழியர்கள் எப்போதும் பாடுபடுவார்கள். உங்களுக்கு நாங்கள் வழங்கும் விவரங்களில் எந்தப் பிழையும் இல்லை என்பதை உறுதிசெய்ய நாங்கள் பாடுபடுவோம். இதனை உறுதிசெய்ய, நாங்கள் வழங்கும் ஒவ்வொரு விவரமும் மிகத் தீவிரமாகப் பரிசோதித்து உறுதிசெய்யப்படும்.
 • சரியான விவரம்: எங்களுடைய விவரத்தளத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு விவரமும் சரியாக இருப்பதை உறுதிசெய்வதற்காக, நாங்கள் கூடுதலாக உழைப்போம். உள்ளடக்கங்கள் இந்த விவரத்தளத்தில் பதிப்பிக்கப்படுவதற்குமுன், இந்தத்துறைசார்ந்த வல்லுநர்களால் அவை சரிபார்க்கப்படும்.
 • நேர்மை: விவரங்களைச் சேகரித்தல், உள்ளடக்கங்களை உருவாக்குதல் மற்றும் பதிப்பித்தல் மற்றும் செய்திகளைப் பொதுமக்களிடம் கொண்டுசெல்லுதல் ஆகியவற்றில் நாங்கள் மிக உயர்ந்த தரத்தைப் பின்பற்றுவோம்
 • சார்புநிலையின்மை: எங்களுடைய ஆசிரியர் குழுத் தீர்மானங்கள் அனைத்தும், உண்மைகள்,  வாசகர்களுக்கு வழங்கக்கூடிய பலன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். எந்தவொரு குறிப்பிட்ட சமூகம், சிந்தனைப்போக்கு, தனிநபர் அல்லது நிறுவனத்தின் நன்மைக்காகவும் நாங்கள் இந்தத் தீர்மானங்களை மாற்றியமைக்கமாட்டோம்.
 • அனுதாபம்: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஊழியர்கள் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றும்போது, இவைகுறித்து மிகவும் அக்கறையோடு, அனுதாபவுணர்வோடு நடந்துகொள்வார்கள்:
  • எங்கள் ஊழியர்கள் இந்த உள்ளடக்கங்களை உருவாக்குவதற்குத் தேவையான மதிப்புமிக்க விவரங்களைத் தந்தவர்களுடைய அடையாளம், கண்ணியம் மற்றும் மரியாதை. இதில் சம்பந்தப்பட்ட யாருடைய அடையாளமோ மரியாதையோ கண்ணியமோ எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்புக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை நாங்கள் பின்பற்றுவோம்.
  • எங்களுடைய உள்ளடக்கத்தில் ஒருவர் பேசியிருந்தால், அல்லது, அவர் குறிப்பிடப்பட்டிருந்தால், அல்லது, அவருடைய கதை விவரிக்கப்பட்டிருந்தால், அவர்களுடைய தனிப்பட்ட விவர உரிமை. இப்படிப் பங்கேற்கிற ஒவ்வொருவருக்கும் எங்களுடைய நோக்கம், விவரங்களைத் திரட்ட நாங்கள் பயன்படுத்தும் செயல்முறை நன்கு விளக்கப்படும், அதன்பிறகுதான் இதில் பங்கேற்பதற்கான அவருடைய எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கோரப்படும்.
  • பொதுமக்களின், குறிப்பாக, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுப் போராடிக்கொண்டிருப்பவர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்களின் தகவல் தேவைகள், கவலைகள் மற்றும் நுண்ணுணர்வுகள்
  • மனநலம்பற்றிய விவரங்களைத் திரட்டுவதற்காக நாங்கள் பேசவிருக்கும் பல்வேறு மனநலப் பராமரிப்பு நிபுணர்களின் மேதைமை. எங்களுடைய உள்ளடக்கத்துக்காக அவர்களுடைய ஆலோசனையைக் கோரும்போது, இந்தத்துறையில் அவர்கள் கொண்டிருக்கும் ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தை நாங்கள் மதிப்போம்.
 • வெளிப்படைத்தன்மை: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் விவரங்களைச் சேகரித்தல், தொகுத்தல், உள்ளடக்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான முறைகள் மற்றும் செயல்பாடுகளில் மிகவும் வெளிப்படையாக இருக்கும். இந்தவகையில் எங்களுடைய முதல் பணி, எங்களுடைய ஆசிரியர் குழுக் கொள்கையைப் பிரசுரிப்பது.
 • காப்புரிமை: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஊழியர்கள் தாங்கள் உருவாக்குகிற/ பதிப்பிக்கிற உள்ளடக்கங்களுக்குப் பயனுள்ளவையாக அவர் கருதும் விவரங்கள் மற்றும்/அல்லது உள்ளடக்கங்களின்  உரிமைத்தன்மையை நிபந்தனையற்று மதிப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும், எந்தவொரு உள்ளடக்கத்தின் காப்புரிமையையும் நாங்கள் மீறமாட்டோம். ஏதேனும் ஓர் உள்ளடக்கத்தை நாங்கள் எங்களுடைய விவரத்தளத்தில் பயன்படுத்த விரும்பினால், அதன் உரிமையாளரிடம் முன்கூட்டியே உரிமை கோருவோம்.
 • முன்னிறுத்துதல்: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பொருள்/யோசனை/கொள்கை/பழகுநர் அல்லது சிந்தனைப்போக்கை ஆதரிக்காது, முன்னிறுத்தாது. மனநலம் மற்றும் அதுசார்ந்த பல்வேறு சூழியல் அமைப்புகளைப்பற்றிய சாத்தியமுள்ள அனைத்து விவரங்களையும் நாங்கள் எங்களுடைய வாசகர்கள்/ பார்வையாளர்களுக்கு வழங்குவோம். ஏற்கெனவே உள்ள வொரு தயாரிப்பு அலல்து சிந்தனைப்போக்கையும் ஆதரிக்கவோ, எதிர்க்கவோ மாட்டோம். எங்களுடைய விவரத்தளங்களில் நாங்கள் வழங்கும் பல்வேறு தெரிவுகளைப்பற்றி வாசித்து,  வாசகர்கள்/ பார்வையாளர்கள் சரியானவற்றைத் தேர்வு செய்யலாம்.

மொழி

 • எங்கள் அறிவுத்தொகுப்பின் ஆங்கில வடிவம், அமெரிக்க ஆங்கிலமுறையைப் பின்பற்றும்
 • பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய எளிய மொழியைப் பயன்படுத்த நாங்கள் முயற்சி செய்வோம்
 • தகவல் துல்லியத்தை உறுதிப்படுத்தும் அதே நேரத்தில், எங்களுடைய உள்ளடக்கத்தில் அறிவியல் சொற்கள் மற்றும் வரையறைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நாங்கள் பாடுபடுவோம்.
 • இங்கே 'பிரச்னைகள்', 'நோய்கள்' மற்றும் 'குறைபாடுகள்' போன்ற சொற்கள் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் உள்ளடக்கத்தைப்பற்றி

 • வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் உருவாக்கித் தனது விவரத்தளங்களில் வெளியிடும் உள்ளடக்கங்கள் அனைத்தும், வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டாலன்றி, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ஃபார் மென்டல் ஹெல்த்தின் காப்புரிமைக்கு உட்பட்டவை.
 • அதேசமயம், பொதுமக்களின் நன்மை கருதி, இவற்றை மற்ற ஊடகங்களும் சுதந்தரமாகப் பிரசுரிக்கலாம், அதற்கு அவர்கள் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனிடம் முன் அனுமதி பெறவேண்டும். உங்களுடைய தேவைபற்றி connect @whiteswanfoundation.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

கொள்கையைப்பற்றி

 • எங்களுடைய வாசகர்கள்/ பார்வையாளர்கள் எங்களது விவரத்தளத்துக்கு வரும்போது, அவர்களுடைய அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் ஆசிரியர் குழுக் கொள்கை அவ்வப்போது ஆராயப்படும்.
 • எங்களுடைய வாசகர்கள்/ பார்வையாளர்களான நீங்கள்தான் எங்களது கண்கள், காதுகள். எங்களுடைய போர்ட்டலில் அல்லது வேறு ஊடகத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்களைத் தொடர்ந்து கூர்மையாக்க எங்களுக்கு உதவுங்கள். இதில் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருந்தால், எங்களுக்கு எழுதுங்கள். நீங்கள் விவரமறிந்த ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காக, மனநலம் குறித்த மிகவும் மதிப்புமிக்க விவரங்களை வழங்க நாங்கள் முனைந்துள்ளோம். அதற்கு உங்களுடைய ஆலோசனைகளை நாங்கள் வரவேற்கிறோம்.
 • ஆசிரியர் குழுக் கொள்கையின் இந்த வடிவம் ஜூலை 1, 2020 அன்று வெளியிடப்பட்டது.