பயன்பாட்டு நிபந்தனைகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனுக்கு உங்களை வரவேற்கிறோம். நாங்கள் ஓர் உயர்ந்த இணக்கநிலையைப் பராமரிக்கப் பாடுபடுகிறோம், அதேநேரம் நீங்கள் இங்கே ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைப் பெறுவதையும் நாங்கள் உறுதிசெய்வோம். நீங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்குமுன், சில நிமிடங்கள் செலவிட்டு, கீழே உள்ள 'பயன்பாட்டு நிபந்தனைகளை' வாசிக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பொது

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் இணையத்தளத்தை(இனி "இணையத்தளம்" என்று குறிப்பிடப்படும்)ப் பயன்படுத்துவதன்மூலம், இந்தப் பயன்பாட்டு நிபந்தனைகளுக்குச் சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள், இவை இந்த இணையத்தளத்துக்கு நீங்கள் முதல்முறை வரும்போது, உடனடியாக அமலுக்கு வரும். இந்தப் பயன்பாட்டு நிபந்தனைகளை நாங்கள் அவ்வப்போது மாற்றக்கூடும், அப்போது, அந்த மாற்றங்களைப்பற்றிய அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம். நீங்கள் இந்த இணையத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால், மாற்றப்பட்ட பயன்பாட்டு நிபந்தனைகளுடன் இணங்க, அவற்றால் கட்டுப்பட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்று பொருள். ஆகவே, நீங்கள் அவ்வப்போது பயன்பாட்டு நிபந்தனைகளை அணுகி வாசிக்கவேண்டும், மாற்றங்களைக் கவனிக்கவேண்டும் என நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.

பொறுப்புதுறப்பு

இந்த இணையத்தளத்தில் நாங்கள் வழங்கும் விவரங்கள் நன்னம்பிக்கை அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இந்த விவரங்கள் துல்லியமானவை மற்றும் சமீபத்திய தகவல்களைக்கொண்டவை என்று நாங்கள் நம்புகிறோம். அதேசமயம், இந்த இணையத்தளத்தில் உள்ள விவரங்களின் நம்பகத்தன்மை, துல்லியத்தன்மை அல்லது முழுமைத்தன்மைக்கு நாங்கள் பிரதிநிதிகளாகச் செயல்படவில்லை, அவற்றுக்கு எந்த உத்தரவாதமும் அமைக்கவில்லை. நாங்கள் மருத்துவ சேவை வழங்குநர்கள் இல்லை, நாங்கள் ஆலோசனை வழங்குவதில்லை, விவரங்களைமட்டுமே வழங்குகிறோம். உங்களுடைய சூழ்நிலைகளுக்கேற்ற ஒரு நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறாமல், இந்த இணையத்தளத்தில் உள்ள எந்த ஒரு விவரத்தின் அடிப்படையிலும் நீங்கள்  செயல்படக்கூடாது.

இந்த இணையத்தளம் அல்லது இந்த இணையத்தளத்திலிருந்து இணைக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் ("மூன்றாம் நபர் இணையத்தளங்கள்") போன்றவற்றைப் பயன்படுத்தியதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்களுக்கோ வேறொருவருக்கோ ஏற்பட்ட எந்த ஓர் இழப்பு அல்லது சேதம் போன்றவற்றுக்கு, அவை எப்படி ஏற்பட்டிருந்தாலும் (நேரடியாக, மறைமுகமாக, விளைவாக அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்டிருந்தாலும்) நாங்கள் எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டோம்.

தனிநபர் உரிமை

பயன்பாட்டு நிபந்தனைகளில் எங்களுடைய தனிநபர் உரிமைக் கொள்கையும் அடங்கும், அதையும் இதோடு சேர்த்தே வாசிக்கவேண்டும். பயன்பாட்டு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன்மூலம், நீங்கள் தனிநபர் உரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

மூன்றாம் நபர் இணையத்தளங்கள்

இந்த இணையத்தளத்தில், மூன்றாம் நபர்களால் நடத்தப்படும் பிற இணையத்தளங்களுக்கு இணைப்பு இருக்கலாம் ("மூன்றாம் நபர் இணையத்தளங்கள்"). இந்த இணைப்புகள் உங்களுடைய வசதிக்காகமட்டுமே வழங்கப்படுகின்றன. ஒரு மூன்றாம் நபர் இணையத்தளத்துக்குத் தரப்பட்டுள்ள இணைப்பை, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் வலியுறுத்துதல், ஆதரவளித்தல் அல்லது சிபாரிசு எனக் கருதிவிடக்கூடாது. நீங்கள் அத்தகைய மூன்றாம் நபர் இணையத்தளங்களை அணுகுவதற்காகமட்டுமே இணைப்புகள் தரப்பட்டுள்ளன, வேறு எந்த நோக்கத்துக்காகவும் அவை தரப்படவில்லை. நீங்கள் இந்த இணையத்தளத்தின்வழியே அந்த மூன்றாம் நபர் இணையத்தளத்தை அணுகியதும், நீங்கள் அந்த மூன்றாம் நபர் இணையத்தளத்தின் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுகிறீர்கள், இந்த நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அல்ல.

காப்புரிமை

எழுத்துகள், படங்கள் மற்றும் வரைபடங்கள் உள்பட, இந்த இணையத்தளத்தில் உள்ள அனைத்து விவரங்களும், வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டாலன்றி, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் சொத்துகள். அனைத்து காப்புரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. நீங்கள் ஒரு தனிக் கணினியில் தனிப்பட்ட, வணிகநோக்கமல்லாத பயன்பாட்டுக்காக இந்த இணையத்தளத்தை அணுகிப் பார்க்கலாம், தரவிறக்கம் செய்யலாம், காண்பிக்கலாம், அல்லது, இந்த விவரங்களின் மாற்றமில்லாத வடிவத்தை ஒரு தனிப்பிரதிமட்டும் அச்சிடலாம். இந்த இணையத்தளத்தில் உள்ள விவரங்களை நீங்கள் வேறுவிதமாகப் பயன்படுத்த விரும்பினால், அதற்குமுன் நீங்கள் எங்களுடைய அனுமதியைப் பெறவேண்டும். நீங்கள் எங்களுக்கு எழுத இந்த இணைப்பைப் பயன்படுத்தலாம்.

தி வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனின் வணிகமுத்திரைகள். இந்த இணையத்தளத்தில் வரும் மற்ற அனைத்துச் சின்னங்களும், அடையாளங்களும் முத்திரைகளும் அவற்றின் உரிமையாளர்களுடைய வணிகமுத்திரைகள்

சட்ட அதிகார எல்லை

நீங்கள் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தப் பிரச்னையோ கோரலோ இந்தியாவில் உள்ள பெங்களூரு நீதிமன்றங்களின் சட்ட அதிகார எல்லைக்கு உட்பட்டவை என நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இந்தப் பிரச்னைகள், கோரல்களுக்கு அப்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி தீர்ப்பளிக்கப்படும். உங்களுடைய சார்பாக யாரேனும் கோரினால், அவர்களுக்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும்.

தனிநபர் கொள்கை

உங்களுடைய தனிநபர் உரிமையையும், நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்கிற எந்தவொரு தனிப்பட்ட விவரத்தின் ரகசியத்தன்மையையும் பாதுகாப்பதற்கு வொய்ட் ஸ்வான் அறக்கட்டளை உறுதிகொண்டுள்ளது. நீங்கள் எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட விவரங்களை நாங்கள் எப்படிச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பாதுகாக்கிறோம் எனப் பின்வரும் பகுதிகள் விளக்குகின்றன.

விவரங்களைச் சேகரித்தல்

நீங்களாக விரும்பித் தெரிவித்தாலன்றி, உங்களைத் தனிப்பட்டமுறையில் அடையாளம் காட்டக்கூடிய எந்தவொரு விவரத்தையும் நாங்கள் சேகரிக்க முயற்சி செய்வதில்லை. நீங்கள் எங்களுடன் மின்னஞ்சல்மூலமாக, அல்லது பிற சமூக ஊடகங்களின்மூலமாக நேரடியாக உரையாடும்போது, நாங்கள் உங்களிடமிருந்து தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்கக்கூடும். நீங்கள் எங்களிடமிருந்து விவரங்களைப் பெறுவதற்கு அனுமதிப்பது, அல்லது, உங்களை ஒரு தன்னார்வலராகப் பதிவுசெய்வது, எங்களுடைய பிரசாரங்கள் அல்லது பிற முயற்சிகளில் நீங்கள் கலந்துகொள்வது போன்ற காரணங்களுக்காக, நாங்கள் இந்த விவரங்களைச் சேகரிக்கக்கூடும்.

நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட விவரங்களில் உங்களுடைய பெயர், முகவரி, வயது அல்லது பிறந்த தேதி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை இருக்கலாம். நீங்கள் எந்த அளவு விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்பது முழுக்க உங்களுடைய தீர்மானம்தான். அதேசமயம், சில கணக்கெடுப்புகளின்போதோ, நீங்கள் எங்களுடைய பிரசாரங்களில் ஒன்றில் தன்னார்வலராக இணையவிரும்பும்போதோ, நீங்கள் குறைந்தபட்சம் சில குறிப்பிட்ட விவரங்களை வழங்கவேண்டும் என்று நாங்கள் கோரலாம்.

விவரங்களைப் பாதுகாத்தல்

நாங்கள் சேகரிக்கும் அனைத்து விவரங்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து சாத்தியமுள்ள முயற்சிகளையும் நாங்கள் எடுக்கிறோம். இந்த விவரங்களை யாரும் தவறாகப் பயன்படுத்தாமல், தொலைத்துவிடாமல், அங்கீகாரமற்றமுறையில் அணுகாமல், வெளிப்படுத்தாமல் அவை பாதுகாக்கப்படும். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் பராமரிக்கப்படும், அவற்றை அங்கீகரிக்கப்பட்ட நபர்கள்மட்டுமே அணுக இயலும். நீங்கள் விரும்பினால்மட்டுமே விவரங்கள் வெளியிடப்படும், உதாரணமாக, நீங்கள் உங்களுடைய அனுபவத்தைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால், அப்போது உங்களுடைய விவரங்கள் வெளியிடப்படும்.

விவரங்களைப் பயன்படுத்துதல்

நீங்கள் எங்களுக்கு வழங்கும் தனிப்பட்ட விவரங்கள் நீங்கள் கோரும் விவரங்களை உங்களுக்கு வழங்குதல் அல்லது, நீங்கள் ஆர்வம் காட்டும் பிரசாரங்கள் அல்லது பிற முயற்சிகளில் உங்களைப் பங்குபெறச்செய்தல் போன்றவற்றுக்குமட்டுமே பயன்படுத்தப்படும். நீங்கள் வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் அல்லது அதனுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களிலிருந்து மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொண்டிருந்தால், எங்களுடைய திட்டங்கள், பிரசாரங்கள் அல்லது செயல்பாடுகளைப்பற்றிய மின்னஞ்சல்களை உங்களுக்கு அனுப்ப, உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் பயன்படுத்தப்படலாம். ஒவ்வொரு மின்னஞ்சலிலும், சந்தாவை நீக்கும் வசதி இருக்கும், நாங்கள் அனுப்பும் விவரங்களைப் பெற விருப்பமில்லை என்று நீங்கள் அதன்மூலம் மறுக்கலாம்.

உங்களுடைய தனிப்பட்ட விவரங்களின் தனிநபர் உரிமைபற்றி உங்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், அல்லது, மேலும் கேள்விகள் இருந்தால் நீங்கள் இங்கே எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

குக்கீக்கள்

நீங்கள் இந்த இணையத்தளத்தைக் காணும்போது, உங்களுடைய அனுபவத்தை மேம்படுத்த, வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் இணையத்தளம் குக்கீக்களைப் பயன்படுத்துகிறது. நாங்கள் இந்தக் குக்கீக்களைப் பயன்படுத்தி, நீங்கள் இந்த இணையத்தளத்தை எவ்வாறு காணுகிறீர்கள் என்பதைக் கவனிக்கிறோம், இதன்மூலம், மக்கள் இந்த இணையத்தளத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள இயலும். உங்களுடைய விருப்பத்தேர்வுகளை நினைவில்கொள்ளவும் நாங்கள் குக்கீக்களைப் பயன்படுத்துகிறோம்; உதாரணமாக, நீங்கள் இந்த இணையத்தளத்துக்கு முதன்முறை வரும்போது, பயன்பாட்டு நிபந்தனைகள் பாப்-அப் பெட்டி தோன்றும், அதில் உள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் போதும், அடுத்தமுறை இங்கே வரும்போது மீண்டும் அதே பெட்டியைக் காணவேண்டியிருக்காது. இந்த விவரங்கள் எவற்றையும் உங்களைத் தனிப்பட்டமுறையில் அடையாளம் காணப் பயன்படுத்த இயலாது.

இந்தத் தனிநபர் உரிமைக் கொள்கை அவ்வப்போது மாறக்கூடும், குறிப்பாக, புதிய சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்போது, இந்தக் கொள்கையும் மாறலாம். அப்படி மாற்றம் ஏதும் செய்யப்பட்டால், அதைப்பற்றிய அறிவிப்பு ஒன்றை நாங்கள் பதிவுசெய்வோம். அதேசமயம், நீங்கள் அவ்வப்போது தனிநபர் உரிமைக் கொள்கையைப் படித்து, அதில் உள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் சிபாரிசு செய்கிறோம். இந்தத் தனிநபர் உரிமைக் கொள்கை கடைசியாக 3 பிப்ரவரி 2015 அன்று மாற்றப்பட்டது.