யோகாசனத்தை மொபைல்ஃபோனைப்பார்த்துக் கற்றுக்கொள்வதா என்று சில குருநாதர்கள் முகம்சுளிக்கக்கூடும். ஆனால், எல்லாருக்கும் யோகாசன வகுப்புகள் அமைந்துவிடுவதில்லை, அவர்களுக்கு, யோகாசன அப்ளிகேஷன்கள் நன்கு பயன்படுகின்றன. இதற்காக, நாங்கள் பல ஆப் ஸ்டோர்களை ஆராய்ந்து, நல்ல அப்ளிகேஷன்களைக் கண்டறிந்தோம். இந்த அப்ளிகேஷன்கள் ஒரு சிறந்த யோகாசன குருநாதருக்கு மாற்றாகிவிடாது. ஆனால், யோகாசனமே செய்யாமலிருப்பதற்குப்பதிலாக, இங்கே தொடங்கலாம். வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷனைச் சேர்ந்த பிரியங்கா M வெவ்வேறு மொபைல் தளங்களில் உள்ள ஐந்து அப்ளிகேஷன்களை முயன்றுபார்த்து, அவற்றில் எது சிறப்பு, எது சுமார் என்று விளக்குகிறார். இவை பயனாளர் இடைமுகம் மற்றும் பிரபலத்தன்மையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
1 - Daily Yoga (iOS)
இந்த அப்ளிகேஷன் மூன்று முக்கிய மொபைல் தளங்களிலும் கிடைக்கிறது (iOS, விண்டோஸ், ஆண்ட்ராய்ட்), பயனாளர்களிடையே இது ஓரளவு பிரபலமாக உள்ளது. Daily Yogaவின் ஓர் உருவகப்படுத்தப்பட்ட யோகி தோன்றுகிறார், பல ஆசனங்களைச் செய்துகாட்டுகிறார். இந்த அப்ளிகேஷனில் பின்வரும் பிரிவுகள் உள்ளன: பயிற்சியைத் தொடங்குதல், போஸ் நூலகம், சமூகம், யோகா இசை, மேலும் விவரங்கள், மேலும் அப்ளிகேஷன்கள். இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும் கிடைக்கிறது. ஆனால், முழுமையான அனுபவத்துக்கு, pro பதிப்புக்கு மாறவேண்டியிருக்கும்.
சிறப்பான விஷயங்கள்:
சுமாரான விஷயங்கள்:
2 - Simply Yoga (ஆண்ட்ராய்ட்)
இந்த யோகா அப்ளிகேஷனில் இரு நிலைப் பயிற்சிகள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் 20, 40 மற்றும் 60 நிமிடங்களுக்கு அமைகின்றன. யோகாசனப் போஸ்களின் தீவிரத்தன்மையைப்பொறுத்து நிலைகள் மாறுபடுகின்றன. இந்த அப்ளிகேஷன் இலவசமாகவும் கிடைக்கிறது, விரும்பினால் pro பதிப்புக்கு மாறிக்கொள்ளலாம்.
சிறப்பான விஷயங்கள்:
சுமாரான விஷயங்கள்:
3 - Yoga Studio (iOS)
முதன்முறையாக யோகாசனம் செய்கிறவர்கள், யோகாசனத்தை நன்கு அறிந்தவர்கள் என எல்லார்மத்தியிலும் இது ஒரு மிகப் பிரபலமான அப்ளிகேஷன் ஆகும். Yoga Studio என்பது, பணம் தந்து பெறவேண்டிய ஓர் அப்ளிகேஷன். இதில் உருவகப்படுத்தப்பட்ட வகுப்புகள் உள்ளன, அவை ஒரு மென்மையான குரலில் விளக்கப்படுகின்றன. ஒருவர் தன்னிடம் எவ்வளவு நேரம் உள்ளது என்பதைப்பொறுத்து அவரது பயிற்சியை அமைத்துக்கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனின் விலை, ரூ 250, இது pro வடிவத்தில்மட்டுமே கிடைக்கிறது.
சிறப்பான விஷயங்கள்:
சுமாரான விஷயங்கள்:
4 - Yoga Cure (விண்டோஸ்)
விண்டோஸ் தளத்தில் கிடைக்கும் ஒரு முழுமையான அப்ளிகேஷன், Yoga Cure. இதில் மூன்று பகுதிகள் உள்ளன: என் உடல், என் ஆரோக்கியம், யோகா மையங்கள் (நாடுமுழுவதும் உள்ள யோகா மையங்களின் விவரங்கள்). இவற்றில் 'என் உடல்' என்ற பகுதி சில குறிப்பிட்ட ஆசனங்களில் கவனம் செலுத்துகிறது, அதன்மூலம் மூளை, தோள்கள், தைராய்ட், வயிறு போன்ற பகுதிகளுக்கு என்ன நன்மைகள் என்று காட்டுகிறது. 'என் ஆரோக்கியம்' பகுதி, சில குறிப்பிட்ட நலப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஆசனங்களைக் காண்பிக்கிறது. உதாரணமாக, உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, நீரிழிவு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் ஆசனங்கள். அனிமேஷன் வீடியோக்களை மீண்டும் இயக்கிப்பார்க்கலாம்.
சிறப்பான விஷயங்கள்:
சுமாரான விஷயங்கள்:
5 - Yoga.com (ஆண்ட்ராய்ட்)
289 போஸ்கள், மூச்சுப் பயிற்சிகள், 37 யோகாசனத் திட்டங்களைக்கொண்டுள்ள Yoga.com அப்ளிகேஷன் விரிவான பயிற்சித் தெரிவுகளைத் தருகிறது. உதாரணமாக, ஒவ்வொரு போஸுக்கும் ஒரு புகைப்பட-விவரம் உண்டு, அல்லது, வீடியோ உண்டு, இதில் பயனாளர் தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
சிறப்பான விஷயங்கள்:
சுமாரான விஷயங்கள்: