நான் என்னுடைய மனநோயைச் சமாளிக்க, உள்ளடக்கக்கூடிய ஒரு பணியிடத்திற்கு மாறினேன்

சில ஆண்டுகளுக்கு முன், நான் வேலைப்பளுமிக்க பெருநிறுவனப் பணியில் இருந்தேன். அது அழுத்தம் மிக்கதாக இருந்தது. மேலும், நான் நீண்ட நேரம் வேலை செய்தேன். நான் உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த பல சவால்கள் கொண்டிருந்தேன். அதன் பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு ஃபிப்ரோமையால்கியா, எண்டோமெட்ரோசிஸ் மற்றும் பொதுவான பதற்றக் குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறிந்தார்கள். என்னால் அழுத்தத்தையும் நீண்ட பணிநேரத்தையும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எனவே வேலையை விட்டேன், படிப்பிற்காக இடைவெளி எடுத்துக்கொண்டேன்.

என்னுடைய படிப்பிற்குப் பிறகு, நான் என்னுடைய பழைய வேலைக்கே திரும்புவதா, அல்லது அதையொத்த வேறு வேலைக்குச் செல்வதா என்று விரிவாகச் சிந்தித்தேன். இடம், அழுத்தம் மற்றும் வேலை நேரத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தபோது, அது எனக்கு மிக அழுத்தமாக இருக்கும் என்று புரிந்துகொண்டேன். என் நிறுவனம் அனைவரையும் உள்ளடக்கக்கூடியதாக இல்லை, நான் என்னுடைய பிரச்னைகளை அங்கே எவருடனும் பகிரவும், எந்த ஆதரவையும் எதிர்பார்க்கவும் முடியவில்லை.

அதன் பிறகு நான் பன்முகத்தன்மை, உள்ளடக்கும்தன்மை ஆகியவற்றில் செயலாற்றும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினேன். நான் இப்போது நிர்வாகமும் பணியாளர்களும் என்னுடைய பிரச்னையைப் புரிந்துகொள்ளும் ஓர் இடத்தில் உள்ளேன் – இது ஓரளவு நாங்கள் பணியாற்றும் இடத்தின் காரணமாக நடைபெறுகிறது என்னுடைய ஃபிப்ரோமையால்கியா பிரச்னை மோசமாகும் நாட்களில் நான் வலியாலும் சோர்வாலும் செயல்பட இயலாமல் இருப்பேன்; சில நேரங்களில் சிந்தனைத் தெளிவின்மையால் என்னால் தெளிவாக யோசிக்க முடியாது. இந்த நாட்களில் நான் வீட்டில் இருப்பதைத் தேர்ந்தெடுப்பேன். என்னுடைய பணிநேரங்கள் நெகிழ்வானவை, மேலும் அவர்கள் பயணம் செய்வது தொடர்பான என்னுடைய பதற்றத்தைப் புரிந்து கொண்டு அதற்காகச் சலுகைகள் வழங்குகின்றனர்.

என்னுடைய புதிய நிறுவனத்தில், விமர்சனம் இல்லாமல் பகிர்ந்துகொள்வதற்கான வசதி உள்ளது, அது மிகவும் உதவுகிறது.


*கோரிக்கைக்கு ஏற்பப் பெயர் மாற்றப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org