வேலை நீக்கத்தின்போது நிறுவனம் பணியாளர்களுக்கு உதவுதல்

வேலை நீக்கத்தின்போது நிறுவனம் பணியாளர்களுக்கு உதவுதல்

சில நிறுவனங்கள் குறுகிய கால அறிவிப்பில் பணியாளர்களை வேலை நீக்கம் செய்கின்றன, அந்த நாளின் முடிவிலேயே அவர்களை வேலையை விட்டுச் செல்லக் கூறுகின்றன. இருப்பினும், சில நிறுவனங்கள் பணியாளர் உதவித் திட்டங்கள் (EAPs) வழங்குநர்களுடன் பணிபுரிந்து, வேலை நீக்கத்தைத் திட்டமிட்ட வகையில் செயல்படுத்துகின்றன.

மற்றொரு நகரத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த பணியாளர்கள், தன்னைச் சார்ந்திருக்கும் பலர் கொண்டவர்கள், கடன்கள் அல்லது பெரும் நிதிப் பொறுப்பு கொண்டவர்கள் இந்த விஷயத்தில் மற்றவர்களை விடப் பெரும் இடரில் இருக்கும் வாய்ப்புள்ளது. அவர்களுடைய கவலைகளைத் தீர்க்க, மனநல ஆதரவு வழங்கச் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

பணிநீக்கத்தின் போது மனநல ஆதரவு வழங்க விரும்பும் நிறுவனங்கள் மனநல நிபுணரை அந்த நேரத்தில் பணியமர்த்தலாம், அதிர்ச்சியாலும் மூழ்கிப்போன உணர்வாலும் போராடும் பணியாளர்களுக்கு மன நல ஆதரவு வழங்கலாம். இதற்குப் பல வழிகள் உண்டு. எடுத்துக்காட்டாக, ஓர் ஆலோசகர்:

  • மேலாளர் /HR அதிகாரிக்கு எப்படி இந்தச் செய்தியை வழங்குவது என்று பயிற்சியளிக்கலாம்
  • பணியாளர் வேலை நீக்கம் செய்யப்படும் சந்திப்பில் கலந்துகொள்ளலாம் (தேவைப்பட்டால் உடனடி ஆதரவு வழங்குவதற்காக)
  • வேலை நீக்கம் செய்யப்பட்ட பிறகு பணியாளர்களுக்கு மனநல ஆதரவு வழங்கலாம்
  • பணியாளர்களிடம் நேருக்கு நேராக, அல்லது குழு அமர்வுகளில் பேசலாம்

சிலநேரங்களில் வேலை நீக்கம் செய்யப்படாத பணியாளர்களும் அழுத்தத்தை எதிர்கொள்ளலாம், இழப்பின் உணர்வால் கவலைப்படலாம். நிறுவனத்தின் EAP சேவைகளைப் பயன்படுத்தி, உதவி கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது, அவர்கள் மூழ்கிப்போவதாக உணர்ந்தால் அதனை நாடலாம் என்று பணியாளர்களுக்கு நினைவூட்டலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org