மீண்டெழும் திறனைக் கட்டமைப்பது எப்படி?

மீண்டெழுதல் என்பது, பழைய நிலைக்குத் திரும்புதல் அல்லது தீங்கை எதிர்கொள்ளும்போது அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சில நபர்கள் இயற்கையாகவே நேர்விதமான பார்வை மற்றும் அழுத்தமான சூழல்களைச் சமாளிக்கும் திறனைக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம், மீண்டெழுதல் ஒரு கற்றுக் கொள்ளக்கூடிய திறன் ஆகும். ஒருவர் மீண்டெழும் திறனைக் கட்டமைக்க உதவும் பத்து வழிகள் இங்கே:

  1. தன்னை ஊட்டப்படுத்திக்கொள்ளுதல்: தினசரி உடற்பயிற்சி செய்தல், சரிவிகித உணவை உட்கொள்ளல், போதுமான தூக்கம், போதைப் பொருட்கள் எடுப்பதைத் தவிர்த்தல் மற்றும் பொழுதுபோக்குளை வளர்த்தல் போன்றவற்றின் மூலம் ஒருவர் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளலாம். தன்னுடைய சொந்த தேவைகளைக் கவனிப்பது அவருடைய நல எண்ணத்தை அதிகரித்து சவால்களை எதிர்கொள்ளும் வலிமையை அவருக்குக் கொடுக்கிறது.
  2. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல்: வாழ்க்கையில் அழுத்தங்கள் மற்றும் மாற்றங்களைக் கற்பதற்கு மற்றும் வளர்வதற்கான வாய்ப்புகளாகப் பார்த்தல்.
  3. தன்னுடைய திறமைகள் மீது நேர்விதமான நம்பிக்கைகளைக் கட்டமைத்தல்:  ஒருவர் தன்னைப்பற்றி, பிரச்னைகளைத் தீர்க்கும் தன்னுடைய திறமையைப்பற்றி நேர்விதமான பார்வையை விரும்பிக் கட்டமைக்கலாம். தன்னுடைய நல்ல பண்புகள், வலிமைகள் மற்றும் வெற்றிகள் குறித்துத் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
  4. வலிமையான உறவுகளை வளர்த்தல்: அழுத்தமான வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது சிக்கலான சூழல்களில் சமாளிக்க உதவுகிற கனிவான மற்றும் ஆதரவான நபர்களைத் தன்னைச்சுற்றிப் பெற்றிருத்தல்.
  5. பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்களை வளர்த்தல்: பிரச்னையைத் தீர்க்கக்கூடிய வழிகள் குறித்துப் பட்டியலிடுவது போன்ற, ஒருவருடைய மீண்டெழும் திறனை வளர்க்க உதவும் வழிகளைக் கண்டறிதல்.
  6. மனச்சோர்விலிருக்கும்போது உதவியை நாடுதல்:  மனச்சோர்வு அல்லது பாதகமான சூழலில் ஒருவர் தான் நம்பும் நபர்களிடமிருந்து உதவியை நாடலாம். ஆலோசனை அல்லது சிகிச்சை ஆகியவை மீண்டெழுதலை கட்டமைக்கும் வழிகளாகும்.
  7. சுய விழிப்புடன் இருத்தல்: ஒருவர் தன்னுடைய சொந்த உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள உலகின் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும். தனிப்பட்ட நாட்குறிப்பு அல்லது பதிவேட்டைப் பராமரிப்பது இதற்கு உதவலாம்.
  8. சாத்தியமான இலக்குகளை அமைத்தல்: சூழ்நிலைகளை எதார்த்தமான வழியில் பார்த்தல், பிரச்னைகளை எதிர்கொள்ள நியாயமான இலக்குகளை அமைத்தல்.
  9. பிரச்னைகளைத் தீரக்க நடவடிக்கை எடுத்தல்: சிக்கல் அல்லது பிரச்னையைத் தீர்க்கஅவசியமான நடவடிக்கைகளை எடுத்தல்.
  10. வாழ்வுக்கு ஒரு நோக்க உணர்வைக் கண்டுபிடித்தல்:  வாழ்வுக்கு ஒரு நோக்க உணர்வைக் கொண்டிருத்தல், பாதகங்கள், அதிர்ச்சி, சிக்கல் அல்லது துயரத்திலிருந்து மீள உதவலாம். எடுத்துக்காட்டாக, ஓர் உயர்ந்த நோக்கத்துக்காகப் பணியாற்றல், சமூகப் பணிகளில் பங்கெடுத்தல், ஆன்மிகத்தை வளர்த்தெடுத்தல், செயல்பாடுகளில் பங்கெடுத்தல் அல்லது ஒருவருடைய வாழ்க்கைக்குப் பொருளைக் கொண்டுவரும் ஏதாவது ஒன்று.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org