ஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்

ஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்
  1. இறப்புக்கு உணர்ச்சியூட்டுவதைத் தவிர்க்கவும்: உண்மைகளை உணர்ச்சியூட்டாமலும், தலைப்புச் செய்தியில் காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாமலும் கூறவும். செயல்பாட்டின் விவரங்களைக் கூறும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால், அந்த நபரின் முந்தைய படங்களைப் பயன்படுத்தவும். உறவினர்களின் தனியுரிமையை மதிக்கவும்.

  2. இறப்பிற்காக ஒற்றைக் காரணி மீது காரணம் கற்பிப்பதைத் தவிர்க்கவும்: தற்கொலை ஒரு சிக்கலான நிகழ்வு, மேலும் அது பொதுவாகப் பல்வேறு காரணிகளின் கலவையால் நிகழ்கிறது. பொருள் சான்று இல்லாமல் தற்கொலையின் காரணத்தைக் குறைத்துப்பேசவேண்டாம். விரிவான விசாரணைக்குப் பிறகே காரணத்தைத் தீர்மானிக்கலாம், மேலும் தற்கொலை சிக்கலானது, பல காரணிகள் உடையது என்று குறிப்பிடவும். தற்கொலையை, உறவுப் பிரச்னைகள், நிதிச் சிக்கல்கள் அல்லது தோல்வியை எதிர்கொள்ளும் வழியாகக் குறிப்பிடவேண்டாம்.

  3. செய்தியை முதற்பக்கத்தில் அல்லது குற்றப்பக்கத்தில் பதிப்பிப்பதைத் தவிர்க்கவும்: செய்தியை முதற்பக்கத்தில் பதிப்பிப்பது அதனை உணர்ச்சிப்பூர்வமாக்குகிறது, அதேவேளையில் குற்றப்பக்கத்தில் பதிப்பிடுவது தற்கொலை ஒரு ‘தவறு’ என குறிப்பிடுகிறது. செய்தியைப் பிற இறப்புகள் அல்லது இறப்பு அறிவிப்புகளுடன் பயன்படுத்தவும். தற்கொலையின் காரணத்தைத் தலைப்பில் குறிப்பிட வேண்டாம்.

  4. நிகழ்வு குறித்து விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்கொலைக் குறிப்பைப் பகிர்தல், குறிப்பிட்ட முறை, அல்லது முன்தயாரிப்புகள், சூழ்நிலை, அல்லது அது நிகழ்ந்த இடத்தை குறிப்பிடுவதைத் தவிருங்கள். இந்த விவரங்களைப் பகிர்வது அதுபோன்ற தற்கொலைகளை அதிகரிக்கலாம்.

  5. தற்கொலையை ஓர் அடையாளமாக, சின்னமாக, எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகக் காட்டுவதைத் தவிர்க்கவும். இதன்மூலம், அதுபோன்ற பிரச்னைகள் பொதுவில் பேசப்படும்போதெல்லாம் அந்தக் குறிப்பிட்ட நபரின் படங்கள் அல்லது செயல் பயன்படுத்தப்படக்கூடும். இது, சமூகத்தில் தற்கொலையின் விளிம்பில் இருக்கும் நபர்கள், அதனை ஒரு மரியாதையான பொருளாக, அங்கீகாரம், பொருள் தரக்கூடியதாகக் கருதக் காரணமாகலாம். கவனமானது இறந்த நபருக்கு வருந்துவதில் இருக்க வேண்டும், அவர்கள் இறந்த முறை குறித்து இருக்கக் கூடாது.

  6. நுண்ணுணர்வுடன் இருக்கவும், குறிப்பாக பெரிய நபர்களுடைய தற்கொலை குறித்துப் பேசுகையில் இது அவசியம். மக்கள் பிரபலங்களில் தங்களை அடையாளம் காண்கிறார்கள், அவர்களை பின்பற்றுபவர்களில் தற்கொலையின் விளிம்பில் உள்ளவர்கள் அவர்களைப்போலவே தற்கொலையை முயற்சிசெய்ய வாய்ப்புள்ளது. மற்றவர்கள், ‘எல்லாவற்றையும் கொண்டுள்ள நபர்களுக்கே தற்கொலை வெளியேறும் வழியாக இருக்கும்போது, அது தங்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்’ எனக் கருதலாம். தவறான நேரத்தில் நிகழ்ந்த இறப்பு குறித்து விரிவான விளக்கம் கொடுத்து, அது தற்கொலையாக இருக்கலாம் என்று குறிப்பிடவும்.

  7. பொதுமக்களுக்குத் தற்கொலை குறித்து விழிப்புணர்வூட்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தவும்: தற்கொலையிலிருந்து தப்பியவர்களுக்கான உதவி மையம் மற்றும் வளங்கள் குறித்த தகவல்களை வழங்கவும். முன்பு உயிர் பிழைத்தவர்களுடைய கதைகளை வெளியிடலாம், அவர்கள் உதவியை நாடியது, சவாலை எதிர்கொள்ள அது அவர்களுக்கு எப்படி உதவியது என்ற விவரங்களுடன் பதிப்பிக்கலாம். தற்கொலை அபாயம்பற்றிய அடையாளங்கள், மக்கள் தங்களுக்காக அல்லது பிறருக்காக எப்படி உதவியை நாடலாம் என்பதைப் பகிரலாம்

  8. ஏதேனும் சந்தேகம் இருந்தால், செய்தியை வெளியிடுமுன் மனநல நிபுணர்கள், மற்றும்/அல்லது அதிகாரிகளுடன் அதனைச் சரிபார்க்கவும்.

உசாத்துணைகள்:

  1. தற்கொலை பற்றிய பத்திரிக்கைச் செய்திகள் தற்கொலைச் செய்தி வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா: http://www.nimhans.ac.in/nimhans-centre-well-being/research

  2. தற்கொலையைத் தவிர்த்தல், ஊடக நிபுணர்களுக்கான விவரங்கள்: http://www.who.int/mental_health/prevention/suicide/resource_media.pdf

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org