நேர்காணல்: பெண்களும் மனநோய் பாதிப்பு சாத்தியங்களும்

பெண்களில் மனநோய்ப் பிரச்னைகள் பல காரணிகளின் கலவையால் ஏற்படுகின்றன. இந்த நேர்காணலில், வைட் ஸ்வான் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரதோ பாக்சி, Dr பிரபா S சந்திராவிடம் பெண்கள், மனநோய் பாதிப்புக்குப் பங்களிக்கும் மனச்சோர்வு மற்றும் சமூகக் காரணிகள்பற்றிப் பேசுகிறார் . இந்த நேர்காணலின் சுருக்கமான வீடியோ  தொகுப்பை இங்கே காணலாம்

சுப்ரதோ பாக்சி: ஒரு புதிய பரிமாணத்திற்கு வரவேற்கிறோம். நான் சுப்ரதோ பாக்சி, இன்று அரங்கில் என்னுடன் Dr பிரபா சந்திரா உள்ளார். வணக்கம்! Dr பிரபா சந்திரா தேசிய மனநோய் மற்றும் நரம்பியல் கழகத்தின் மனவியல்துறையின் தலைவர். மேலும் அவர் பெண்களுடைய மன நலத்திற்கான பன்னாட்டுக் கூட்டமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.

புதிய பரிமாணத்திற்குச் சிறப்பு வருந்தினராக வந்ததற்கு நன்றி.

Dr பிரபா சந்திரா:எனக்கும் அது மகிழ்ச்சியே.

SB: இன்று நீங்கள் இங்கு வந்து பெண்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் என்ற தலைப்பில் பேசுவது எங்களுக்குப் பெரிய கௌரவம். இன்றைய நாள் இதுவரையில் எப்படி இருந்தது என்று சொல்லுங்களேன்.

PC: இந்த நாள் வேலை மிகுந்ததாக இருந்தது. நான் என்னுடைய புறநோயாளிகளைச் சந்திக்கிற நாள் இது, நான் வெவ்வேறு வகைப் பிரச்னைகளுடனான நான்கு பெண்களைச் சந்தித்தேன். ஒருவர், அறிவுக் குறைபாடு உடைய இளம் பெண், அவருக்குத் திருமண செய்ய அவருடைய குடும்பத்தினர் நினைக்கிறனர்; இன்னொருவர், பாலியல் பிரச்னைகள் மற்றும் உடல் பிரச்னைகள் கொண்ட மென்பொருள் பொறியாளர், இவற்றுக்குக் காரணம் மனநலப்பிரச்னையாக இருக்கலாம்; அடுத்து, கர்ப்பம் தரிக்க விரும்பும் ஒரு பெண் வந்தார், அவர் கடந்த காலத்தில் மனச்சோர்வுப் பிரச்னை கொண்டிருந்தார். அவரும் அவருடைய கணவரும் வந்து என்னுடன் கலந்தாலோசித்தனர். இப்படி என்னுடைய நாள் சென்றது.

SB: அந்த நான்காவது பெண்ணைப்பற்றிச் சொல்லவில்லையே.

PC : நான்காவது பெண் உண்ணும் குறைபாடு கொண்டிருந்தார்.

SB: சரி, இந்த நான்கு பெண்களும் எந்த வயது வரம்பில் வருகின்றனர்?

PC: உண்மையில் இந்தப் பெண்களும் எல்லாரும் 35 வயதுக்குக்கீழே உள்ளவர்கள். இளம் பெண்கள்.

SB: பெரும்பாலும் இது நகர்ப்புறங்களில்தான் நடைபெறுகிறதா, இல்லையெனில் கிராமப்பகுதிகளில்கூட இப்படி நடப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

PC: அப்படி எந்த மாறுபாடும் இல்லை. எடுத்துக்காட்டாக, அறிவுக்குறைபாடு கொண்டிருந்த பெண் கிராமப்பகுதியான தாவணகரெயிலிருந்து வந்திருந்தார். மற்றொரு பெண் நெல்லூரிலிருந்து வந்திருந்தார் – எனவே அது நிச்சயமாக நகர்ப்புற நிகழ்வு இல்லை. அது இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.

SB: ஆக, அது நகர கிராமப் பிரச்னையோ, பணக்காரன் ஏழைப் பிரச்னையோ அல்ல. (P: நிச்சயமாக இல்லை.) நான் அதுபற்றி உங்கள் பார்வையைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். 1.2 பில்லியன் மக்கள் கொண்ட இந்த நாட்டில், 4,000 க்கும் குறைவான மனநல நிபுணர்கள் மற்றும் 10,000 அளவு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் உள்ளதாகச் சொல்கிறார்கள். அது அதனைப் பெருங்கடலில் ஒரு துளிபோல ஆக்கு்கிறது. 1.2 பில்லியனில் 50% பெண்கள். ஆனால் இந்த 50% பெண்கள், பிரச்னையில் 50% ஆக இல்லை என்கிறார்கள். மேலும் சிலர் பெண்களுடைய மனநலம் தனிநபர் துன்பம் மட்டுமில்லாது, சில நேரங்களில் அமைதியான முறையில் கவனித்துக்கொள்பவருடைய  பெரும் பிரச்னையாகவும் உள்ளது என்கிறார்கள். மேலும், அவர்கள் குடும்பத்தின் மையமாக இருப்பதால் அது பெரும் பின்விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே, பெண்களுடைய மன நலத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நாம் மன நலத்தில் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டுமா.

PC: இது ஒரு நல்ல கருத்து, நானும் பலமுறை இந்தப் பிரச்னை பற்றிச் சிந்தித்துள்ளேன். பெண்களுடைய மனநலத்துக்கு ஆண்களுடைய மனநலனை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? உண்மையில், பெண்களுடைய மனநலம் குறித்துச் சமூகங்கள் – புத்தகங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்திய மனநலச் சமூகம் பெண்களுடைய மனநலம் குறித்து ஒரு பணிக்குழுவைக் கொண்டுள்ளது ஆனால் ஆண்களுடைய மனநலத்திற்கு என்று ஏதும் இல்லை. எனவே தெளிவாக இதில் ஒரு பிரச்னை உள்ளது.

பாலினமானது, மனநலப் பிரச்னைகளின் வெளிப்படுத்தலைப் பல வழிகளில் மாற்றலாம். எனவே மனநலப் பிரச்னைகள் கொண்ட ஆண்கள் உள்ளார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், மேலும் அவர்கள் தனித்துவமான மனநலப் பிரச்னைகள் கொண்டுள்ளார்கள்; அவர்கள் அவர்களுக்குரிய பிரச்னைகளைக் கொண்டுள்ளார்கள். ஆனால் பெண்களுடைய மனநலப் பிரச்னை முக்கியமான பிரச்னையானதற்கான காரணம் – உலகின் மனநலப் பிரச்னைகளில் மிகவும் பொதுவானதான மனச்சோர்வில், பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் – எனவேதான் அப்படி உள்ளதென நான் நினைக்கிறேன்.

SB: எனவே, நீங்கள் குறிப்பிட்ட பிரச்னைகளில் பெண்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று கூறுகிறீர்களா, அதற்கு ஏதேனும் உயிரியல் அடிப்படை உள்ளதா, அல்லது அது உயிரியல் மற்றும் சமூக அடிப்படையிலானதா?

PC: அது சரியானது தான். உண்மையில் நான் அதனை ஒரு முக்கோணமாகப் பார்க்க முயற்சிசெய்கிறேன்: சமூகம், கலாசாரம் மற்றும் மூன்றாவதாக மனநலக் காரணம். பெண்கள் மனநலப்படி ஆண்களிலிருந்து வித்தியாசமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள். இது உயிரியல் மற்றும் பாலினத்தின் சமூகக் கட்டமைப்பு பற்றியது மட்டுமில்லை. ஆனால் பெண்கள் தங்களுடைய பிரச்னைகள் மற்றும் சிக்கல்களைச் சமாளிக்கும் வழிகள் உள்ளன – அவர்கள் பேசும் முறை; அவர்கள் பிரச்னையை உட்கிரகித்துக் கொள்ளும் வழிமுறை போன்றவை, அவை பெண்களுக்கே தனித்துவமானவை. எனவே, நான் அதனைப் பெண்களை மையத்தில் கொண்ட முக்கோணமாகக் கருதுகிறேன், இவை அனைத்தும் அவருடைய வலிமை மற்றும் ஆபத்துகளுக்கு பங்களிப்பவையாகவும் கருதுகிறேன்.

SB: நாம் பெண் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்  – ஆனால் பெண் குழந்தை உலகில் வந்து, பதின் பருவம், பருவமடைதல், பெரியவராக மாறுதல், இளைஞியாகவும் இளம் பெண்ணாகவும் மாறுவதையும் அதன் பிந்தைய நிலைகள் பற்றியும் பேசுகிறோம். எனவே, பெண்கள் என்று வரும்போது உடல்நலப் பிரச்னைகள் வித்தியாசமானவையா?

PC: நிச்சயமாக. பெண்களுடைய மனநலப் பிரச்னைகள் தனித்துவமானவையாக மாற அதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன். ஏனெனில் வாழ்க்கை நிலைகள், இனப்பெருக்க நிலை உட்பட, பெண்களுடைய மனநலம் பின்பற்றக்கூடிய பாதையைச் சில வழிகளில் தீர்மானிக்கின்றன. உடல் நலம் கூட வாழ்க்கை நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பருவமடைதல் இளம் பெண்களுக்கு முக்கியமான திருப்புமுனையாக உள்ளது. பருவமடைவதற்கு முன் சிறுவர்களும் சிறுமிகளும் பெரும்பாலான குறைபாடுகளுக்கு ஒரே பண்புகள் கொண்டுள்ளனர் – குறிப்பாக மனச்சோர்வு, பதற்றம். திடீரென பருவமடைதலின் போது ஓர் உச்சம் உள்ளது. மேலும், பெண்கள் ஆண்களை விட நான்கு மடங்கு அதிகம் மனச்சோர்வை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கொண்டிருக்கிறார்கள்.

SB: பெண்மை பற்றிப் பேசுவோம் அது பெண் குழந்தை பிறந்ததில் தொடங்கிப் பருவமடைதல், வளர்தல் மற்றும் அவருடைய இனப்பெருக்கச் சுழற்சி வரையிலும் அதன் பிறகும் தொடர்கிறது. பெண்களுடைய மனநலத்தைப் பொருத்த வரையில் வெவ்வேறு கட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகைச் சவால்கள் மற்றும் பிரச்னைகளைப் பார்க்கிறீர்களா?

PC: நான் இது மிக முக்கியமான பிரச்னை என்று நினைக்கிறேன். எனவே நாம் பிறப்பிலிருந்து பருவமடைவது வரையிலான காலகட்டத்தில் தொடங்குவோம். நான் இந்தக் கட்டத்தை மிகவும் முக்கியமானதாகவும் போதிய கவனம் கொடுக்கப்படாததாகவும் கருதுகிறேன். பல குடும்பங்களில் பெண் குழந்தை பிறப்பது கொண்டாடப்படுவதில்லை. மேலும், பெரும்பாலான நேரம் பெண் குழந்தைகளுக்கு அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, அல்லது அவருக்கான எதிர்பார்ப்புகள் ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானவையாக உள்ளன. எனவே பெரும்பாலான பெண்கள், அவர்கள் இளம் வயதில் இருந்தால் கூட, குடும்பத்தில் இரண்டாம் தரக் குடிமக்களாக வளர்க்கப்படும் உணர்வுடன் வளர்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளும் அதிகாரமளிப்பதாக இருக்காது – அவர்கள் அமைதியாக, பார்த்தும் கேட்காமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள், மேலும் அது தான் பல குடும்பங்களில் உண்மையாக உள்ளது. அதுதான் பாதிப்பை உருவாக்கும் ஒரு பகுதி என்று நான் நினைக்கிறேன் – அவர் குடும்பத்தில் நுழையும்போது, தான் என்ன என்று அவருக்கு உறுதியாகத் தெரிவதில்லை...

SB : ஆகவே, அவருக்கு எந்த மனநலப் பிரச்னையும் இல்லாவிட்டால்கூட, உறுதியற்ற ஒரு நபராகக் கருதுகிறீர்களா

PC: அது சரிதான். அதுதான் ஒரு வகையில் பாதிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்குகிறது – குடும்ப அமைப்பில் ஏதாவது ஒரு வகையில் மதிப்பளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாதது. அதன்பிறகு, துன்புறுத்தல்கள். பாலியல் துன்புறுத்தல்களுக்கான வாய்ப்பு ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம் என்றும் நான் அறிவோம். அது நிகழ்ந்தால் அதுவும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பை உருவாக்குகிறது – குறிப்பாக அவர் அதை வெளிப்படுத்த முயற்சிசெய்யும்போதோ அவருக்கு தேவையான வகையில் பாதுகாப்பு வழங்கப்படாதபோதோ; ஒருவரிடம் கூறி அவர் அதை நம்பாதபோதோ இது நிகழ்கிறது – அது மீண்டும் துன்பத்தை உருவாக்குகிறது, அது இரண்டாவது பாதிக்கும் வாய்ப்பு. மேலும் நன்கு பிணைந்திருக்காத குடும்பத்தில் அதற்குரிய பிரச்னைகள் உள்ளன. குழந்தைகளுக்காக பெற்றோர்கள் இல்லாதபோது - அது மூன்றாவது பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அது பையன்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இருக்கலாம். ஆனால் அந்தச் சிறுமி குறிப்பிட்ட பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் கொண்டிருந்தால், அதனுடன் இது இணைகிறது. பின்னர் பருவமடைதல் வருகின்றது. பருவமடைதலே பெண்களுக்கு மிகவும் நேர்விதமான மாற்றம் – எல்லா நல்ல விஷயங்களும் நடக்கின்றன, அவர் சரியான திசையில் வளர்கிறார். ஆனால் ஹார்மோன் ரீதியாக, மற்றும் மூளையில், அது குறிப்பிட்ட வகைப் பிரச்னைகளை உருவாக்குகிறது, அது குறிப்பிட்ட வகைப் பிரச்னைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது – குறிப்பாக பருவமடைதலின் போது மனச்சோர்வு பெண்களில் நான்கு மடங்கு அதிகம் உள்ளது. எனவே அது ஒரு குறிப்பாகிறது...

SB: சரி, அது அப்படியே கடந்துசெல்லவும் கவனிப்பு தேவைப்படும் நிலைக்குச் செல்லவும் எவ்வளவு வாய்ப்பு உள்ளது?

PC : அதனைக் கூறுவது கடினம்...

S: ஆனால் மருத்துவராக, உங்களுக்கு இது தெரிந்திருக்கும், 50% நிகழ்வுகள் முழு மனச்சோர்வாக மாற வாய்ப்புள்ளதா...?

PC : அது அவ்வாறு இல்லை. பருவமடைதல் என்பது பெண்களில் மனச்சோர்வை உண்டாக்கும் என்றோ அதன்பிறகு அது அவரிடம் தொடரலாம், அல்லது தொடராது என்றோ சொல்ல இயலாது. ஆனால் கூறப்பட்டது என்னவெனில் 13-14 வயதிலிருந்து 80 வயது வரை பெண்கள் நான்கு மடங்கு அதிக வீதத்தில் மனச்சோர்வு கொண்டுள்ளனர். எனவே பருவமடைதல் ஒரு வகையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஏற்கனவே பாதிக்கப்படக்கூடியவராக இருப்பவரிடம் ஒரு வேளை ஹார்மோன்கள் பாதிப்பை அதிகரிக்கலாம்.

SB: எனவே நீங்கள் அடிப்படையில்  எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன, ஆனால் பெண் குழந்தை அல்லது பெண்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை வளர்த்துக் கொள்கிற ஆபத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகம் என்று கூறுகிறீர்களா.

PC: அதன்பிறகு உங்கள் கேள்வி இனப்பெருக்க வாழ்வு நிலை பற்றியதாகதானே இருக்கப்போகிறது? பல பெண்கள் இதுபோன்ற சூழ்நிலையில் தான் வளர்க்கப்படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் படிக்கிறார்கள், பின்னர் திருமணம் செய்விக்கப்படுகிறார்கள். நகர்ப்புற, படித்த பெண்களைத் தவிர, அவர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு அறிந்தவற்றிலிருந்து வேரோடு பிடுங்கப்பட்டு அனைத்தும் அறிந்திராத சூழ்நிலையில் வைக்கப்படுகிறார்கள்.

SB: எனவே அவர்கள் அனைத்தையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.

PC: அவர்கள் முதலிலிருந்து தொடங்க வேண்டும். எனவே அவர்கள் உண்மையில் வளர்த்துக் கொண்ட எல்லாத் தொடர்புகளும் உடைக்கப்பட்டன, மேலும் அவர் ஒரு நாளுக்குள்ளோ, ஒரு வாரத்திற்குள்ளோ, முழுவதும் புதிய சூழ்நிலையில் பொருந்திக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறார்.

SB: அவர்கள் வாழ்வில் ஒரு வகையில் அந்நியராக இருக்கத் தொடர்ந்து வற்புறுத்தப்படுகிறீர்கள்.

PC: அதுசரிதான். மேலும் அது தான் பெரும் அளவில் பாதிக்கப்படும் வாய்ப்பை மீண்டும் உருவாக்குகிறது. எனவே இதுதான் எதார்த்தம், கலாசாரரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று நினைக்கும் பெரும்பாலான பெண்கள் எப்படியோ சமாளித்துவிடலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு முன்பே இதுதொடர்பான பிரச்னை இருந்தால், அவர் இதனை மிக மிக க் கடினமாகக் காண்பார். மேலும், சில நேரங்களில் அவர்கள் வெகுதூரம் நகர்ந்து செல்வார்கள். மேலும் குறிப்பாக, இந்தியாவில் கலாசாரம் என்னவெனில், ஒரு பெண் தன் கணவர் வீட்டில் நுழைந்ததும், அந்தக் குடும்பம் அவருடைய முதன்மைக் குடும்பமாகிறது, அவர்கள் தங்களுடைய பெற்றோரைச் சார்ந்திருக்கக் கூடாது; பெற்றோர்களும் ”நீ உனது புதிய குடும்பத்துடன் பொருந்திக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்கள். எனவே அந்த நபர் என்ன செய்வார்? நான் பெரும்பாலும் ஆண்களிடம் இதைக் கேட்பேன் – அதாவது உங்களுக்குத் தெரிந்த அனைத்திலிருந்தும் விலகி புதிய சூழ்நிலைக்கு செல்ல வேண்டியிருந்தால், நீங்கள் எப்படிப் பொருந்திக்கொள்வீர்கள்?

SB: இந்த விஷயத்தில் மேற்கத்தியப் பெண்கள் சிறப்பாக உள்ளனரா?

PC: இந்த வகைப் பாதிப்புகள் அவர்களுக்கு ஒருவேளை நடக்காமல் இருக்கலாம். இந்தப் பாதிப்பு நம்முடைய இந்தியச் சூழ்நிலைக்கு மிகவும் தனித்தன்மையானது. மேற்கில், கணவன் மற்றும் மனைவி சம அளவில் ஒருவரைத் தெரிந்துகொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

SB: சமநிலைக்கான உணர்வு அதிகம் உள்ளது.

PC: அதுவே சவாலானது. ஆனால் இது – பெண்கள் பல வகையான நபர்களுக்கு பொருந்திக்கொள்ள வேண்டும், மேலும் அறிந்திராத கணவருடன் இருக்க வேண்டும். அவரும் அவருடைய துணைபோன்றவரில்லை. அவரும் அந்நியர் தான்.

SB: மருத்துவராகிய உங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக NIMHANSக்கு வரும் மக்கள் பொதுவாக எந்தக் கட்டத்தில் உள்ளார்கள்?

PC: என்னைப் பொறுத்தவரை, திருமணத்துக்குப்பிறகு அவர்கள் அதிகம் வருகிறார்கள். அந்த நேரத்தில் நிறைய இளம்பெண்கள் வருவார்கள். அல்லது இன்னும் குறிப்பாக, 20 லிருந்து 30, 35 க்குள் இருப்பார்கள். திருமணமாகி இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, கணவருடைய குடும்பத்தினர் இவரிடம் பிரச்னை இருப்பதாக நினைக்கிறார்கள், அவரால் பொருந்திக்கொள்ளமுடியவில்லை, ‘அவர் நாங்கள் கூறுவதைக் கேட்பதில்லை’ என்பார்கள், அவரால் வேலை செய்ய முடியவில்லை என்பார்கள், நேற்றைக்கு ஒரு நபர் என்னிடம், தன் மனைவி தன்னுடைய சட்டைக் கழுத்துப் பட்டையைச் சரியாக துவைக்க வில்லை என்று கூடக் கூறினார். அந்தக் காரணங்களால் அவர் பிரச்னை கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே எதிர்பார்ப்பு பெரும் அளவில் உள்ளது.

SB: பிரச்னை ஆணிடம் உள்ளது என்ற தொனி தெரிகிறது.

PC: எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கும்போது, அவர் மெதுவாக இருக்கிறார், அவரால் தினசரி வேலைகளைச் செய்ய முடியவில்லை, போன்ற அடையாளம் காட்டுதல் வருகின்றன, எனவே, வலியுறுத்தல் அவரைத் துணையாகக் கருதுவதில் இல்லை, அல்லது அவருடைய குரலைக் கேட்டு அவருக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் இல்லை, வேலை செய்யும் திறனில் உள்ளது. எனவே, அது தெளிவான பாதிக்கப்படக்கூடிய நிலை என்று நான் நினைக்கிறேன். அதனை தெரிந்துகொள்வதற்கு முன்பே அந்தப் பெண் கர்ப்பமாகிவிடுகிறார். எனவே அவர் இந்த எல்லாப் பாதிப்புகளுடனும் இருக்கிறார், பெரும்பாலும் தான் குழந்தையைச் சுமப்பதா வேண்டாமா என்பதில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. இன்று என்னைச் சந்திக்க வந்த பெண், தனக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிறது என்று கூறினார். அவர் ஒரு மருந்தாளுனர். அவளுக்கு மனநலப் பிரச்னை இருந்தது, அவர் நாங்கள் இங்கே குழந்தை பெறுவது பற்றி அறிவுரை பெற வந்திருக்கிறோம் என்று கூறுகிறார். நான் கூறினேன், நீ தாயாகத் தயாராக உள்ளாயா? அவள், நான் தாயாகத் தயாராக இல்லை. ஆனால் என்னுடைய கணவர் மற்றும் என்னுடைய மாமியார் அதை விரும்புகின்றனர். எனவே  நான் அவர்கள் கூறுவதைக் கேட்கப்போகிறேன் என்று கூறினார். எனவே இந்தப் பெண் நிச்சயம் வருந்தப்போகிறார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் தாயாகத் தயாராக இல்லை, மேலும் அவருடைய மனநலப் பிரச்னைக்கு மேல் எல்லா அழுத்தங்களும் அவர்மீது சுமத்தப்படுகின்றன. எனவே இவை பாதிப்பின் வகைகள் என நான் நினைக்கிறேன்.

SB: நான் உங்களிடம் ஒரு நேரடிக் கேள்வி கேட்கிறேன். நாம் இங்கே பேசிய பெண்ணைப் போல் மனநலப் பிரச்னை உள்ள நபர் குழந்தை பெற வேண்டுமா, பெற முடியுமா, அவர் குழந்தை பெறுவது விருப்பத்துக்குரியதா? பெற்றோர் ஒருவரோ இருவருமோ மன நலப் பிரச்னைகள் கொண்டிருந்தால் அது குழந்தைக்கு மிகப்பெரிய ஆபத்தா?
 

PC: முதல் பிரச்னை திருமணம் பற்றியது. இரண்டாவது பிரச்னை குழந்தை பெறுவதைப் பற்றியது. இப்போது துணையைப் பெற்றிருப்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை; அதுபோல, குழந்தை பெறுவதும் அவனுடைய உரிமை ஆகும். எனவே, சரியான அணுகுமுறையில் அனைவரும் உரிமை கொண்டுள்ளனர். ஒருவர் திருணம் செய்வதற்கான காரணங்கள், துணையை வழங்கவும், சம அளவிலான துணைவராக இருப்பதும், உங்களைக் கவனிக்க ஒருவரையும், நீங்கள் கவனிக்க ஒருவரையும் கொண்டிருப்பதும்தான். ஒருநிலையில் திருமணத்திற்கான காரணங்கள் அவையே. ஆனால் சமூக நிலையில், அது வேறானது. அது நீங்கள் சமூகத்தில் திருமணமானவர் என்ற மரியாதையான தோற்றத்தைக் கொண்டிருப்பதாக உள்ளது. எனவே பெரும்பாலான பெற்றோர்கள்  மனநலப் பிரச்னைகள் கொண்ட பெண்களுடைய பல உண்மைகளை மறைப்பார்கள். ஆனால் பெண்ணை விட ஆணிற்கு அதில் அதிகம் உள்ளது. அவர்கள் நினைக்க்கிறார்கள், திருமணம் அதனைச்...

SB: சரி செய்யும்.

PC: அது விஷயங்களைச் சரிசெய்யும் என்பது முழுவதும் உண்மையில்லை. இரண்டாவதாக அவர்கள் நினைக்கிறார்கள்...

SB: அது உண்மையில் அதனைப் பெரிதாக்கலாம்.

PC: ஆம், காரணம், அதுபோன்ற பெண்கள் சந்திக்கும் அழுத்தம். மேலும் அவர்கள் எதிர்காலக் கணவரிடம் தன்னுடைய பிரச்னையைப்பற்றிச் சொல்லாவிட்டால் பரவாயில்லை என்று நினைப்பார்கள். ஏனெனில், அப்படிப்பட்ட ஒரு பெண்ணை யாரும் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள், மனச்சோர்வு, அழுத்தம் போன்ற சொற்களைப் பயன்படுத்துவார்கள், ஆனால் பிரச்னையைப்பற்றி உண்மையாகப் பேசமாட்டார்கள்.

SB: ஆக, அவர்கள் அவரைத் தள்ளிவிட்டுவிடுகிறார்கள்.

PC: அவர்களுடைய மனத்தில், அவர்கள் தங்களுடைய பெண்ணுக்கு நல்லது செய்வதாக நினைக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறேன். அவர்கள், தங்களுக்குப்பிறகு அவரை யார் கவனிப்பார்கள் என்று  கவலை கொண்டுள்ளார்கள். எனவே அவர்களுடைய மனத்தில் சரியானதாகத் தோன்றுவதைச் செய்கிறார்கள்.

SB: மனநலச் சவால்கள் அல்லது பிரச்னைகளைக் கருத்தில் கொள்ளும்போது பெண் குழந்தைக்கும், பின்னர் பெண்ணுக்கும் சிறந்ததை வழங்கச் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதில், நாம் இன்றைக்குச் செய்வதை விடச் சிறப்பாகப் பிரச்னைகளை எதிர்கொள்ள மருத்துவ சமூகம்  என்ன வகையான செயல்களைச் செய்ய வேண்டும்?

PC: நான் முதலில் நினைக்கும் விஷயம் குழந்தை பிறந்ததும் அதற்குப் பாதுகாப்பான சூழ்நிலையை வழங்குவதாகும்.

SB: ஆக, பெண் குழந்தை அதிக இடரில் உள்ளது, குறிப்பாக நீங்கள் சொன்னதுபோல் பருவமடைதலுக்கு முன்பு. அவர் தன்னைத் தடுப்பதாக உணரச் செய்யும் நபர்களிடம் வெளிப்படுத்தப்படுகிறார்எனவே அவர் வளரும் போது பாலியல் நடத்தைக்கு எளிதான இரையாக மாறுகிறார்.

PC: அவரை மதிப்பது, அங்கீகரிப்பது, அவர் பாதுகாக்கப்பட்டதை உறுதிப்படுத்துவது, அவருக்குப் பிரச்னை உள்ளதா என உறுதிப்படுத்துவது, அவர் பேசக்கூடிய மற்றும் கேட்கக்கூடிய இடத்தைக் கொண்டிருப்பது, அவருக்குக் கல்வி வளங்களை. பின்னணியை வழங்குவது போன்றவை அவரை மலரச்செய்யும் என்று நான் நினைக்கிறேன். அது முதல் விஷயம். இரண்டாவது, அவர் எதிர்கொள்வதற்காக அவரைப் பின்னர் தயார் செய்வது போன்றதாகும். ஹார்மோன் மாறுபாடுகளும் அவருக்குத் திறமைகளை வழங்குகின்றன. பெண்கள் பெரும்பாலும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் திறன்களைக் கொண்டிருக்க மாட்டார்கள் – ஆண்களும் கொண்டிருக்கமாட்டார்கள் – பெண்கள் இவ்வாறு செய்வதற்குக் காரணம் நீங்கள் சொன்னதுபோல் அவர்கள் குடும்பத்தின் மையமான முக்கியமான பாகம். எனவே, சமாளித்தல், தன்னுடைய உணர்வுகளைச் சிறப்பாக கையாளுவது, தன்னை அமைதிப்படுத்தக் கற்றுக் கொள்வது ஆகியன முக்கியம், ஏனெனில் அவர் பெரும் சவால்களை எதிர்கொள்ளப் போகிறார். தாய்மைக்கு அவரைத் தயார் செய்தல் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். மனநலம் சரியில்லாத பெண் கூடத் தாயாகலாம். மேலும் அவர்கள் சிறந்த தாயாக இருக்க முடியும் பல சூழ்நிலைகளை நாம் காண்கிறோம். அவர்களைத் தயார் செய்வது, மேலும் அவர் தாயாக இருக்கத் தயாராக இருக்கிறார் என்று உறுதிப்படுத்துவது ஆகியன முதன்மையான விஷயங்கள் என்று நான் நினைக்கிறேன். பாதிக்கப்படக்கூடிய இந்த வாய்ப்புகள் அனைத்துடனும், அவர் அதனைச் சமூகத்திற்காகவும் தன்னுடைய கணவர் வீட்டிற்காகவும் செய்தால், அந்தக் குழந்தை மீண்டும் இடரில் உள்ளது. தாய் மிகுந்த திறம் கொண்டவராகப் பார்க்கப்படுவது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அப்போது அவர் தன்னுடைய கருப்பையில் குழந்தையைக் கொண்டுள்ளார், பின்னர் அவர் இந்தக் குழந்தையைப் பிரச்னை கொண்டிருப்பதிலிருந்து தடுப்பதிலும் மற்றொரு நல்ல குடிமகனாக வளரச் செய்வதிலும் பெரும் திறன் கொண்டுள்ளார். எனவே, பெண்களின் அந்த வாழ்க்கைக் காலகட்டத்துக்கான கவனம் கொடுக்கப்படுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இங்கே கணவர் முக்கியப் பங்காற்றுகிறார் என்பேன். வாழ்க்கைத் துணைவர் முக்கியப் பங்களிப்பாளர் ஆவார்.

SB: எங்களுக்கு எல்லா விவரங்களும் கொடுத்ததற்கு நன்றி. நான் கோருகின்ற ஒரு விஷயம் பெண்கள் மனநலன்பற்றிப் பரந்த பார்வையாளர்களுக்கு ஏதாவது செய்தியைக் கூற விரும்புகிறீர்களா? அல்லது பெரும் பார்வையாளர்களிடையே, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறீர்களா?
 

PC: அனைவருடைய பொறுப்பு, பெண் நல்ல மனநலம் கொண்டுள்ளதை உறுதிப்படுத்துவது என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், அது ஆண்கள் என்று கூறுவேன். ஏனெனில் பெண்கள் பல வழிகளில் ஆண்களுடைய வாழ்வில் ஒரு பகுதியாக உள்ளார்கள் என்று நினைக்கிறேன். மேலும், அவர்கள் இடரின் ஒரு பகுதி என்றும் நினைக்கிறேன். எனவே பாதிக்கப்படக்கூடிய பல வாய்ப்புகள் ஆண்களால் நிகழ்கின்றன. பெண்கள் தொடர்பு கொள்ளக்கூடிய துணைவர்கள் ஆண்கள் ஆவார்கள். பெரும்பாலான நேரங்களில் தந்தை, சகோதரர்கள், துணைவர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோர் என்னுடைய இலக்குக் குழுக்களாக உள்ளார்கள் என்று கூறுவேன். பெண்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை அவர்கள் புரிந்துகொண்டால் நல்லது, கோபம் அல்லது வலி அல்லது பதற்றம், அல்லது விஷயங்களைச் செய்ய இயலாமை ஆகியவற்றைத் தாண்டி இதனைப் பார்க்க முயற்சிசெய்யவேண்டும், அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்யவேண்டும், பெண் எங்கிருந்து வருகிறார், அவர் எதற்கு உட்பட்டுள்ளார், அவருடைய திறன்கள்,  உள் வளங்கள்  என்ன, அவர் எப்படி ஆற்றலைப் பெற முயற்சி செய்கிறார், அவருடைய வலுக்குறைவில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவரை வலிமைப்படுத்தவேண்டும், அதேசமயம் பாதுகாக்கவேண்டும்…. மேலும் பெண் உண்மையில் மிக வலிமையானவர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், அவர்கள் நன்கு தாக்குப்பிடிக்க்கூடியவர்கள், மேலும், அவருக்கு மனநோயோ மனச்சோர்வோ இருந்தாலும் அந்தத் தாக்குப்பிடிக்கும்தன்மை இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும், அவர் வாழ்வதற்கு முயற்சி செய்கிறார். அவள் அமைப்புடன் போராடும் ஒருவர். எனவே ஆண்களால் அதைச் செய்யமுடிந்தால் அது சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

SB: ஆக, அடிப்படையில் , 1.3 பில்லியன் மக்களில் 50 சதவீதத்தின் ஆதரவைப் பெறவேண்டும், அது ஒரு வகையில் எதிர்விதமாகலாம், ஏனெனில் நாம் பெண்களுடைய பிரச்னையைப் பெண்களுடைய பிரச்னையாக நினைக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண்களின் உதவியைக் கோரச்சொல்கிறீர்கள். அது நிச்சயமாகப் புதிய பரிமாணத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வருகிறது. மிக்க நன்றி, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

PC: நன்றி, அது என்னுடைய மகிழ்ச்சியாகும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org