வயதானவர்களைக் கவனிப்பது சோர்வுறச் செய்வதாக இருக்கலாம்

வயதானவர்களைக் கவனிப்பது சோர்வுறச் செய்வதாக இருக்கலாம்

வயதான பெற்றோரைக் கவனிப்பது கடினமானதாகவும், உடல் மற்றும் மன வளங்களைத் திரட்ட வேண்டிய தேவையுள்ளதாகவும் இருக்கலாம். நாம் இந்தப் பகுதியில் முதியவர்களை எப்படிச் சிறப்பாகக் கவனிப்பது என்று பேச இருக்கிறோம். ஆனால் இந்தப் பாத்திரத்தை எடுப்பதற்கு முன் கவனித்துக்கொள்வோர் தங்களைத் தயார்படுத்தக் குறிப்பாக என்ன செய்யலாம்?

கவனித்துக்கொள்பவராகத் தன்னைக் கவனித்துக்கொள்வது

கவனித்துக்கொள்வோர் மனநிலைக் குறைபாடுகள் மற்றும் பதற்றத்தால்  பாதிக்கப்படும் வாய்ப்பு, மற்றவர்களைவிட இருமடங்காகும். இவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வது, கவனித்துக்கொள்வோர் அழுத்தம் மற்றும் சோர்வைத்  தவிர்க்க உதவும், மேலும் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும் சிறப்பாகக் கவனிக்கலாம்.

1.     அவர்கள் தங்களுடைய சொந்தத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவேண்டும். தாங்கள் போதிய அளவு சாப்பிடுவதையும் தூங்குவதையும் உறுதிப்படுத்தவேண்டும்.

2.     தங்கள் நேரத்தை நிர்வகிக்கவும் தங்களுடைய பல்வேறு பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தவும் ஒரு நேர அட்டவணையை உருவாக்கலாம்.

3.     தங்களை உடல்ரீதியில் கட்டுக்கோப்பாக வைக்கலாம். உடற்பயிற்சி மையத்திற்குச் செல்ல, நடைபயணத்திற்கு அல்லது யோகாவிற்குத் தினசரி இடைவேளை எடுத்துக்கொள்ளலாம்.

4.     தங்களுடைய சில வேலைகளை மற்றவர்களை வைத்துச் செய்ய உதவியைப் பெறலாம். பொருளாதாரம் அனுமதித்தால், அவர்கள் முழுநேர அல்லது பகுதிநேரக் கவனித்துக்கொள்வோரைப் பணியமர்த்தலாம், அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களை வரச் செய்து, தாங்கள் ஒய்வெடுக்கும்போது அல்லது தங்களுடைய மற்ற பொறுப்புகளைப் பார்க்கும்போதோ தங்கள் பெற்றோரைக் கவனிக்கும்படி கேட்கலாம்.

5.     தங்களால் நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை என உணர்ந்தால், ஆதரவை நாடலாம் – குடும்ப உறுப்பினர், நண்பர், உதவிமையம் அல்லது ஒரு நம்பிக்கையான மனநல நிபுணரின் உதவியை நாடலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org