நேர்காணல்: மனநலப் பிரச்னை கொண்ட ஒருவருடன் சிறப்பாகத் தொடர்பு கொள்வது எப்படி?

மனநலப்பிரச்னை கொண்ட நபர்களுடன் சிறந்த தொடர்புடன் இருந்தால், அது அவர்கள் மீட்சியடைவதில் உதவுகிறது என்பதைக் காட்டுவதற்கு ஆதாரம் உள்ளது. இருப்பினும், கவனித்துக்கொள்கிறவர்களுக்குத் தீவிர மனநோய் உடையவர்களுடன் தொடர்புகொள்வது கடினமாகத் தோன்றலாம்..  வைட் ஸ்வான் அறக்கட்டளையின் பூர்ணிமா BV, NIMHANS உதவிப் பேராசிரியர் Dr ஆர்த்தி ஜெகன்னாதன் இடையேயான இந்த உரையாடல், சிறந்த தொடர்புகொள்ளுதலுக்கான சில எளிய, எளிதில் பின்பற்றக்கூடிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

மனநலப் பிரச்னை உடைய நபர்களுடன் உரையாடும்போது கவனித்துக்கொள்கிறவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்ன

கவனித்துக்கொள்கிறவர்கள் மனநலப் பிரச்னை கொண்ட நபர்களிடமிருந்து குறைந்த எதிர்பார்ப்புகளே கொண்டுள்ளனர். சிலநேரங்களில் அவர்களுடைய தொனி, வேகம் மற்றும் மனப்பாங்கு, பெரும்பாலான பிறரால் செய்யமுடிகிற ஒரு வேலையை இவரால் செய்ய இயலவில்லை என்று மனநலப் பிரச்னை கொண்ட நபருக்குக் காட்டுவதாக இருக்கலாம். ஆனால் இது, மனநலப் பிரச்னைபற்றிய போதுமான அறிவு, புரிந்துகொள்ளல் அவர்களுக்கு இல்லை என்பதால்தான்.

கவனித்துக்கொள்கிறவர்கள் சிலர், அந்த நபரின் நோயைத் தொடர்ந்து மறுக்கலாம், மற்றவர்கள் விமர்சனமாகவும் மதிப்பிடும்படியும் இருப்பதன்மூலம் அந்த நபரைக் குணப்படுத்தத் தாங்கள் உதவுகிறோம் என்று எண்ணலாம், சில நேரங்களில், கவனித்துக்கொள்கிறவர் நீண்டகாலத்திற்கு விமர்சிப்பவராக இருந்தால் , அது அவர்களுடைய நிலையை மோசமாக்கலாம் அல்லது பழைய நிலைக்குத் திரும்புவதற்கு இட்டுச் செல்லலாம். எதிர்மறை உணர்ச்சிகள் மனநலப் பிரச்னை உடையவரைப் பின்னடையச் செய்வதைக் காட்டுவதற்கான ஆதாரங்கள் உள்ளன. எதிர்மறையாக வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் ருவருடைய மனநலனின்மீது எதிர்மறைத் தாக்கத்தையும் நேர்விதமாக வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் நேர்வித்த தாக்கத்தையும் கொண்டுள்ளன.

வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி என்பதன் பொருள் என்ன

வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சி என்பது, மனநலப் பிரச்னை உடைய நபருடன் குடும்பத்தினர் பேசும்போது பின்பற்றும் பேச்சுப் பாணி ஆகும். அது ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் ஒன்றோ சிலவோ குடும்ப உறுப்பினர்களுடைய உரையாடல் பாணியில் வெளிப்படலாம்: விமர்சித்தல், விரோதம், அதிகப் பங்களிப்பு, நேர்விதமாகக் கருதுதல் மற்றும் வாஞ்சை. முதல் மூன்றும் எதிர்மறையாக வெளிப்பட்ட உணர்ச்சிகள் கடைசி இரண்டும் நேர்வித உணர்ச்சிகள். 

எதிர்மறையான வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் குணமடைதலைப் பாதிப்பது எப்படி? 

ஜார்ஜ் பிரவுனால் நடத்தப்பட்ட ஆய்வு,  விமர்சனம், விரோதம் மற்றும் உணர்ச்சி அதிகரித்த ஈடுபாடு ஆகியவை, மற்ற சூழல் அழுத்தங்களைப் போல் பின்னடைவு மற்றும் மீள்சேர்க்கையுடன் வலிமையான இணைப்பு கொண்டுள்ளதைச் சொல்கிறது. ஸ்கிசோபெர்னியாவில் வெளிப்படுத்தப்பட்ட உணர்ச்சியின் தாக்கம் பின்னடைவின் முக்கியக் கணிப்பாகக் கண்டறியப்பட்டுள்ளது.  

கவனித்துக்கொள்கிறவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளுதலைப் பொறுத்தவரை, மனநலப் பிரச்னை உடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ன

அவர்கள் ஏற்கனவே தங்களுடைய எண்ணங்களில் குழம்பிப் போய் உள்ளதால் அவர்கள் எளிமையான, படிப்படியான சிந்தனைகளை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அவர்கள் பிறருடைய உணர்ச்சிகளுக்கும் உணர்திறன் மிக்கவர்கள். ஸ்கிசோபெர்னியா உடைய நபர்கள் சில நேரங்களில் மனப்பிரமை கொண்டுள்ளனர், முதலில் அவர்கள் தங்கள் நிலையையும் தங்களுக்கு என்ன நடக்கிறது என்றும் புரிந்துகொள்ள வேண்டும். சிலநேரங்களில் அதைப் புரிந்துகொள்வதே அவர்களுக்குக் கடினமானதாகும். எனவே நம்முடைய உரையாடல் எளிமையாக, படிப்படியாக, மெதுவாக இருப்பது முக்கியமாகும். அவரிடம் கருணை, புரிந்துகொள்ளல் செயல்களை வெளிப்படுத்தி அன்பாயிருக்கலாம், நேர்விதமான கருதுதல், பாராட்டின் மூலம் நேர்விதத் தாக்கம் கொண்டிருக்கலாம். 

இந்த வழிகாட்டுதல்கள் எல்லா வகையான மனநலப் பிரச்னைகளுக்கும் பொருந்துமா? அல்லது, குறிப்பிட்ட ஒரு மனநலப் பிரச்னையைப்பற்றிப் பேசுகிறீர்களா?

இவை பொதுவான வழிகாட்டுதல்கள், ஆனால் ஸ்கிசோபெர்னியா மற்றும் டிமென்சியா கண்டறியப்பட்ட நபர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களுடன் தொடர்புகொள்ள, சொற்றொடர்களை இன்னும் பிரித்துக் கொள்ள வேண்டும். 

புரிந்துகொள்ளலின் இந்தப் பிரச்னைகள் அந்த நபருடைய புரிந்துணரும் திறனுடன் தொடர்புடையவையா

மோசமான சமூகப் புரிந்துணர்வும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், மனநோய் உடையவர்களுடைய மோசமான சமூகப் புரிந்துணர்வு  கவனித்துக்கொள்கிறவர்களில் உயர் எதிர்மறை வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இட்டுச் செல்கிறதா அல்லது அவர்களுடைய உயர் எதிர்மறை வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகள் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுடைய அறிகுறிகள் மற்றும் மோசமான சமூகப் புரிந்துணர்வின் அறிகுறிகள் மீது தாக்கம் கொண்டுள்ளதா என்பது இன்னமும் விவாதத்தில் உள்ளது. 

மனநலப் பிரச்னை உடையவர்கள் மருந்துகளை எடுக்க மறுத்தால் அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள் என்ன செய்யலாம்?

கவனித்துக்கொள்கிறவர்கள் பொறுமை கொண்டிருக்க வேண்டும். அவர்கள் மனநலப் பிரச்னை உடைய நபர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதில் புதுமையாகச் சிந்திக்கவேண்டும். அவர்களைச் சம்மதிக்கவைப்பதில், ஊக்கப்படுத்துவதில் புதிய அணுகுமுறை வேண்டும். அவர்கள் பேரம்பேச வேண்டும் மற்றும் அவர்களுடன் நடத்தைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் – அவர்கள், “நான் மருந்து சாப்பிடுவதுபோல், நீங்களும் மருந்து சாப்பிடலாமே” என்று கூறலாம். கவனித்துக்கொள்கிறவர்கள் அவர்களிடம் மருந்து எடுப்பதன் முக்கியத்துவம், அதனை எடுக்காததன் விளைவுகளைக் கூறலாம். மருந்து உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் மனநலப் பிரச்னையையும் சரி செய்யும் என்று அவர்களிடம் விளக்கலாம். 

சிறப்பாக உரையாடச் சிரமப்படும் கவனித்துக்கொள்கிறவர்களுக்கு உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்? 

அவர்களுடைய அன்புக்குரியவர்களின்மீது நேர்விதமான எண்ணம் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது என்று நான் கூறுவேன். அவர்களுக்காகப் பேசாமல் இருப்பதும் முக்கியமானதாகும் – நீங்கள் அவரை மதிக்கப்படுகிறவராக, முடிவெடுப்பதில் பங்கெடுப்பவராக உணரச் செய்ய வேண்டும். இது பதிலுக்கு அவர்களைத் தினசரி செயல்களில் அதிக ஈடுபாட்டுடன் பங்கேற்கச்செய்யும். 

கவனித்துக்கொள்கிறவர்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் குறிப்புகள் எவையேனும் உள்ளனவா

1. அந்த நபருடைய சார்பாகப் பேசுவதைத் தவிர்க்கலாம். அவர்கள் பேசும் முன்பு இடைநிற்றலோ தாமதமோ இருந்தால், அவர்கள் பதிலளிப்பதற்குக் காத்திருக்கலாம்.  

2. அவர்கள் முன்பாகச் சிக்கலான உணர்வுத் தலைப்புகளைப் பேசுவதைத் தவிர்க்கலாம், குறிப்பாக, சிக்கலான நேரங்களில். விரிவான உரையாடல்களைத் தவிர்க்கலாம் – அவர்கள் அதனைக் குழப்பமாகக் காணலாம்.  

3. அவர்கள் எதனைப் பற்றிச் சிந்திக்கிறார்கள், அவர்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை அவர்கள் கூறும் முன்பே கணிப்பதைத் தவிர்க்கலாம். இவர்கள் தங்களுக்காக மட்டுமே பேசவேண்டும். தாங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் கூட, அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்கவேண்டும்.  

4. அவர்கள் கூறுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லையெனில் அவர்களை இன்னும் தெளிவாகப் பேசக் கேட்கலாம். மறைமுகப் பொருளைத் தாங்களே கண்டறிய முயற்சிசெய்யவேண்டாம்.

5. அவர்களுடைய நேர்வித நடத்தையைப் பாராட்டுபவராகவும் கடினமான நேரங்கள் கொண்டிருக்கும்போது ஆதரிப்பவராகவும் இருக்கலாம்.  

6. துல்லியமில்லாத, தெளிவில்லாத பேச்சுகளைத் தவிர்க்கலாம், இவை அவர்கள் அறிந்துகொள்ள, புரிந்துகொள்ளக் கடினமானவை.  

7. பொதுவான கருத்துகளான “அவன் பயனில்லாதவன்”, “அவளால் எதையும் சரியாகச் செய்ய முடியாது” போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

8. இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் பேசுவதைக் கேட்பது கடினம் என்பதால் ஒரு நேரத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே பேச வேண்டும். இது, மனநலக் குறைபாடு உடையவர் மீதான மதிப்பை அதிகரிக்கவும் உதவும்.  

9. மனநலப் பிரச்னை உடைய நபருடன் பேசலாம், ஆனால் அவர்களைப் பற்றி பேசவேண்டாம். இது வெறுப்பு, விமர்சனம் போன்ற எதிர்மறை உணர்வுகளை அவர்களிடம் குறைக்கும். 

10. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் பேசுவதற்குச் சம வாய்ப்பைப் பெற வேண்டும். மனநலக் குறைபாடு உடையவர் பேசுவதற்கு அழுத்தமாக உணர்ந்தால், அவர்கள் பேச விரும்பவில்லையெனில் அது பரவாயில்லை, ஆனால் அவர்கள் பேச விரும்பினால் மற்றவர்கள் அமைதியாகக் கேட்பார்கள் என்று கூறுவதன்மூலம் உறுதியளிக்கலாம். 

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org