பாத்திரங்கள் மாறும்போது: வயதான பெற்றோரைக் கவனித்தல்

வயது முதிர்வின் விளைவுகள் ஒரு நபரை வெவ்வேறு வழிகளில் பாதிக்கின்றன. உடல் வலிமை இழக்கிறது; எதிர்வினைகள் மெதுவாகிறது, எலும்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழக்கின்றன, பார்வை வலுவிழக்கலாம், உடல் உறுப்புகள் குறைந்த பயன்திறன் கொண்டவையாகின்றன, மேலும் இது உறுதித்தன்மைக் குறைவுக்கு இட்டுச்செல்லலாம். இதே நேரத்தில் மூளையும் படிப்படியாகச் சேதமடையத் தொடங்குகிறது; இதன்காரணமாகத்தான் வயதான நபர்கள் விஷயங்களை மறக்கத் தொடங்குகிறார்கள் அல்லது புதியவற்றைப் புரிந்துகொள்ள அல்லது செயல்படுத்தச் சிரமப்படுகிறார்கள். தூக்கத்தில் மாறுபாடு மிகப் பொதுவானது, இவை அந்த நபரின் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கலாம்.   

ஒரு வயதாகும் நபர் படிப்படியாகத் தனது குறைகின்ற உடல் மற்றும் புலனுணர்வுத் திறன்களைக் கையாள முயற்சிசெய்யலாம். ஏதேனும் உடல் அல்லது புலனுணர்வுச் சேதம் இருப்பின், அவர்கள் சுதந்தரத்தின் இழப்பு (அது சிலநேரங்களில் திடீரென நிகழலாம்), அவர்களுடைய சமூக வாழ்வு மெதுவாவது, அவர்கள் தாங்களாகவே விஷயங்களைக் கையாள இயலாமலிருப்பது, அவர்களைச் சுற்றி இருப்பவர்களைச் சார்ந்திருப்பது போன்றவற்றை அனுபவிக்கலாம்.   

வயதாகும் நபர் எந்தப் பெரும் நோயும் இல்லாமலிருந்தால், பொருந்திக் கொள்ளும் செயல்முறை மிகவும் படிப்படியாக இருக்கும், மேலும் ஒரு குறிபிட்ட காலத்திற்குள் நிகழும். சில நிகழ்வுகளில், ஓர் உடல்நிலையால் வயதான நபர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையில் பெரும்மாற்றத்தைச் செய்ய வேண்டியிருக்கலாம், அல்லது அது அவர்கள் தங்களுடைய குடும்பத்தினரைத் திடீரெனச் சார்ந்திருக்கக் காரணமாகலாம். அதுபோன்ற நிகழ்வுகளில், கவனித்துக்கொள்கிறவர்கள் மீது விரைவாகவும் சரியான நேரத்திற்கும் தகவமைத்துக் கொள்ளுகிற அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் ஏற்பாடுரீதியாக மட்டுமில்லாமல், பொருளாதார மற்றும் உணர்வுரீதியாகவும் இருக்கலாம். படிப்படியான அல்லது திடீரென்ற உடல்நலச் சரிவு, வயதான நபரை மனச்சோர்வு, பதற்றம் அல்லது மனம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படக்கூடியவராக்கிவிடலாம்.  

பெற்றோரைக் கவனித்தல்

ஒருவருடைய பெற்றோர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அவர்களைக் கவனிப்பது சவாலானதாக இருக்கலாம். அதில் செயல்முறைத் தடங்கல்கள் உள்ளன – அவர் தன்னுடைய புதிய கவனிப்புப் பொறுப்புகளைச் சேர்க்கத் தன்னுடைய நேர அட்டவணைக்கு மேலாக வேலை செய்ய வேண்டியிருக்கும், வீட்டிற்கும் பணியிடத்திற்கும் மாறிமாறிச் செல்ல வேண்டியிருக்கும், பொருளாதாரத்தைக் கையாளுதல், மற்றும் மருத்துவமனை வருகைகள் அல்லது மருந்துவக் கவனிப்புகளைக் கவனித்தில் கொள்ள வேண்டியிருக்கும். இவை அனைத்தையும், அவர் தன்னுடைய தினசரி வழக்கங்களைச் செய்வதுடன் செய்ய வேண்டும். 

இது உணர்வுரீதியாகவும் சவாலானது, ஏனெனில் அவர் தன்னுடைய சொந்த உணர்வுகளைச் சமாளிப்பதுடன் தன் பெற்றோரையும் கவனிக்கிறார், மேலும் அவர்களின் நிலையையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் படிப்படியாகக் கவனித்துக்கொள்கிறவர் என்ற பாத்திரத்திற்குள் நுழைய அவருக்குப் போதிய நேரமில்லையெனில், அது மேலும் சவாலாகலாம். அவர் தன்னுடைய பெற்றோர் தன்னுடன் வசிக்க வர வேண்டுமா, அல்லது தான் அவர்களுடன் தங்க வேண்டுமா (அவர்கள் தனித்தனியாக வாழ்ந்தால்) என்று தீர்மானிக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஒரு தொழில்முறைக் கவனித்துக்கொள்கிறவரை அமர்த்துவது குறித்துச் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைக் கவனித்துக் கொள்வார்கள் என்று கருதும் சமூக மற்றும் கலாசாரச் சுமையினை அனுபவிப்பதாகப் பல கவனித்துக்கொள்வோர் தெரிவிக்கின்றனர். குடும்ப இயங்குநிலைகள் மாறலாம், கூடுதல் அழுத்தத்தைச் சேர்க்கலாம். அவர்கள் பல பத்தாண்டுகள் தனித்திருந்தபிறகு சேர்ந்து வசிக்கத் தொடங்கினால், அவர்கள் ஆளுமை மற்றும் கலாசார வேறுபாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். 

சில கவனித்துக்கொள்வோர் உண்மையை மறுக்கத் தொடங்குவார்கள், அதேவேளையில் சிலர் அதிகம் பாதுகாகக்கூடியவர்களாக மாறித் தங்களுடைய பெற்றோரைக் கவனிப்பதன் எல்லா அம்சங்களையும் எடுத்துக் கொள்வார்கள், எதுவரையில் என்றால் வயதானவர்கள் தங்கள் மீதான பொறுப்பை இழந்ததாக உணரும்வரை. 

“வயது முதிர்வினால் வரும் உணர்வுப் பிரச்னைகளில் பெரும்பகுதி, மதிப்பை இழத்தல் ஆகும், இது நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுடன் அதிகம் வேலைசெய்பவற்றில் ஒன்று,” என்று, முதியவர்கள் கவனிப்பு ஆலோசனைச் சேவை நடத்தும் நரம்பு உளவியலாளர் தான்வி மல்லையா கூறுகிறார். “கவனித்துக்கொள்வோராக மாறும் பிள்ளைகளுக்கு, பாத்திரங்கள் மாறுவதைப் பார்ப்பது கடினமானது, ஏனெனில் அவர்கள் உணர்வுரீதியாக அதனை இப்போதுதான் ஏற்கிறார்கள். சிலநேரங்களில், தலைகீழ்ப் பாத்திரங்களுக்கு மாறுவதற்குப் போதிய நேரமிருப்பதில்லை, அது கடினமாக இருக்கலாம்.”   கவனித்துக்கொள்ளும் ஒருவர் என்ன செய்யலாம்  அவர்களுடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்கலாம்: வயதான நபர் (படிப்படியாக அல்லது வேறொருவகையில்) தன்னுடைய சுதந்தர உணர்வை இழப்பதால் சமாளிக்கச் சவால்கள் கொண்டிருக்கலாம். “பல ஆண்டுகளுக்குச் சுதந்தரமாக இருந்த ஒருவருக்கு, மற்றொரு நபரைச் சார்ந்திருப்பது கடினமானது. இந்தப் பொறுப்பிழப்புக்கு எந்தத் தயாரிப்புகளும் போதுமானதில்லை. அது உணர்வுரீதியில் தொல்லை செய்வதாக இருக்கலாம். மேலும் இதனைக் கவனித்துக்கொள்வோர் புரிந்துகொள்வது முக்கியமானதாகும்,” என்று மனநல மருத்துவர் டாக்டர் காரிமா ஶ்ரீவஸ்தா கூறுகிறார். 

திறந்த முறையில் உரையாடலாம்: அவர்கள் தங்களுடைய திடீர் வாழ்க்கை மாற்றத்தை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று கேட்கலாம். தாங்கள் எப்படி மாறிக்கொண்டிருக்கிறோம், மற்றும் தாங்கள் என்னென்ன ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறோம் என்று அவர்களுடன் பேசலாம். அவர்களுக்கு வேறு ஏதேனும் தேவையா அல்லது அவர்கள் தங்களுக்குச் செய்துகொள்ள இயலாத எதையேனும் விரும்புகிறார்களா என்று கேட்கலாம்.   

பொருளாதாரரீதியில் சுதந்தரமாக இருக்க அவர்களுக்கு உதவலாம்: முடிந்தவரையில் அவர்கள் தங்களுடைய பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டில் இருக்க அவர்களுக்கு உதவலாம்; இது அவர்களுக்கு உறுதி மற்றும் பாதுகாப்பைக் கொடுக்கலாம். அவர்களுடைய வங்கி ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள், கடன்/பற்று அட்டைகள் போன்றவற்றிற்கான அணுகலை அவர்களுக்குக் கொடுக்கலாம். அவர்களுக்கு ஏதேனும் பொருளாதாரத் தேவைகள் அல்லது கவலைகள் உள்ளனவா என்று பார்க்கலாம், மேலும் அதுபற்றி அவர்களிடம் பேசலாம். 

புதிய சூழலில் பொருந்திக்கொள்ள அவர்களுக்கு உதவலாம்: பெற்றோருடைய வாழ்க்கைச் சூழ்நிலை அவர்களுடைய உடல்நிலை காரணமாக மாற்றமடைந்தால், அவர்களுடைய புதிய சூழ்நிலைக்குப் பழக்கமாக அவர்களுக்கு உதவலாம். திட்டமிடலில் அவர்களுடன் ஆலோசனை செய்து அவர்களுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளலாம். அவர்களுடைய வாழ்விடத்தில் பழக்கமான பொருட்களைக் கொண்டிருப்பது (மரச்சாமான்கள், படங்கள், போன்றவை) அவர்கள் புதிய சூழலை ஏற்றுக்கொள்ளவும், தங்கள் வீடுபோல் உணரவும் உதவும்.

அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்ளலாம் அன்புக்குரியவர்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, அதனை, அவர்களுக்கு என்ன தேவை என்று தாங்கள் நினைக்கிறோமோ அதிலிருந்து பிரித்து வைக்கலாம். இதை அவர்களுடைய சொல் அல்லது சைகைக் குறிப்புகளிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம். எடுத்துக்காட்டாக , டிமன்ஷியாவின் பிந்தைய நிலையில் இருக்கும் நபர், தங்களுடைய பற்களை இருமுறை துலக்க விரும்பாமலிருக்கலாம்; அடிக்கடி பல்துலக்காமல் இருப்பது அவர்களுடைய பொதுநலத்தில் பெரும் வேறுபாட்டை ஏற்படுத்தப்போவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பாதபோது கவனித்துக்கொள்வோர் அவர்களை இருமுறை பல்துலக்க வற்புறுத்தினால், அது பதற்றம் மற்றும் சண்டைக்கு இட்டுச் செல்லலாம். 

பாதுகாப்பான  சூழ்நிலையை உருவாக்கலாம்: பெரும்பாலும், கவனித்துக்கொள்வோர் தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதுபோல் பெற்றோரையும் கவனிக்கிறார்கள். ஆனால் குழந்தைகளைக் கவனிப்பதற்கும் முதியவர்களைக் கவனிப்பதற்கும் இடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. நாம் குழந்தைகள் வளர வேண்டும், திறமைகளைப் பெற வேண்டும், எதிர்காலத்தில் சுதந்தரமாக வேண்டும் என்று விரும்புகிறோம். மறுபுறம், முதியவர்கள், வலிமைகுறைந்தவர்களாக மாறுகிறார்கள், அவர்கள் முன்பு கொண்டிருந்த திறன்களை மறக்கிறார்கள், காலப்போக்கில் தங்களைக் கவனிக்கக் குறைந்த திறம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது என்பதற்கு அவர்களுடைய திறமையைப் புரிந்து கொண்டு, அவர்கள் செய்வதற்கு விரும்பாத ஒன்றில் அவர்களைத் தள்ளாமல் இருப்பது என்பது பொருளாகும். அதேபோல், அவர்கள் தங்களால் கையாள இயலும் திறம் கொண்டிராத பணிகளில் போதிய ஆதரவைப் பெறுவதற்கான அமைப்பை ஏற்படுத்துவது என்றும் பொருளாகும். 

அவர்கள் மதிப்பு நிலையைத் தக்கவைத்திருப்பதை உறுதிப்படுத்தலாம்: குடும்பத்துடைய பிரச்னைகளில் தீர்மானங்களை எடுப்பதில் அவர்களை ஈடுபடுத்தலாம். அவர்கள் குடும்ப நிதியைத் திட்டமிடல் போன்ற குறிப்பிட்ட செயல்களில் ஈடுபட்டால், அதைச் செய்வதில் முடிந்தவரையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கலாம். இது அவர்களுக்கு ஒரு நோக்கத்தையும் மதிப்பான உணர்வையும் கொடுக்கும்.

அவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் முடிவுகளில் அவர்களை ஆலோசிக்கலாம்: எடுத்துக்காட்டாக, மருத்துவக் கவனிப்பைத் திட்டமிடும்போது, அவர்களுடைய விருப்பங்களைப் பார்க்கலாம். ஒரு புதிய மருத்துவரை ஆலோசிக்கும்போத அவரைப் பற்றி அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்று கேட்கலாம்: அவர்கள் வசதியாக உணர்கிறார்களா? அவர்களுக்கு ஏதேனும் கவலைகள் உள்ளனவா? 

போதிய நேரத்தை அவர்களுடன் செலவழிக்கலாம்: கவனிப்பது எப்போதும் நேரம், பொருளாதாரம் மற்றும் சக்திச் சிக்கலுடன் வருகிறது. தினசரித் தேவைகளைக் கவனிக்க ஒரு பணியாளரை நியமிக்க வசதியிருந்தால், அவர்கள் விரும்பும் இன்னொரு செயலில் அவர்களுடன் போதிய நேரத்தைச் செலவிடலாம். 

உரையாடலில் ஈடுபட அவர்களுக்கு உதவலாம்: சமூக உரையாடல்களில் ஈடுபடுவது முதியவர்களுக்குத் தங்களுடைய நோய் மற்றும் பலவீனத்தைச் சிறப்பாக எதிர்கொள்ள உதவலாம். இதனைச் செயற்படுத்த என்ன செய்ய முடியும் என்று ஆராயலாம் – முடிந்தால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை வரச் செய்வது, அல்லது அவர்களுடன் பக்கத்துப் பூங்காவிற்கு நடைபயிற்சிக்குச் செல்வது போன்றவை. இது தனிமை உணர்வினைக் குறைக்க உதவலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org