குறைபாடுகள்

வயது சார்ந்த குறைபாடுகள்

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

Q

வயது சார்ந்த குறைபாடுகள்

A

இந்தப் பிரிவில் வயது சார்ந்த குறைபாடுகளைப் பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக அல்சைமர்ஸ், டிமென்சியா போன்றவை. இந்தப் பிரச்னைகள் பொதுவாக வயதானவர்களை அதிகம் பாதிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கை ஒன்றின்படி வரும் 2050 ஆண்டில் உலகெங்கும் சுமார்  200 கோடிப்பேர்  60 வயதுக்கு மேலானவர்களாக இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேலானவர்களில் சுமார் 15% பேருக்கு மன நலம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதும் காணப்பட்டுள்ளது.

அல்சைமர்ஸ் என்பது சிதைவு வகையைச் சேர்ந்த ஒரு நோயாகும், வயதாக ஆக இதன் தாக்கம் அதிகரிக்கிறது, இதனால் பாதிக்கப்பட்டவருடைய ஞாபகத் திறனும் சுதந்திரமாகச் செயல்படும் திறனும் வெகுவாகக் குறைகிறது. டிமென்சியா என்பது ஞாபகசக்தி, சிந்தனை மற்றும் நடந்துகொள்ளும் விதத்தில் சரிவுகளை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும், இது தினசரி நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கிறது.

இந்தப் பிரச்னைகளைப் பற்றி, அவற்றின் காரணங்களைப் பற்றி, அறிகுறிகளைப் பற்றி, அவற்றைக் கண்டறிவது பற்றி, சிகிச்சை அளிப்பது பற்றி, இந்தப் பிரச்னை கொண்டவர்களை நீங்கள் எப்படிக் கவனித்துக் கொண்டு உதவி செய்யலாம் என்பது பற்றி இந்தப் பிரிவில் நீங்கள் வாசித்துப் புரிந்து கொள்ளலாம்.

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org