சொல் சாராத கற்றல் குறைபாடு

Q

சொல் சாராத கற்றல் குறைபாடு என்றால் என்ன?

A

சொல் சாராத கற்றல் குறைபாடு (NVLD) என்பது, அருவச் சிந்தனை மற்றும் இட உறவுகள் (முப்பரிமாண உலகத்தில் காணுதல் அல்லது தொடுதலின்மூலம் பொருட்களை இடங்காண இயலுதல்) போன்ற திறன்களைப் பாதிக்கும் ஒரு நிலையாகும்.

பல நேரங்களில், கற்றல் குறைபாடுகள் என்பவை வாசித்தல், எழுதுதல் அல்லது கணக்கிடுதல் ஆகியவற்றில் வரும் பிரச்னைகள் என்று கருதப்படுகின்றன, ஆனால், NVLD கொண்ட குழந்தைகளுக்கு இந்தப் பகுதிகளில் திறன்களோ ஆர்வமோ குறைவாக இருப்பதில்லை. NVLD கொண்ட குழந்தைகள் முகக் குறிப்புகள், குரலின் தொனி, அல்லது உடல் மொழி போன்ற சொல் சாராத குறிப்புகளை அடையாளம் காண்பதற்கு மற்றும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படுகிறார்கள். NVLD கற்றல் திறன்களை ஓரளவுக்குப் பாதிக்கிறது, இது ஒரு குழந்தையின் சமூக வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடும்.

NVLD கொண்ட சில குழந்தைகளுக்கு நல்ல மொழித் திறன்கள் இருக்கின்றன, ஆனால், தகவல்களை அலசுவதற்கு, சிக்கலான கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படுகிறார்கள். NVLD கொண்ட குழந்தைகள் நிறைய பேசக்கூடும், ஆனால், இவர்கள் சமூகக் குறிப்புகளைத் தவறவிடுகிறார்கள். இதனால் சமூகச் சூழல்களில் தவறான புரிந்துகொள்ளல்கள் உண்டாகலாம். 

Q

NVLDயின் அடையாளங்கள் என்ன?

A

NVLDயின் முதன்மையான அறிகுறிகள், மோசமான சமூகத் திறன்கள் மற்றும் சொல் சாராத தகவல் தொடர்பில் பிரச்னைகள். அதேசமயம், இவர்களிடம் வேறு அறிகுறிகளும் காணப்படலாம். NVLD கொண்ட ஒரு குழந்தை:

  • தகவலை நினைவில் வைத்துக்கொள்ளலாம், ஆனால், அது ஏன் முக்கியம் என்று தெரிந்துகொள்ளாமலிருக்கலாம்
  • சொற்களைப் புரிந்துகொள்ளச் சிரமப்படலாம் 
  • உரையாடலின்போது திடீரென்று தலைப்புகளை மாற்றலாம்  
  • சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு முறையில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளாமலிருக்கலாம், பேசாமலிருக்கலாம்  
  • சிறிய தகவல்களில் கவனம் செலுத்திக்கொண்டு பெரிய பார்வையை மறந்துவிடலாம்  
  • அருவச் சொற்களால் சிந்திக்க இயலாமலிருக்கலாம்  
  • ஒழுங்கற்று அல்லது ஒருங்கிணைப்பற்றுச் செயல்படலாம்
  • சொல் சார்ந்த மற்றும்/அல்லது சொல் சாராத வெளிப்பாடுகளைப் போன்ற சமூகக் குறிப்புகளைக் கவனிக்காமல் விட்டுவிடலாம்  
  • மக்களுக்கு மிக அருகாக நிற்கலாம்  
  • மோசமான சமூகத் திறன்களைக் கொண்டிருக்கலாம்
  • மாற்றங்களுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளச் சிரமப்படலாம்
  • பெற்றோர் அல்லது தன்னைக் கவனித்துக்கொள்ளும் மற்றவர்களை அதீதமாகச் சார்ந்திருக்கலாம்  

Q

NVLD ஒரு குழந்தையை எப்படிப் பாதிக்கிறது?

A

NVLDயானது ஒவ்வொரு குழந்தையையும் வெவ்வேறுவிதமாகப் பாதிக்கிறது; பாதிக்கப்படக்கூடிய சில திறன்கள்:

  • கருத்தாக்கத் திறன்கள்: பெரிய கருத்தாக்கங்களை, பிரச்னைகளைத் தீர்த்தல் மற்றும் காரணம்-மற்றும்-விளைவு உறவுகளைப் புரிந்துகொள்வதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கலாம்.
  • இயக்கத் திறன்கள்: ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கத்தில் இவர்களுக்குப் பிரச்னைகள் வரலாம்.
  • பார்வை-இடத் திறன்கள்: காட்சிப்பூர்வமான தோற்றம், காட்சியைச் செயல்முறைப்படுத்தல் மற்றும் இடம்சார்ந்த உறவுகளில் இவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கலாம்.
  • சமூகத் திறன்கள்: சமூகக் குறிப்புகளைப் புரிந்துகொள்வது மற்றும் சமூகத்துக்குப் பொருந்தும்வகையில் தகவல்தொடர்புகளை நிகழ்த்துவதில் இவர்களுக்குச் சிரமங்கள் இருக்கலாம். கிண்டல் அல்லது கேலியை இவர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம்.
  • அருவச் சிந்தனை: படித்துப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பெரிய காட்சியைப் புரிந்துகொள்ளுதலில் இவர்களுக்குச் சிரமம் இருக்கலாம். NVLD கொண்ட குழந்தைகள் தகவல்களை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளலாம்; ஆனால், அவற்றுக்கு அடித்தளமாக அமையும் கருத்தாக்கங்களை இவர்கள் நன்கு புரிந்துகொள்ளாமலிருக்கலாம். தங்களுடைய எண்ணங்களைத் தொகுத்து ஒழுங்குபடுத்துவதிலும் இவர்களுக்குப் பிரச்னை இருக்கலாம்.

Q

NVLD எதனால் உண்டாகிறது?

A

NVLDக்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இதுபற்றிய தற்போதைய கோட்பாடுகள், மூளையின் பல்வேறு பகுதிகளின் செயல்பாடு மற்றும் அவை தகவல்களைச் செயல்முறைப்படுத்தும் விதத்தில் உள்ள பிரச்னைகளோடு இதனைத் தொடர்புபடுத்துகின்றன.

Q

NVLDயை அடையாளம் காணுதல்

A

NVLDயை அடையாளம் காணுவது பல நேரங்களில் சிரமமாக இருக்கலாம். இந்தக் கற்றல் குறைபாட்டை அடையாளம் காண்பது, பல படிநிலைகளைக்கொண்ட ஒரு செயல்முறையாகும். இதில் வெவ்வேறு நலப் பராமரிப்பு நிபுணர்கள் பங்கேற்கவேண்டியிருக்கலாம்: 

  • குழந்தை மருத்துவர்: ஒரு குழந்தை மருத்துவர் அறிகுறிகளை அடையாளம் காணலாம், அந்தக் குழந்தையின் பெற்றோர் ஓர் உளவியலாளரைச் சந்தித்து ஆலோசனை, மதிப்பீட்டைப் பெறவேண்டுமா என்று பரிந்துரைக்கலாம்.
  • உளவியலாளர்: ஓர் உளவியலாளர் பலவிதமான பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நடத்தி, NVLDயால் பொதுவாகப் பாதிக்கப்படும் திறன்களை அளவிடலாம், அந்தக் குழந்தைக்கு NVLD இருக்கிறதா என்று அடையாளம் காணலாம். பேச்சு மற்றும் மொழித் தேர்வுகள், காட்சி-இட ஒழுங்குபடுத்தல் தேர்வுகள் மற்றும் நுணுக்கமான மற்றும் ஒட்டுமொத்த இயக்க அசைவுகளின் தேர்வுகள் இதில் இடம்பெறுகின்றன. 

NVLD கொண்ட குழந்தைகள் அறிவாளிகளாகத் தோன்றலாம், குறிப்பாக, அவர்களுக்கு நல்ல சொல் சார்ந்த திறன் இருக்கும்போது இந்தத் தோற்றம் உருவாகிறது. அவர்களுடைய நினைவாற்றல் நன்றாக இருந்தாலும், தாங்கள் கற்றுக்கொண்டதிலிருந்து தீர்மானங்களுக்கு வருவதற்கு அவர்கள் சிரமப்படக்கூடும். இந்தக் குழந்தைகள் வளர வளர, அறிகுறிகள் இன்னும் அடையாளம் காணத்தக்கவையாக ஆகின்றன. காரணம், இவர்கள் ஒரு சூழலைத் தாங்கள் காணும் விதம் தங்களுடைய நண்பர்கள், சக மாணவர்கள் காணும் விதத்திலிருந்து மாறுபட்டிருப்பதை உணர்கிறார்கள். இதைப்பற்றி என்ன செய்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை, ஆகவே, அவர்கள் தங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று உணரக்கூடும்.

இந்தப் பிரச்னை எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு நல்லது. அப்போதுதான் குழந்தை சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் பதற்றத்தைக் குறைப்பதற்குமான பரிசோதனைகள் மற்றும் வியூகங்களைக் கண்டறிய இயலும்.

Q

இந்தப் பிரச்னையை விரைவில் அடையாளம் காண்பதற்கான தேவை

A

NVLDயை அடையாளம் காணுவது பல நேரங்களில் சிரமமாக இருக்கலாம். இந்தக் கற்றல் குறைபாட்டை அடையாளம் காண்பது, பல படிநிலைகளைக்கொண்ட ஒரு செயல்முறையாகும். இதில் வெவ்வேறு நலப் பராமரிப்பு நிபுணர்கள் பங்கேற்கவேண்டியிருக்கலாம்: 

  • குழந்தை மருத்துவர்: ஒரு குழந்தை மருத்துவர் அறிகுறிகளை அடையாளம் காணலாம், அந்தக் குழந்தையின் பெற்றோர் ஓர் உளவியலாளரைச் சந்தித்து ஆலோசனை, மதிப்பீட்டைப் பெறவேண்டுமா என்று பரிந்துரைக்கலாம்.
  • உளவியலாளர்: ஓர் உளவியலாளர் பலவிதமான பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நடத்தி, NVLDயால் பொதுவாகப் பாதிக்கப்படும் திறன்களை அளவிடலாம், அந்தக் குழந்தைக்கு NVLD இருக்கிறதா என்று அடையாளம் காணலாம். பேச்சு மற்றும் மொழித் தேர்வுகள், காட்சி-இட ஒழுங்குபடுத்தல் தேர்வுகள் மற்றும் நுணுக்கமான மற்றும் ஒட்டுமொத்த இயக்க அசைவுகளின் தேர்வுகள் இதில் இடம்பெறுகின்றன. 

NVLD கொண்ட குழந்தைகள் அறிவாளிகளாகத் தோன்றலாம், குறிப்பாக, அவர்களுக்கு நல்ல சொல் சார்ந்த திறன் இருக்கும்போது இந்தத் தோற்றம் உருவாகிறது. அவர்களுடைய நினைவாற்றல் நன்றாக இருந்தாலும், தாங்கள் கற்றுக்கொண்டதிலிருந்து தீர்மானங்களுக்கு வருவதற்கு அவர்கள் சிரமப்படக்கூடும்.

இந்தக் குழந்தைகள் வளர வளர, அறிகுறிகள் இன்னும் அடையாளம் காணத்தக்கவையாக ஆகின்றன. காரணம், இவர்கள் ஒரு சூழலைத் தாங்கள் காணும் விதம் தங்களுடைய நண்பர்கள், சக மாணவர்கள் காணும் விதத்திலிருந்து மாறுபட்டிருப்பதை உணர்கிறார்கள். இதைப்பற்றி என்ன செய்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பதில்லை, ஆகவே, அவர்கள் தங்களுக்கு உதவ யாரும் இல்லை என்று உணரக்கூடும்.

இந்தப் பிரச்னை எவ்வளவு சீக்கிரம் கண்டறியப்படுகிறதோ, அவ்வளவு நல்லது. அப்போதுதான் குழந்தை சமூகத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் பதற்றத்தைக் குறைப்பதற்குமான பரிசோதனைகள் மற்றும் வியூகங்களைக் கண்டறிய இயலும்.

Q

NVLDக்கான சிகிச்சை

A

NVLD அறிகுறிகளைக் கொண்ட ஒரு குழந்தைக்கு இந்த வியூகங்கள் உதவலாம்:

  • சமூகத் திறன்கள் குழு: இந்தக் குழுவில், பயிற்சிபெற்ற ஒரு சிகிச்சையாளர் அல்லது நிபுணரின் முன்னிலையில் குழந்தைகள் சில குறிப்பிட்ட சமூகத் திறன்களை(உரையாடல்களில் இணைதல், கேலிக்கு எதிர்வினையாற்றுதல்)க் கற்றுக்கொள்வார்கள். 
  • பெற்றோர் பழகுமுறைப் பயிற்சி: பெற்றோர் பழகுமுறைப் பயிற்சியானது, கற்றல் குறைபாடுகள் மற்றும் பிற குழந்தைப்பருவக் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுடைய பழகுமுறைகளை மேம்படுத்துவதற்காக நேர்விதமான உறுதிப்படுத்தல் முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பெற்றோருக்குக் கற்றுத்தருகிறது. 
  • பணிசார்ந்த சிகிச்சை: வெளி அனுபவங்களுக்கான சகிப்புத்தன்மையை வளர்க்க உதவுகிறது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org