சொமட்டோஃபார்ம் குறைபாடுகள் என்பவை எவை?
ஷாலினி (48) இரண்டாண்டுகளாகத் தொடர்ச்சியான தலைவலியால் துன்பப்பட்டுவருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு நெற்றிப்பொட்டில் வலி வந்தது, பின்னர் அவருடைய உச்சந்தலையில் வலி வந்தது. சில மாதங்கள் கழித்து, அவருடைய கைகளில் வலி வந்தது; விரல் நுனிகளில் கூச்சவுணர்வு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து களைப்பாகவும் உணரத்தொடங்கினார். சில நாட்கள் மற்ற நாட்களைவிடச் சிறப்பாக அமையும் என்கிறார் அவர். ஆனால், கடந்த சில வாரங்களாக, நல்ல நாட்களைவிட மோசமான நாட்கள் அதிகம். தொடர்ச்சியான வலியால், தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்கிற கவலை அவருக்கு உண்டாகிறது; இத்தனைக்கும் அவர் ஒரு பொது மருத்துவர், ஒரு நரம்பியல் நிபுணர், ஓர் இரைப்பை, குடல் மருத்துவர், ஒரு மகப்பேறு மருத்துவரைக்கூடச் சந்தித்து ஆலோசனை பெற்றுவிட்டார். அவர்கள் எல்லாரும், அவரிடம் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்கள். ஆனால், அவருடைய கவலை குறையவில்லை. அவருடைய பரிசோதனைகள், ஸ்கான்கள் எல்லாம் இயல்பாக உள்ளன. ஆனால், அவர் தொடர்ந்து தன்னுடைய உடல்நலத்தைப்பற்றிக் கவலைப்படுகிறார், இந்தக் கவலையால், தன்னுடைய அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுகிறார்.
சொமட்டோஃபார்ம் குறைபாடுகளைக் கொண்டவர்களிடம் உடல் வலி போன்ற உடல்சார்ந்த அறிகுறிகள் காணப்படுகின்றன, ஆனால், அவற்றுக்கு எந்தவிதமான உடல்சார்ந்த காரணமும் இல்லை. உடல்சார்ந்த அறிகுறிகள் இருப்பதால், பாதிக்கப்பட்டவர் ஒரு மருத்துவரிடம் சென்று பல மருத்துவப் பரிசோதனைகளை எடுத்துக்கொள்வார். அவருடைய உடல்சார்ந்த அறிகுறிகளுக்குப் பின்னாலிருக்கும் காரணத்தை மருத்துவப் பரிசோதனைகளால் கண்டறிய இயலாது. அதேசமயம், அவருடைய அறிகுறிகள் பொய்யானவை என்று பொருளில்லை; அவர் உண்மையிலேயே வலிகளை, நோவுகளை, உடல்சார்ந்த துன்பத்தின் மற்ற அறிகுறிகளை அனுபவிக்கிறார்.
சொமட்டோஃபார்ம் குறைபாடுகளின் வகைகள்
தொடர்ச்சியான சொமட்டோஃபார்ம் வலிக் குறைபாடு: இந்தப் பிரச்னை கொண்டவருடைய கைகள், கால்கள், தசைகளில் தீவிரமான வலி, தலைவலி உண்டாகிறது; இதனால் அவருடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
சொமட்டோஃபார்ம் தன்னாட்சிச் செயலின்மை:இந்தப் பிரச்னை கொண்டவருடைய உடலில் கட்டுப்படுத்த இயலாத நடுக்கங்கள், வியர்வை மற்றும் படபடப்பு ஏற்படுகிறது. அவருடைய அறிகுறிகள், அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத உறுப்புகள் அல்லது அமைப்புகளுடன் (எடுத்துக்காட்டாக, சுவாச அமைப்பு) தொடர்புடையவையாக அமைகின்றன.
ஹைப்போகோன்ட்ரியாசிஸ் :அநேகமாக எல்லாருக்கும் தங்களுடைய உடல்நலத்தைப்பற்றிய கவலைகள் அவ்வப்போது வருகின்றன: அழுத்தத்தால் தொடர்ச்சியான தலைவலிகள், முக்கியமான கூட்டங்களுக்குமுன்னால் வயிற்று வலி போன்றவை. ஆனால், ஹைப்போகோன்ட்ரியாசிஸ் பிரச்னை கொண்டோர், ஒரு சிறிய உடல்நல அறிகுறியை எடுத்துக்கொண்டு, அதை ஒரு தீவிர நோயாகக் காண்பார்கள். இவர்களுக்கு ஒரு சாதாரணத் தலைவலி வந்திருக்கும்; அதை இவர்கள் மூளையில் கட்டி என்று நினைத்துக்கொள்வார்கள். நெஞ்சில் சற்றே வலித்திருக்கும், அது இதய அதிர்ச்சியாக இருக்கலாமோ என்று நினைத்துக்கொள்வார்கள்.
இவர்களிடம் உடல்சார்ந்த நோய்க்கான எந்தச் சான்றும் இல்லாததால், இவர்கள் தங்களுடைய உடல்நிலையைப்பற்றிப் பொய் சொல்கிறார்கள், அல்லது, நாடகம் போடுகிறார்கள் என்று பிறருக்குத் தோன்றலாம். ஆனால், அவர்களுடைய துன்பம் உண்மையானது, அதற்கு உடனடியாக நிபுணருடைய உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம்.
இதற்கான காரணங்கள், அறிகுறிகள் என்னென்ன?
சொமட்டோஃபார்ம் குறைபாடுகள் பல காரணிகளால் உண்டாகலாம். எடுத்துக்காட்டாக:
சைக்கோசொமாடிக் பிரச்னைகளைக் கொண்டவர்கள் குறிப்பிடும் மிகப் பொதுவான உடல்சார்ந்த அறிகுறிகள்:
சைக்கோசொமாடிக் பிரச்னை கொண்ட ஒருவர் களைப்பாக உணரலாம், சோர்வான மனநிலையை உணரலாம், இவை மனச்சோர்வுபோல் தோன்றக்கூடிய அறிகுறிகளாகும். அவர்கள் தங்களுடைய வலியை மறைக்க, அல்லது, பதற்றத்தைக் குறைக்கப் போதைப்பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தி நிம்மதியை நாடலாம். சைக்கோசொமாடிக் குறைபாடு என்பது, அவர் அனுபவிக்கும் உளவியல் துன்பத்தின் உடல்சார்ந்த வெளிப்பாடாகும்.
சொமட்டோஃபார்ம் குறைபாடுகளுக்கான சிகிச்சை
சொமட்டோஃபார்ம் குறைபாடு கொண்டவர்கள் தங்களுடைய வலிகள் மற்றும் உடல் துன்பங்களுக்கான மூல காரணத்தைக் கண்டறிவதற்காக ஒரு பொது மருத்துவரை அணுகலாம்; அவர்களால் அதைக் கண்டறிய இயலாதபோது, யாராலும் தங்களுக்கு உதவ இயலவில்லை என்று உணரலாம். சொமட்டோஃபார்ம் குறைபாடுகளைக் கண்டறிய நிறைய நாளாகிறது; காரணம், பாதிக்கப்பட்டவர் தன்னுடைய நோயைக் கண்டறியக்கூடிய ‘சரியான மருத்துவரை’க் கண்டறிவதற்காக மிகவும் போராடுகிறார்; ஆனால், அதில் திரும்பத்திரும்பத் தோல்வியடைகிறார். இதனால் அவர்கள் களைப்பாக, எரிச்சலாக உணரலாம்; சில நேரங்களில், தங்களுக்கு உதவ யாரும் இல்லை என்பதுபோல்கூட உணரலாம்.
ஒருவருக்கு சொமட்டோஃபார்ம் குறைபாடு உள்ளதாக உறுதிப்படுத்துவதற்குமுன்னர், பின்வரும் உடல்சார்ந்த அறிகுறிகள் அவருக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்று வல்லுநர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்:
சொமட்டோஃபார்ம் குறைபாடுகளுக்கான சிகிச்சையில் பொதுவாகப் பேச்சுச் சிகிச்சையும் மருந்துகளும் இடம்பெறுகின்றன. சிகிச்சையானது வலி அல்லது துன்பத்துக்கான காரணத்தைக் கண்டறிய முனைகிறது; இது உணர்வு அல்லது பழக்கவழக்கப் பிரச்னைகளின் விளைவாக ஏற்படலாம்; அல்லது, சில சூழ்நிலைகளில், அடித்தளத்திலுள்ள ஒரு மனநலப் பிரச்னையினால் ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்குப் பரிந்துரைக்கப்படுகின்ற சிகிச்சை வகையானது, அறிவாற்றல் பழகுமுறைச் சிகிச்சையாகும். காரணம், அறிகுறிகளை உண்டாக்கும் எண்ண மற்றும் பழக்கவழக்கப் பாணிகளை உடைப்பதற்கு இது உதவுகிறது. காலப்போக்கில், உளவியல் துன்பத்துக்குச் சிகிச்சை வழங்கப்படும்போது, உடல்சார்ந்த துன்பமானது சென்றுவிடுகிறது.
அவருக்கு உடல்சார்ந்த துன்பத்துடன் தொடர்புடைய ஒரு மனநலப் பிரச்னை (எடுத்துக்காட்டாக, மனச்சோர்வு அல்லது பதற்றம்) அடித்தளத்தில் இருந்தால், அவருக்கு மருந்துகளும் தேவைப்படலாம்.
சொமட்டோஃபார்ம் குறைபாடுகளைக் கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்
ஒருவருடைய உடல்சார்ந்த நலப் பிரச்னைக்கு ஒரு மருத்துவக் காரணத்தைக் கண்டறிய இயலாதபோது, அவர் மிகவும் துன்பத்தை அனுபவிக்கலாம். அவரைக் கவனித்துக்கொள்கிறவர்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்: