டொரெட் பிரச்னை
நடுக்கங்களின் வகைகள்
டொரெட் குறைபாடுகொண்ட குழந்தைகளுக்கு இந்த இரண்டுவகை நடுக்கங்களில் ஒன்று வரலாம்: அசைவு நடுக்கங்கள் மற்றும் குரல் நடுக்கங்கள்.
அசைவு நடுக்கங்கள் |
குரல் நடுக்கங்கள் |
கண் சிமிட்டல் |
விக்கல் |
தலை அதிர்தல் |
கத்துதல் |
தோளைக் குலுக்குதல் |
தொண்டையைச் செருமுதல் |
கண்ணடித்தல் |
கோபமாகக் கத்துதல் |
விரல்களை நெகிழ்த்துதல் |
குரலை வெவ்வேறு தொனிகளில் பயன்படுத்துதல் |
நாக்கை வெளியே நீட்டுதல் |
தான் சொன்ன சொற்களை அல்லது வாக்கியங்களையே திரும்பத்திரும்பச் சொல்லுதல் |
மூக்கைத் தொடுதல் |
பிறர் சொன்ன சொற்களை அல்லது வாக்கியங்களைத் திரும்பச்சொல்லுதல் |
பிறரை முகர்ந்துபார்த்தல் |
மோசமான சொற்கள், திட்டுச்சொற்களைப் பயன்படுத்துதல் |
ஆபாசமாகச் சைகை காட்டுதல் |
|
கைகளால் சிறகடித்தல் |
|
குதித்தல் |
டொரெட் பிரச்னை எதனால் ஏற்படுகிறது?
டொரெட் பிரச்னைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. அதேசமயம், இவற்றால் இந்தக் குறைபாடு நேரிடலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்:
-
மரபு நிலைகள்: ஜீன்களில் இருக்கும் சில அசாதாரணமான விஷயங்களால் டொரெட் பிரச்னை ஏற்படலாம். ஆனால், இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள உறவைப்பற்றிய ஆய்வுகள் இன்னும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.
-
மூளைசார்ந்த பிரச்னைகள்: நரம்புத் துடிப்புகளைக் கடத்தும் டோபமைன், செரோடொனின் போன்ற வேதிப்பொருள்களின் ஏற்ற இறக்கங்கள்
டொரெட் பிரச்னை கொண்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளுதல்
டிக் குறைபாடு என்பது, ஒருவகையான கவனத்தைக் கோரும் பழக்கம் என்று பெற்றோர் நினைத்துவிடக்கூடும். ஆகவே, இந்தப் பிரச்னை வந்த குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இதைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும், மருத்துவரின் ஆதரவும் இதற்கு முக்கியம், அப்போதுதான் டொரெட் பிரச்னையை நன்கு கையாளமுடியும். பெற்றோர் ஓர் ஆதரவான குடும்பச்சூழலைப் பராமரிக்கவேண்டும். மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குத் தங்கள் குழந்தையின் பழக்கவழக்கத்தைப்பற்றி விளக்கவேண்டும். ஒருவேளை, பதற்றம் தூண்டப்படும் சூழ்நிலைகளுக்கான அடையாளங்கள் இருந்தால், குழந்தைக்கு மனத்தைத் தளர்வாக்கும் சில உத்திகளைச் சொல்லித்தரலாம்.
டொரெட் பிரச்னைக்கான சிகிச்சை மற்றும் ஆதரவு
டொரெட் பிரச்னையைக் குணப்படுத்துவது இயலாது என்றாலும், இந்தப் பிரச்னை கொண்டோர் சிகிச்சை பெறுவது அவசியம், இதன்மூலம் அவர்கள் தங்களுடைய தினசரி வேலைகளைச் சமாளிக்க இயலும். டிக்ஸைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் வழிகளில் முக்கியமானவை, மருந்துகள். யாருக்கெல்லாம் டிக்ஸ் தீவிரமாக இல்லையோ, அவர்களுக்கெல்லாம் சிகிச்சை அவசியப்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொரெட் பிரச்னைக்கான சிகிச்சையில் வழங்கப்படக்கூடிய சில தெரபிகள்:
-
பழக்கவழக்க தெரபி: பழக்கவழக்கங்களைப் பழையநிலைக்குக் கொண்டுசெல்லும் தெரபி (HRT) என்கிற ஒருவிதமான பழக்கவழக்க தெரபி டொரெட் பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு உதவுகிறது. இந்தச் சிகிச்சையில், பாதிக்கப்பட்டோர் தங்களுடைய அசௌகர்யமான உந்துதல்கள் மற்றும் டிக்ஸ்களை அடையாளம் காண்கிறார்கள், அந்த நடுக்கத்திலிருந்து மாறுபட்ட ஓர் அசைவை நிகழ்த்துகிறார்கள், அதன்மூலம் தங்களுடைய டிக்ஸைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தச் சிகிச்சையில் தன்னை அறிதல், தன்னைக் கவனித்தல், மனத்தைத் தளர்வாக்கிக்கொள்ளும் உத்திகள், போட்டியிடும் எதிர்வினைப் பயிற்சி மற்றும் தற்செயல் மேலாண்மை ஆகியவை இடம்பெறுகின்றன.
-
இந்தப் பிரச்னையோடு வரக்கூடிய ADHD மற்றும் OCD போன்ற பிரச்னைகளைக் கொண்டோருக்கு மருந்துகளும் தெரபியும் பரிந்துரைக்கப்படுகிறது.
டொரெட் பிரச்னை எப்படிக் கண்டறியப்படுகிறது?
ஒருவருக்கு டொரெட் பிரச்னை வந்திருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கு அவருடைய பிறப்புசார்ந்த விவரங்கள், அவருக்கு இந்த அறிகுறிகள் முதலில் எப்போது வந்தன எனும் விவரம், அவரது மருத்துவ வரலாறு மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை ஆராயப்படுகின்றன, இதன் அடிப்படையிலேயே ஒரு தீர்மானம் எடுக்கப்படுகிறது. பொதுவாக ஒருவருக்கு டிக் குறைபாடு வந்திருப்பதை உறுதிப்படுத்த அவருடைய மருத்துவ வரலாறை முழுமையாக ஆராய்ந்து, நரம்பியல் பரிசோதனை நிகழ்த்தினால் போதும்.
டிக்ஸின் தீவிரத்தன்மையை அளவிட யேல் சர்வதேச டிக் தீவிரத்தன்மை அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைக்கு வேறு குறைபாடுகள் எவையேனும் உள்ளனவா என்பதும் மதிப்பிடப்படுகிறது, பிரச்னையின் தீவிரத்தன்மையைப்பொறுத்து ஒரு சிகிச்சைத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
டொரெட் பிரச்னையின் அறிகுறிகள் என்ன?
தொடர்ச்சியான இயக்க மற்றும் குரல் நடுக்கங்களால் பலவிதமான துயரங்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படக்கூடும். சில குழந்தைகளுக்கு எந்தத் துயரமோ குறைபாடோ இல்லாமலிருக்கலாம், மற்ற சிலருக்கு இந்தக் குறைபாடுகள் மிதமான நிலையில் தொடங்கித் தீவிர நிலைவரை இருக்கக்கூடும். குறிப்பாக, இளம் பிள்ளைகளுக்குத் தங்களுடைய நடுக்கங்களைப்பற்றியே தெரியாமலிருக்கலாம், ஆகவே, அவர்களுக்கு எந்தத் துயரமும் இருக்காது, செயல்பாட்டில் எந்தக் குறைபாடும் தெரியாது. இத்துடன் தொடர்புடைய மிகப் பொதுவான அறிகுறிகள், ஒரு விஷயத்தில் தீவிரத்துடன் ஈடுபடுவது, கட்டாயத்துடன் செயல்படுவது, மிகையாகச் செயல்படுவது, எளிதில் கவனம் சிதறுவது, அனிச்சையாகச் செயல்படுவது போன்றவை. சமூகச்சூழலில் அசௌகர்யமாக உணர்வது, வெட்கப்படுவது, தன்னைப்பற்றியும் ஒழுக்கமற்றநிலைபற்றியும் அடிக்கடி சிந்திப்பது, சோகம் போன்றவையும் இவர்களுக்கு அடிக்கடி வருகின்றன.
டொரெட் பிரச்னை என்றால் என்ன?
டொரெட் பிரச்னை (அல்லது, டிக்ஸ் பிரச்னை) என்பது சிறுவயதில் வருகிற ஒரு நரம்பியல், மனவியல் குறைபாடாகும், இது இயங்குதிறன் மற்றும் குரல்சார்ந்த நடுக்கங்களாக அமைகிறது. நடுக்கங்கள் என்பவை, ஒரு குறிப்பிட்ட பழகுமுறையைக் காட்டும் திடீரென்ற, விரைவான, திரும்பத்திரும்ப நிகழ்கிற, ஒத்திசைவற்ற அசைவுகள், சைகைகள் அல்லது குரல்கள் ஆகும். இந்தக் குறைபாட்டை முதன்முதலாக விவரித்தவர் கைக்ஸ் டி லா டொரெட். ஒருவருக்கு டொரெட் பிரச்னை இருக்கிறது என்றால், அவருக்கு தீவிர செயல்பாட்டுக் குறைபாடு (OCD), கவனக்குறைவு மிகைச்செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) மற்றும் மனநிலைக் குறைபாடுகள் ஏற்படும் ஆபத்து உண்டு.