நான் என்னுடைய மாணவர்களுடன் ஓர் ஆரோக்கியமான உறவை வளர்ப்பது எப்படி?

  • அனைத்து நல்ல உறவுகளும் உரையாடல்களில் தொடங்குகின்றன. ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளத் தொடங்கலாம். அதன்மூலம் ஒரு நேர்விதமான உறவுக்கான அடித்தளத்தை அமைக்கலாம். உதாரணமாக, அவர்கள் மாணவர்களிடம் அவர்களுடைய திறமைகளைப்பற்றி, அவர்கள் என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் பேசத்தொடங்கலாம். சில ஆசிரியர்கள் இந்த ஆர்வங்கள், லட்சியங்களை மனத்தில் குறித்துவைத்துக்கொள்கிறார்கள், அடுத்தமுறை செய்தித்தாளில் அல்லது இணையத்தில் அதுதொடர்பான ஒரு விஷயத்தைப் பார்த்தால், அதை அந்த மாணவரிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். இதன்மூலம் அவர்களிடையிலான உறவு மேலும் வலுப்படுகிறது.

  • அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், மென்மையாக நடந்துகொள்ளவேண்டும், அதேசமயம் உறுதியாகவும் இருக்கவேண்டும். ஓர் ஆசிரியர் வருடத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய எதிர்பார்ப்புகளைத் (உதாரணமாக, வீட்டுப்பாடங்களைச் சமர்ப்பித்தல், வகுப்புக்கு வருகை தடுதல், செல்ஃபோன்கள் பயன்படுத்துதல் போன்றவைபற்றித்) தெளிவாகச் சொன்னால் அவர்கள் வகுப்பில் மிகவும் நேர்விதமான அனுபவம் இருக்கும். வருடம் செல்லச்செல்ல, அந்த உரையாடலைத் திறந்துவைத்திருக்கவேண்டும். ஆசிரியர்கள் சொல்பவை, செய்பவை இரண்டும் ஒரேமாதிரி இருக்கவேண்டும்.

  • வகுப்பில் எல்லாரும் தாங்கள் மதிக்கப்படுவதாக உணரவேண்டும், அப்படிப்பட்ட ஒரு சூழலை ஆசிரியர் ஊக்குவிக்கவேண்டும். முக்கியமாக, அனைத்து மாணவர்களையும் நியாயமாக நடத்தவேண்டும். தங்களுடைய ஆசிரியர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதில்லை என்பதை மாணவர்கள் கவனித்தால், அவர்களும் நம்பிக்கையோடு, மரியாதையோடு நடப்பார்கள்.

  • மாணவர்கள் பொதுவாகத் தங்களது செயல்திறனைப்பற்றித் தங்களுடைய ஆசிரியர்கள் சொல்வதை நம்புவார்கள்: ஆகவே, ஆசிரியர் அவர்களை ஊக்கப்படுத்திச் சில சொற்கள் சொன்னால், பெரிய இலக்குகளைத் தீர்மானித்துக்கொண்டு செயல்படுவார்கள், அதேபோ, ஆசிரியர் ஒரே ஒரு சுடுசொல் பேசிவிட்டால், அவர்களுடைய தன்னம்பிக்கை, சுயமதிப்பு பாதிக்கப்படும்.  இயன்றவரை நேர்விதமான பேச்சைப் பயன்படுத்தவேண்டும்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org