தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்: ஆண்களும் மனநலனும்

தவறான நம்பிக்கைஆண்களுக்கு எந்த மனநலப் பிரச்னைகளும் வருவதில்லைஅவர்கள் மனத்தளவில் வலுவானவர்கள்.

உண்மை: பொதுவாக எல்லா ஆண்களும் மனத்தளவில் வலுவானவர்கள் என்று மக்கள் நம்புகிறார்கள், ஏனெனில் ஓர் ஆணாதிக்கக் கலாசாரத்தில் ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுவதில்லை, ஒருவேளை அப்படி ஒருவர் தெரிவித்தாலும் பிறர் அவரைக் கேலி செய்கிறார்கள், ’பலவீனமானவன், பெண்ணைப் போன்றவன்’ என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.  இப்படித் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது தொலைநோக்கில் அவர்களுடைய மனநலனுக்குப் பாதிப்பைக் கொண்டுவரக்கூடும். 

தவறான நம்பிக்கைபெண்களைப்போலின்றி ஆண்களால் தங்களுடைய உணர்வுகளை நன்கு கையாள இயலும்.  

உண்மை:  ஒரு புகழ்பெற்ற கலாசாரக் கருத்து, உண்மையான ஆண்கள் அழுவதில்லை என்பது.     மிகத் தீவிரமான சூழ்நிலைகளில்மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, அன்புக்குரிய ஒருவருடைய இழப்பு.  இதனால், மிக மோசமான சூழ்நிலைகளைத்தவிர வேறு எப்போதும் ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதி இல்லை என்ற கருத்து உருவாகிறது.     ஆகவே பல ஆண்கள் மது, போதைப் பொருட்கள் அல்லது ஆவேசமான நடத்தை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள், இது தன்னைமட்டுமே சார்ந்திருத்தல் மற்றும், உணர்வுகளை மறுத்தல்போன்ற ஆண்மை சார்ந்த லட்சிய பிம்பங்களை ஊக்கப்படுத்துகிறது. 1

ஆண்கள் எதற்காகவும் உதவியை நாட வேண்டியதில்லைஅவர்களால் எதையும் தாங்களாகவே கையாள இயலும்.

உண்மை:  ஆண்கள் குடும்பத்துக்குப் பொறுப்பானவர்கள், தங்களுடைய குடும்பம் தொடர்பான எந்தத் தீர்மானத்தையும் எடுக்கிற பொறுப்பு அவர்களுக்கு உண்டு எனக் கலாசாரரீதியில் நம்பப்படுகிறது.  இதனால், தாங்கள் சந்திக்கும் எந்தத் துயரத்துக்கோ மனநலப் பிரச்னைக்கோ ஆண்கள் இன்னொருவரிடம் ஆலோசனை பெறுவதோ வழிகாட்டுதலை நாடுவதோ தவறு என நம்பப்படுகிறது, அப்படி செய்தால் அவர்களால் நிலைமையைச் சமாளிக்க இயலவில்லை, அவர்களுக்குத் திறமைக் குறைவு ஏற்பட்டுவிட்டது என்ற கருத்து உருவாகிறது.    

தவறான நம்பிக்கைதிருமணமானது ஓர் ஆணின் மனநலப் பிரச்னையைத் தீர்த்துவிடும்.

உண்மை:  மனநலப் பிரச்னைகளுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது, இதில்  மருந்துகள் மற்றும் / சிகிச்சைத் தலையீடுகள் இருக்கலாம்.  ஆகவே ஓர் ஆணுக்கு மனநலப் பிரச்னை இருந்தால், அவருடைய அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம், அவருக்குத் திருமணம் செய்துவைப்பதில் கவனம் செலுத்தக்கூடாது.   திருமணம் என்பது மனநலப் பிரச்னைக்கான ஒரு தீர்வு இல்லை, அவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிற பெண்ணுடைய நிலைமையை அது இன்னும் மோசமாக்கலாம்.  

பார்வை:

1-ஆண்மை மற்றும் ஆண்களின் மனநலம், கேரி R ப்ரூக்ஸ், அமெரிக்கக் கல்லூரி ஆரோக்கிய சஞ்சிகை.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org