மெனோபாஸ் (மாதவிடாய் நிற்றல்) மற்றும் மனநலம்

மாதவிடாய் நிற்றல் என்றால் என்ன?

மாதவிடாய் நிற்றல் என்பது பெண்ணின் மாதவிடாய் சுழற்சிகளின் இயற்கை உச்சநிலை ஆகும். இந்தியாவில், மாதவிடாய் நிற்றலின் சராசரி வயது 46 மற்றும் 48க்கு இடைப்பட்டது. இருப்பினும்,  வெவ்வேறு பெண்கள் அவர்களின் மருத்துவ மற்றும் குடும்பப் பாரம்பரியங்களின் படி பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் வெவ்வேறு அனுபங்களைப் பெறுகின்றனர். சில பெண்கள் மாதவிடாய் நிற்றலை 41 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட காலங்களில் உணரலாம். 40 வயதுக்கு முந்தைய மாதவிடாய் நிற்றல் முன்முதிர்வு மாதவிடாய் நிற்றல் எனக் குறிப்பிடப்படுகிறது; 52 வயதுக்குப் பிந்தைய மாதவிடாய் நிற்றல், தாமதமான மாதவிடாய் நிற்றல் எனக் கருதப்படுகிறது.

பெண்கள் மாதவிடாய் நிற்றலை 10 ஆண்டு காலகட்டம்வரை உணரலாம். அது மாதவிடாய் சுழற்சியின் அளவில் மாறுபாடுகள், ஓட்டத்தில் மாறுபாடு, ஒழுங்கற்ற கால சுழற்சி, உடல் சூடாதல் மற்றும் தூங்குவதில் தொந்தரவுகளுடன் தொடங்குகிறது. குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானதாகிறது.

மாதவிடாய் நிற்றல் பெண்களின் வாழ்க்கையின் பல களங்களில் மாறுதல்களைக் கொண்டு வருகிறது

பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு, மாதவிடாய் நிற்றல் அவர்களின் குழைந்தைகள் வளர்ந்து விட்டை விட்டுச் செல்லும் காலத்தில் ஏற்படுகிறது; அந்த வயதில்தான் அவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது கணவன் வீட்டினரின் பராமரிப்பாளர்களாக இருப்பதையோ அல்லது அவர்களின் இழப்பையோ எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் உடல்நலம் குறித்து அதிக கவனம் செலுத்தலாம், மேலும் அவர்கள் உடல்நலப் பிரச்சினைகள்: நீரிழிவு, கொழுப்பு, மாரடைப்பு ஏற்படும் இடர், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் காணலாம். வேலை செய்யும் பெண்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் நிலையில் இருக்கலாம், அவர்கள் இந்த மாறுபாடுகளால் ஏற்படும் தேவைகளை நிறைவு செய்யப் போராடலாம்.

உடல்நலப் பிரச்சினைகள்

மாதவிடாய் நிற்றலின் போது, உடல் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது. ஈஸ்ட்ரோஜன் இதயம், தோல் மற்றும் எலும்பின் நலத்திற்கு அவசியமானது, எனவே பல பெண்களுக்கு இதைச் சுற்றி சிக்கல்கள் வரலாம். எலும்புகள் வலுவற்றதாகிறது, அந்நபர் முதுகுவலி, தோள்பட்டை மற்றும் மூட்டு வலிகளை உணரலாம். சில பெண்கள் சிறுநீர் கட்டுப்பாடின்மையால் சங்கடப்பட்ட நிலைக்குள்ளாகலாம்.

பெரும்பாலான பெண்கள் தூங்குதல் தொடர்பாக பிரச்சினைகளைத் தெரிவிக்கின்றனர்; அவர்கள் தூங்குவதற்கு கடினமாக அல்லது இரவில் முழுவதும் தூங்குவதில் பிரச்சினையுடன் உள்ளனர். (ஒரு பெங்களூரைச் சேர்ந்த மகளிரியல் மருத்துவர், அவர்களின் நோயாளிகளில் 20-25 விழுக்காடு நபர்கள் இக்காலகட்டத்தில் தூக்கமின்மை குறித்து புகார் தெரிவிக்கின்றனர் என்கிறார்).

மாதவிடாய் நிற்றல் மற்றும் மனநலம்

பெரும்பாலான மாதவிடாய் நிற்றலை எதிர்நோக்கும் பெண்கள் அதற்குத் தயாராக உள்ளனர்; அவர்களால் அது கொண்டுவரும் மாற்றங்களைச் சமாளிக்க இயலும். ஆனால் மற்ற சிலருக்கு, மாதவிடாய் நிற்றல் மிக சவாலான வாழ்க்கை நிகழ்வாகிறது, அவர்கள் மனநல வல்லுநர்களின் உதவியை நாட வேண்டி இருக்கலாம்.

“சில பெண்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போது அல்லது அவர்களின் மனதில் உடல் நலத்துடனும் இளமையாக உணரும் வேளையில், அவர்கள் உடல் வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதை தீடீரென உணர்வதை உளவியல் ரீதியில் சமாளிப்பதற்கு கடினமாகக் கருதுகின்றனர். தமக்கென உயர்ந்த இலக்குகளை வைத்துள்ள பெண்கள், தங்கள் வாழ்க்கையில் முக்கியமான பகுதி ஏற்கனவே தாண்டிச் சென்றுவிட்டதாக இதனைப் பார்க்கின்றனர். இந்த உணர்தல் கவலை, துன்பம் மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தலாம்; மனம் உடல்நலத்துடன் இருக்கும் ஆனால் அவர்களின் உடல் வேறு திசைகளில் நகர்த தொடங்கியிருக்கும்,” என்று மரு சபினா ராவ், மனநல ஆலோசகர், சகாரா வோர்ல்டு மருத்துவமனை கூறுகிறார்.

மாதவிடாய் நிற்றலின் போது எவற்றை எதிர்பார்க்கலாம்

மாதவிடாய் நிற்றலின் போது, நீங்கள் ஹார்மோன், உளவியல் மற்றும் உணர்ச்சி மாறுதல்களுக்கு உட்படலாம்:

  • களைப்பு; நாள் முழுவது சோர்வாக மற்றும் குறைவான ஆற்றலுடன் உணர்தல்
  • குலைந்த தூங்கும் வடிவவிதம்
  • உடல் சூடாதல், வியர்வையாக உணர்தல்
  • படபடக்கும் இதயம் மற்றும் உணர்ச்சி மாறுதல்கள்
  • சிறுநீர் கட்டுப்பாடின்மை (எடுத்துக்காட்டாக இருமும்போது தானாக சிறுநீர் கசிதல்)
  • முதுகு மற்றும் தோள்பட்டை வலி

மிதமான அளவில் இருக்கும் போது, இவை மாதவிடாய் நிற்றலின் வழக்கமான அறிகுறிகள். ஆனால் இந்த அறிகுறிகள் எப்போது வழக்கமான நிலையைத் தாண்டுகிறது மேலும் நீங்கள் உதவியை நாட வேண்டியுள்ளது என்பதை அறிந்திருப்பது முக்கியம்.

இது வழக்கமானது


இது ‘மாதவிடாய் நிற்றல்’ மட்டுமல்ல, நீங்கள் உதவியை நாட வேண்டும்
 

 

சில நாட்களில் ஆற்றலின்றி சோர்வாக இருத்தல்

 

 

தொடர்ந்து சோர்வாக, ஆற்றலின்றி உணர்தல் மற்றும் அதிக நாட்களாக நம்பிக்கையில்லா உணர்வு, குறைந்தது இரு வாரங்களுக்கு தொடர்ந்து விட்டுவிட்டு அழுகை; தற்கொலை எண்ணம்.

நீங்கள் வாழ்க்கையை முடிக்கும் எண்ணம் எதாவது கொண்டிருந்தால், தயவுசெய்து மனநல வல்லுநரை ஆலோசிக்கவும் அல்லது உடனடியாக உதவிஎண்ணை அழைக்கவும்  .

 

 

உணர்வு மாறுபாடுகள்;  சில சமயங்களில் எரிச்சலாக, கோபமாக அல்லது சோகமாக உணர்தல்; தலைவலி மற்றும் கவனம் செலுத்துவதில் கடினம்

 

குறைந்தது இரு வாரங்களுக்கு அடிக்கடி உணர்வு மாறுதல்கள்; நம்பிக்கையில்லா உணர்வு மற்றும் சமாளிக்க இயலாத நிலை

 

 

கவலை, எரிச்சல், பசி அல்லது தூக்க நடைமுறைகளில் மாறுதல்கள்; சில நேரங்களில் பதற்றமாக அல்லது ஆற்றலற்று உணர்தல்

 

 

 

 

கவலையான எண்ணங்கள், இரண்டு அல்லது அதற்குமேல் நீடித்த பதற்றம் அல்லது சோர்வு; அல்லது எதிர்காலத்தைப் பற்றிய மிகக் குறைந்த ஆர்வம்.

 

 

வேர்வையாக உணர்தல், அல்லது ‘நடுங்கும் கைகள்’ கொண்டிருத்தல்; அல்லது சில நேரங்களில் சூடாக உணர்தல்

 

 

நீங்கள் அச்சம், பயம் அல்லது குறைந்தது 15 நிமிடங்களுக்கு திடீரென படபடவென இதயத் துடிப்பை உணர்ந்தால், உங்களுக்கு பீதி தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் ஒருமுறைக்கு மேல் பீதி தாக்குதலை உணர்ந்தால் உடனடியாக உதவியை நாடவும்.

 

மாதவிடாய் நிற்றலின்போது மனநலப் பிரச்சினைகள்

குறைந்தபட்சம் ஐந்தில் ஒரு பெண் மாதவிடாய் நிற்றலின்போது மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார். தனிப்பட்ட அல்லது குடும்ப மனச்சோர்வு பாதிப்பு வரலாறு (தாய்மையால் ஏற்படும் மனச்சோர்வு உட்பட) உடைய பெண்கள் குறிப்பாகப் பாதிக்கபடுகின்றனர்.  வல்லுநர்கள் இரவில் வியர்த்தல் மற்றும் உடல் சூடால் ஏற்படும் தூக்க பாதிப்புகள் சுகமின்மையை காரணமாகும் மேலும் அது உணர்வு நடுநிலைமையையும் பாதிக்கிறது.

பல பெண்கள் தங்கள் அறிவுத்திறன் செயல்பாடுகளிலும் பிரச்சினைகளை உணர்கின்றனர்; அவர்கள் பொருட்களை நினைவில் கொள்வது மற்றும் குறிப்பிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவதிலும் கடினமாக உணரலாம். மாதவிடாய் நிற்றல் மனச்சிதைவு, இருமனக்குழப்பம், கவலை அல்லது பீதியால் மனச்சிதைவு ஆகியவற்றை ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தூண்டலாம்.  முன்பே மனநலப் பாதிப்புகள் கொண்ட பெண்கள் பழையநிலை ஏற்படுவதால் பாதிக்கபடுவார்கள். 

மாதவிடாய்நிற்றல் ‘இயற்கையாக’ இல்லாத போது

அறுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலுக்கு உட்படும் பெண்கள் (சூலகம் நீக்கப்படுவதால் மாதவிடாய் சுழற்சிகள் முடிவுக்கு வருதல்) முன்னெச்சரிக்கை இல்லாமல் தீடீரென மாதவிடாய் நின்ற காரணத்தால் ( இயற்கையாக மாதவிடாய் நிற்றல் பத்து ஆண்டுகளாக, பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியுடன் தொடங்குகிறது) கவலையாக உணரலாம். அவர்கள் தங்கள் கருப்பை இழப்பை இயற்கையின்மையாக உணரலாம், அல்லது தங்களை பெண்ணாக இருக்கும் தன்மையை இழந்ததாவராகப் பார்க்கலாம்; ஹார்மோன் நிலைகளில் ஏற்படும் மாறுபாடுகள் எடை அதிகரிப்புகக்கு இட்டுச் சென்று உடல் தோற்றப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். அவர்களுக்கு கவலை அல்லது மனச்சோர்வின் அறிகுறிகளும் தோன்றலாம்.

இந்தவகைப் பெண்கள் அவர்கள் நல்ல அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்பு, உளவியல் ஆதரவு மற்றும் குடும்பத்தின் ஆதரவைப் பெற்றிருக்கும் போது பெரும்பாலும் சமாளிப்பதற்கு எளிதாக உணர்கின்றனர். நீங்கள் அறுவைசிகிச்சையால் மாதவிடாய் நிற்றலை உணர்ந்தால், உங்கள் எண்ணங்கள் மற்றும் சுய-தோற்றத்தினை சமாளிக்க உதவக்கூடிய ஆலோசகரைச் சந்தியுங்கள்.

குடும்பத்தின் ஆதரவு மாதவிடாய் நிற்றலைச் சமாளிப்பதற்கு உதவுகிறது

மாதவிடாய் நிற்றல் இயற்கையாக அல்லது அறுவைசிகிச்சையினால் இருந்தாலும், குடும்பத்தின் ஆதரவு – குறிப்பாகத் துணையின் ஆதரவு – பெண்ணிற்கு மாதவிடாய் நிற்றலால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்களைச் சமாளிக்க உதவுகிறது. இதோ பெண்களுக்கு இந்தச் செயல்முறையை எளிதாக்க குடும்ப என்ன செய்ய வேண்டுமென்பது:

  • பெண்கள் எதைக் கடக்கின்றனர் என்பதை குடும்பம் அறிந்திருப்பது முக்கியமானது. துணை பெண்ணை அவளது மருத்துவருடனான சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லலாம் மற்றும் அவளைக் கவனத்துக் கொள்வதில் அவளை ஆதரிக்கலாம்.
  • துணைவர் இணைந்து செய்யக் கூடிய செயல்களான நடத்தல் அல்லது சிறு ஓட்டம், அல்லது பெண்ணின் உடலை நலமாக வைத்திருக்க உதவும் வழக்கமான உடற்பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளைத் திட்டமிடலாம்.
  • பெண்ணுக்கு உணர்வுரீதியான ஆதரவு அளிக்கலாம்; அவளுடன் போதுமான நேரம் செலவழிக்கலாம்.
  • பெண் அதனைப் சமாளிப்பதற்கு கடினமாக உணரும்போது அவளுடன் உணர்வுகளைப் பகிர்தல்.
  • அவள் தாழ்ந்த மனநிலையில் இருப்பின், அதனை PMS அல்லது ‘பெண்கள் விசயம்’ என்று விட்டு விட வேண்டாம்– அவள் கடந்து கொண்டிருப்பது சோர்வாக்கக்கூடியது அல்லது அவளை மூழ்கச் செய்வது என்பதை உணர்ந்து கொள்ளவும்.

மாதவிடாய் நிற்றலின் போது மனநலத்துடன் இருத்தல்

சில வாழ்க்கை முறை மாறுபாடுகளைச் செய்வதின் மூலம் நீங்கள் மாதவிடாய் நிற்றலால் வரும் மாற்றங்களைச் சமாளித்து, மனநலத்துடன் இருக்கலாம்.

  • தொடர்ந்து உடல்நலப்பரிசோதனைகளுக்குச் செல்லுங்கள் மற்றும் தைராய்டு குறைபாடு அல்லது இனப்பெருக்க உறுப்புகளின் நோய்களின் சாத்தியங்கள் குறித்து அறிய உங்கள் மகளிரியல் மருத்துவரைப் பாருங்கள்.
  • உடற்பயிற்சி. நீங்கள் முன்னர் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும், அப்பழக்த்தை ஆரம்பிப்பதற்கு இது சரியான நேரம். யோகம் அல்லது மூச்சுப்பயிற்சி நீங்கள் நெகிழ்வுடன் இருக்கவும் எலும்புநலனைப் பராமரிக்கவும் உதவுகிறது. சூரிய ஓளியில் வெளிப்பாட்டை போதுமான அளவு பெறுங்கள்.
  • உங்கள் உடல் மாற்றமடைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் எதிர்பார்ப்புகளை அதற்கேற்ப அமையுங்கள். கவனாமானது உடல் எடையைக் குறைப்பதில் இருக்கக்கூடாது, மாறாக எடை அதிகரிக்காமல் இருப்பதில் இருக்க வேண்டும். நீங்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது எனக் கருது, உங்கள் உடலை நலத்துடன் வைப்பதைக் கைவிடாதீர்கள்.
  • உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள்; குறைந்த அளவில் அடிக்கடி உணவை உட்கொள்ளுங்கள். நார்ச்சது, இயற்கை உயர்ச்சத்துக்கள் மற்றும் தாதுஉப்புகளை உட்கொள்வதை அதிகரியுங்கள்.
  • முக முக்கியமாக, தன்னைக் கவனிப்பதற்கு நேரமெடுத்துக்கொள்ளுங்கள். சிறிது ‘எனக்கான’  நேரத்தை ஒதுக்கி, ஒரு பொழுதுபோக்கு அல்லது நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள்.
  • நீங்கள் ஆழ்ந்திருந்தால் மற்றும் சமாளிக்க இயலவில்லையெனில், உடனடியாக உங்கள் ஆலோசகர் அல்லது மனநல வல்லுநரைச் சந்தியுங்கள்.

இந்தக் கட்டுரை  from மரு சபினா ராவ், மனநல ஆலோசகர், சகாரா வேர்ல்டு மருத்துவமனை, மரு அருணா முரளிதர் , உடல்பருமன் ஆலோசகர் மற்றும் மகளிரியல் வல்லுநர், அப்பல்லோ கிராடில் ஜெயநகர், மற்றும் மரு கீதா தேசாய், கூடுதல் பேராசியர் மனநலவியல், NIMHANS, பெங்களூர் ஆகியோர்களின் உள்ளீடுகளால் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org