மனநலக் குறைபாடு உடையவர்களுக்கான சுய வேலைவாய்ப்புக்கு நிதி வழங்கல்
தீவிர மனநலக் குறைபாடுடைய பல நபர்களுக்கு நீண்ட காலச் சிகிச்சை மற்றும் மருந்துகள் தேவைப்படுகின்றன, மேலும் நோயானது அவர்கள் வாழ்வின் செழிப்பான ஆண்டுகளைப் பாதிக்கிறது. எனவே, அந்நபர் குணமடையும் வழியில் இருக்கும் போது, அவர்கள் தொழிற்பயிற்சி மற்றும் மறுவாழ்வைப் பெறலாம், அங்கு அவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புக்கான திறனுக்காக மதிப்பிடப்படுகிறார்கள். மதிப்பீடு மற்றும் நபருடைய விருப்பதின்படி, அவர்களுக்குப் பணித்திறன் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன, அல்லது சுய வேலைவாய்ப்புத் திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.
மேலும் படிக்கவும்: மனநலக் குறைபாடுடைய நபர்களுக்கான வேலை வாய்ப்புகள்
கர்நாடக மாநில அரசு குறைபாடுடைய நபர்களுக்குப் பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளது, அவை அவர்கள் தங்களுடைய சொந்தத் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன்களைப் பெற உதவுகின்றன. இந்தக் கடன்கள் குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படுகின்றன.
**இத்திட்டங்கள் மனநலப் பிரச்னை உள்ளவர்களை மன ஊனமுற்றோர் அல்லது மனநலக் குறைபாடு கொண்டோர் எனக் குறிப்பிடுகின்றன.
ஆதாரா திட்டம்
இத்திட்டம் கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத் துறையால் வழங்கப்படுகிறது. வழிகாட்டுதல்களின்படி, பார்வை ஊனம், கேட்டல் குறைபாடு, மன நல பாதிப்பு, இயங்குதல் குறைபாடு உடைய நபர்கள் மற்றும் தொழுநோய் குணமான நபர்கள் ஆகியோர் திட்டத்துக்குத் தகுதியானவர்கள்.
- நிதி உதவித் தொகை: குறைபாடுடைய தகுதியான நபர்கள் ரூ 2-5 இலட்சங்கள்வரை குறைவான வட்டி வீதத்தில் பெறலாம்.
- யார் விண்ணப்பிக்கலாம்: தகுதி வரையறை, ஆண்டு வருமானம், குறைபாட்டுச் சான்றிதழ் மற்றும் பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. திட்டம் பற்றிய மேலும் விவரங்களை இங்கே பெறவும்
உதயோகினி திட்டம்
உடல் மற்றும் மனநலக் குறைபாடு கொண்ட பெண்களுக்கான கர்நாடக அரசின் சுய வேலைத் திட்டம்.
- யார் விண்ணப்பிக்கலாம்: ஏதேனும் வடிவிலான குறைபாடுடைய பெண்கள்
- நிதி உதவித் தொகை: அவர்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள்(RRB) இடமிருந்து ரூ 1 இலட்சம் வரை கடன் பெறலாம். குறைபாடுடைய பெண்களுக்குக் கடன் பெற எந்த வருவாய் வரம்புகளும் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மாநிலப் பெண்கள் வளர்ச்சி நிறுவனம் குறைபாடுடைய பெண்களுக்கு ஒப்புதலளிக்கப்பட்ட கடனில் 30 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. அவர்கள் அடுமனைகள், பட்டு நெசவு, காலணி தயாரித்தல் போன்ற பல வருவாய் தரக் கூடியவையாகத் தெரியும் தொழில் திட்டங்களை எடுக்கலாம்.
- யாரை அணுகுவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இயக்குநரகம். விவரங்களை இங்கு பெறவும்.