பாதிக்கப்பட்டோருக்கான குறிப்புகள்

Q

எனக்கு ஏதேனும் மனம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் எந்தெந்த சூழ்நிலைகளில் எல்லாம் நான் மனநல மருத்துவமனைகள் அல்லது நர்சிங் ஹோம்களில் அனுமதிக்கப்படலாம்?

A

நீங்கள் வயது வந்தோராக இருக்கும் பட்சத்தில் நீங்களே ஒரு மருத்துவமனையை அணுகலாம், நீங்கள் சிறுவராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய பெற்றோர் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம், இந்த இரு சூழ்நிலைகளிலும் உங்களை மருத்துவமனையில்தான் சேர்த்து சிகிச்சை தரவேண்டும் என்று உங்களுடைய மருத்துவர் எண்ணினால், அவர் உங்களை ஒரு மருத்துவமனையில் சேர்க்கலாம் (பிரிவு 15,16 மற்றும் 17, மனநல ஆரோக்கியச் சட்டம் 1987 (MH சட்டம்))

Q

என்னுடைய அனுமதி இல்லாமல் யாராவது என்னை மனநல மருத்துவமனையில் சேர்க்க இயலுமா?

A

சில சூழ்நிலைகளில் உங்களுடைய அனுமதி இல்லாமலேயே யாராவது உங்களை மனநல மருத்துவமனையில் சேர்க்கலாம். உதாரணமாக, நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளக்கூடும், சுற்றியிருக்கிறவர்களைக் காயப்படுத்தக்கூடும் என்று ஒரு மருத்துவரோ என்று ஒரு மருத்துவரோ, உங்களுடைய உறவினர் ஒருவரோ, நினைத்தால், அதற்காக உங்களை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தருவதுதான் நல்லது என்று அவர்கள் கருதினால் இதற்காக அவர்கள் ஒரு மாஜிஸ்ட்ரேட்டை அணுகி ஏற்றுக்கொள்ளல் ஆணை கோரி விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு அப்படி ஒரு சிகிச்சை தேவை என்று மாஜிஸ்ட்ரேட் நினைத்தால் அவர் அதற்கான ஆணையை வெளியிடுவார், அப்போது உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் உங்களை ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கலாம். (பிரிவு 19 MH சட்டம்)

Q

தேவையில்லாமல் என்னை ஒரு மனநல மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள் என்று கருதினால், நான் என்ன செய்யலாம்?

A

தேவையில்லாமல் உங்களை ஒரு மனநல மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள் என்று கருதினால் உங்களை வீட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி நீங்கள் உங்களுடைய வழக்கறிஞருடனும் ஆலோசனை பெறலாம். இதுபோன்ற பிரச்சனை கொண்ட எல்லாருக்கும் இந்திய அரசியல் சட்டம் இலவச சட்ட ஆலோசனையை வழங்குகிறது, ஆகவே நீங்கள் வழக்கறிஞருக்குத் தரவேண்டிய கட்டணத்தை எண்ணி கவலைப்படாமல் சட்ட ஆலோசனையைக் கோரலாம். இந்த இலவச சட்ட உதவியைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் அருகிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தை அணுகவேண்டும். (பிரிவு 91, MH சட்டம்). மாநில அளவிலும் மத்திய அளவிலும் உள்ள மனித உரிமைகள் ஆணையம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவும்.

Q

நான் குணமாகிவிட்டேன் என்று உணர்ந்தால், என்னை வீட்டுக்கு அனுப்புமாறு நான் கோரலாமா?

A

மனநலப்பிரச்சனைக்காக நீங்களே ஒரு மருத்துவமனையில் சுய விருப்பத்துடன் சேர்ந்திருந்தால், அந்தப் பிரச்சனை குணமாகிவிட்டது என்று கருதும் நேரத்தில் நீங்களே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்காக விண்ணப்பிக்கலாம். நீங்கள் குணமாகிவிட்டீர்கள் என்று மருத்துவர் சான்றிதழ் வழங்கினால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் உங்களை வீட்டிற்கு அனுப்பிவிடுவார். (பிரிவு 18, MH சட்டம்)

Q

நான் வீடு செல்லவேண்டும் என்று கோரும்போது மருத்துவர் அதை நிராகரிக்க இயலுமா?

A

உங்களை வீட்டிற்கு அனுப்புவது உங்களுக்கு நல்லதல்ல என்று மருத்துவர் கருதினால், அவர் உங்களை வீட்டிற்கு அனுப்ப மறுக்கக்கூடும். ஆனால் அந்தச்சந்தர்ப்பத்தில் அவர் மட்டுமே இந்தத்தீர்மானம் எடுக்க இயலாது, கீழே காணப்படும் செயல்முறையை அவர் பின்பற்ற வேண்டும்.

Q

நான் மனநல மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவேண்டும் என்று விண்ணப்பிக்கும்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் மருத்துவர் அதை மறுக்கக்கூடும்?

A

நீங்கள் பிரச்சனையிலிருந்து இன்னும் முழுவதுமாகக் குணமாகவில்லை என்று மருத்துவர் கருதினால், நீங்கள் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்று விண்ணப்பித்து 72 மணி நேரத்திற்குள் அவர் இதற்கென்று ஒரு தனிக் குழுவை அமைக்கவேண்டும். அந்தக் குழுவில் இரண்டு மருத்துவ அலுவலர்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். இந்த இரண்டு மருத்துவர்களும் தனித்தனியே உங்களைப் பரிசோதிக்கவேண்டும். நீங்கள் இன்னும் குணமாகவில்லை, மருத்துவமனையிலேயே தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறவேண்டும் என்று அவர்களும் தீர்மானித்தால் உங்களுடைய மருத்துவர் உங்களை வீட்டிற்கு அனுப்ப மறுக்கலாம். உங்களை 90 நாட்கள் வரை மருத்துவமனையிலேயே தங்கச்சொல்லி சிகிச்சை தரலாம். உங்களுடைய மருத்துவர் இப்படித்தீர்மானிக்கும் சூழலில், நீங்கள் அந்த மனநல மருத்துவமனையில் / நர்சிங் ஹோமில் சுயவிருப்பத்தின் படி சேர்ந்தவராகக் கருதப்படமாட்டீர்கள். (பிரிவு 18(3) MH சட்டம்).

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org