உளவியல் சமூகவியல் குறைபாடுகளைக் கொண்டவர்கள் : ஓர் இந்தியப் பார்வை

உளவியல் சமூகவியல் குறைபாடுகளைக் கொண்டவர்கள் : ஓர் இந்தியப் பார்வை
Published on

கடந்த பல பத்தாண்டுகளாக, சர்வதேச நடைமுறைப்படி ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்திவருகிறது இந்தியா. மாற்றுத்திறனாளிகளைப்பற்றிய முதல் சட்டமானது 1995ல் வெளியானது; அங்கு இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், மாற்றுத்திறனாளியின் வரையறை முற்றிலும் மருத்துவ மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருந்தது: ஏழு குறைபாடுகள்மட்டுமே மாற்றுத்திறனாளிகளை வரையறுத்தன; எந்தக் குறைபாடும் 40%க்குமேல் இருக்கிறது என்பதற்கான ஒரு சான்றிதழ் கோரப்பட்டது.

2007ல் மாற்றூத்திறனாளிகளுடைய உரிமைகளுக்கான UN மாநாட்டை (UNCRPD) இந்தியா உறுதிப்படுத்தியது; இதனை அமல்படுத்துவதற்காக, மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் மசோதாவை வரையறுக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுடைய வரையறை, மாநாட்டின் கட்டுரை 1ல் CRPD வழங்கிய வரையறையைப் பெருமளவு சார்ந்து அமைந்திருந்தது: “மாற்றுத்திறனாளிகள் என்போர், நீண்டகால உடல்சார்ந்த, மனம்சார்ந்த, அறிவுசார்ந்த அல்லது உணர்வுசார்ந்த குறைபாடுகளைக் கொண்டவர்கள், இவை பல்வேறு தடைகளுடன் ஊடாடும்போது, அவர்கள் சமூகத்தில் பிறருக்கு இணையானவகையில் முழுமையான மற்றும் செயல்திறன் மிக்க பங்களிப்பை வழங்குவது பாதிக்கப்படக்கூடும்."

இந்திய மன நலச் சட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் சட்டங்களைவிட மிகப் பழையவை; பல நேரங்களில் அவை காலனி ஆட்சியின் மிச்சங்கள் என்று விவரிக்கப்படுகின்றன. உளவியல் சமூகவியல் குறைபாடுகளைக் கொண்ட நபர்களை விவரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட முதல் சொல், “கிறுக்கர்கள்”. 1987ல், இப்போது அமலில் உள்ள மன நலச் சட்டமானது “மன நலக் குறைபாடு கொண்டவர்” என்ற சொல்லை முறைப்படி வரையறுத்தது: “மனநல பாதிப்பு நீங்கலாக வேறு மனநலக் குறைபாட்டினால் சிகிச்சை தேவைப்படும் ஒருவர்”. மாற்றுத்திறனாளிகளுடைய உரிமைகள் மசோதாவின் சமீபத்திய வரைவில்கூட, “மனநலக் குறைபாட்டுக்கான ஒரு வரையறை உள்ளது: “சிந்தித்தல், மனநிலை, பார்வை, நோக்குநிலை அல்லது நினைவுத்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு, அதன்மூலம் தீர்மானமெடுத்தல், பழக்கவழக்கங்கள், எதார்த்தத்தை உணரும் திறன் அல்லது வாழ்க்கையின் இயல்பான தேவைகளை எட்டும் திறன் போன்றவை பெருமளவு பாதிக்கப்படுதல். அதேசமயம், முடக்கப்பட்ட நிலையாகிய மனநல பாதிப்பு அல்லது, ஒருவருடைய மனமானது முழுமையற்று வளர்ந்திருப்பது (அறிவானது இயல்புக்குக் குறைவாக இருப்பதன்மூலம் குறிப்பாகக் காட்சிப்படுத்தப்படுவது) அல்லாத ஒரு நிலை”. மற்ற குறைபாடுகள் குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகள், இடப்பெயர்வுக் குறைபாடுகள் போன்றவையாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவ மாதிரியிலிருந்து விலகிச்செல்வது ஓரளவு சமீபத்தில்தான் நிகழ்ந்தது. 1980ல் உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட “குறைபாடுகள், குறைகள், மற்றும் இன்மைகளின் சர்வதேச வகைப்படுத்தல்: நோயின் விளைவுகளுடன் தொடர்புடைய வகைப்படுத்தல் கையேடு” என்ற கையேட்டில் மாற்றுத்திறன் என்பது இவ்வாறு வரையறுக்கப்பட்டிருக்கிறது: “ஒரு செயலை ஒரு மனிதருக்கு இயல்பாகக் கருதப்படும் நேரத்துக்குள் செய்துமுடிப்பதைத் தடுக்கிற குறைபாட்டிலிருந்து எழும் எந்தவொரு வரம்பு அல்லது செயலிழப்பு.” மற்ற குறைபாடுகளைப்போல் உளவியல் சமூகவியல் குறைபாடு மருத்துவ மாதிரியிலிருந்து அதிகம் நகர்ந்துவரவில்லை. இதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, உலகெங்கும் ‘மன நலச் சட்டங்கள்’ என்ற சொல் பரவலாகக் காணப்படுவதுதான். பிற குறைபாடுகளை நெறிப்படுத்தும் ஒரு சட்டத்தைக் காண்பது அபூர்வம்தான். மன நலச் சட்டங்கள் தனிநபருடைய (பல நேரங்களில் வற்புறுத்தப்பட்ட) மருத்துவச் சிகிச்சையில் அதிகக் கவனம் செலுத்துகின்றன; மருத்துவ மாதிரி அணுகுமுறையில் உள்ள பிரச்னைகளில் ஒன்றை இது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது: அது குறைபாட்டைக் குணப்படுத்தும் உள்கட்டமைப்புகள் மற்றும் தலையீடுகள் அமைக்கப்படுவதை நியாயப்படுத்துகிறது, அதேசமயம், சமூகத்தில் பிறரோடு சமநிலையில் வாழ்வதற்கான அவருடைய சாத்தியங்களைப் பாதிக்கக்கூடிய பிற தடைகளை அது சரிசெய்வதில்லை. 

உளவியல் சமூகவியல் குறைபாடுகளைக் கொண்டவர்கள், அவர்களைக் கவனித்துக்கொள்கிறவர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடைய சமூகங்கள் இந்தச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்திப் புகழ்பெறச்செய்வார்கள் என நம்பப்படுகிறது. அரசாங்கம் சமீபத்தில் ‘திவ்யாங்’ என்ற சொல்லை ஏற்றுக்கொண்டிருக்கிறது; இதன்மூலம், மாற்றுத்திறனானது மருத்துவ மாதிரியைத் தாண்டி நேரடியாகத் தானம் வழங்கும் மாதிரிக்குச் சென்றுவிட்டதாகத் தோன்றுகிறது; இவர்களுடைய அடையாளங்களைப்பற்றிய வலுவான அறிக்கைகளை வெளியிடவேண்டிய நேரம் இது.

அம்பா சலேல்கர், சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். ஊனமுற்றோர் சட்டம் மற்றும் கொள்கையில் சிறப்பார்வம் கொண்டவர்.

logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org