வெளியூர் சென்று படிக்கப்போகிறீர்களா?

இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் தங்கள் பெற்றோரின் வீடுகளிலிருந்து வெளியேறுகிறார்கள். அது வளர்ச்சியின் ஓர் இயல்பான பகுதி, அவர்கள் பெரியவர்களாவதைக் காட்டும் நிகழ்வு. இன்றைய இளைஞர்கள் பிற நகரங்கள் அல்லது நாடுகளுக்குச் சென்று மேலே படிப்பதும், நல்ல வேலைகளைத் தேடிக்கொள்வதும் வழக்கமாக உள்ளது. சிலருக்கு இது மகிழ்ச்சி தருகிறது. காரணம், அவர்கள் சுதந்தரத்தை விரும்புகிறார்கள், புதிய அனுபவங்களைத் தேடுகிறார்கள். ஆனால் வேறு சிலருக்கு, இது திகைப்பூட்டுகிற சவாலாகவும் இருக்கலாம்.

ஒரு புதிய இடத்துக்குச் சென்று தன்னைப் பொருத்திக்கொள்வது, புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது, முக்கியத்துவங்களை மாற்றியமைப்பது, ஒரு சமூக வாழ்க்கையை உருவாக்கிக்கொள்வது போன்றவை இந்த நேரத்தில் நடைபெறுகின்றன. சில இளைஞர்கள் கல்லூரிகளில் தங்கிப் படிக்கவேண்டியிருக்கிறது, நேராநேரத்துக்கு எழுந்து வேலைகளைச் செய்வதும் விதிமுறைகளும் அவர்களுக்குப் புதியவையாக, கவலையுண்டாக்குபவையாக இருக்கலாம். இன்னும் சிலர் சுதந்தரமாக வாழ்கிறார்கள், அதற்கான செலவுகளைச் சமாளிக்கும் அழுத்தம் அவர்களைப் பாதிக்கக்கூடும்எப்போதும் தன் பெற்றோரிடமிருந்து தனியே வசித்திராத ஒருவர்:

  • இந்த இடமாற்றத்தால் திகைப்படையலாம்
  • ஒரு மொழித்தடையை அனுபவிக்கலாம்
  • புதியவர்களைச் சந்திப்பதுபற்றிப் பதற்றமடையலாம்
  • வீட்டைப் பிரிந்து வருந்தலாம்
  • தனிமை, குறைந்த சுய மதிப்பை அனுபவிக்கலாம்
  • தன்னால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை, ஒழுங்காகத் தூங்க இயலவில்லை என உணரலாம் 

இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கச் சில வழிகள் இங்கே:

  • விடுதியில் தங்குவதா, அல்லது தனியே சுதந்தரமாகத் தங்குவதா என்று முன்கூட்டியே தீர்மானிக்கவேண்டும், அதற்கேற்பத் தயாராகவேண்டும்
  • ஏற்கெனவே உள்ள நண்பர்களுடன் பேசி, ஒன்றாகப் புதிய இடத்துக்குச் செல்ல முயற்சிசெய்யலாம்
  • அந்தக் கல்லூரியில் உள்ள பழைய மாணவர்களுடன் பேசி, அவர்களுடைய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளலாம்
  • ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், கல்லூரியில் உள்ள மாணவர் நலப் பிரிவை அணுகலாம்
  • பகுதி நேர வேலைகளில் சேரலாம், அல்லது, குழுக்களில் இணையலாம்இதன்மூலம் புதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் நிறைய அமையும்!

பெரும்பாலான திகைப்பூட்டும் எண்ணங்களும் பயங்களும் தாற்காலிகமானவை, சரியான சமாளிக்கும் உத்திகளின்மூலம் அவற்றை வென்றுவிடலாம். அதேசமயம், இந்த எண்ணங்கள், உணர்வுகள் தொடர்ந்து நீடித்தால், தினசரி வாழ்க்கையைப் பாதிக்கத்தொடங்கினால், ஒரு மன நல நிபுணரிடம் உதவி கோரவேண்டும். சில வளாகங்களில் ஆலோசகர்கள் இருப்பார்கள், அவர்களை அணுகலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org