வளர்இளம்பருவத்தினர்மத்தியில் உடல் தோற்றப் பிரச்னைகள்

நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் மேலும் நமது உடலைக் குறித்து எப்படி உணர்கிறோம் என்பவை உடல் தோற்றத்தை அமைக்கிறது. அது நாம் நம்மை எப்படி வரையறுக்கிறோம் என்பதின் முக்கியக் கூறாக மாறுவதுடன், நமது தன்-மதிப்பு மற்றும் தன்னம்பிக்கையில் விளைவை ஏற்படுத்துகிறது. அவர்கள் தோற்றத்தில் திருப்தியடைபவர்கள், தன்மதிப்பில் உறுதியுடன், நேர்மறை உட்ல் தோற்றம் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், எப்படித் தோற்றமளிக்கிறோம் என்பதில் திருப்தியற்றவர்கள் அல்லது தனது அவர்கள் தோற்றம் மற்றும் உணர்வுகளை மாற்ற வேண்டும் என்று நம்புபவர்கள், எதிர்மறை உடல் தோற்றம் கொண்டிருக்கிறார்கள்.

அது எப்போது ஒரு பிரச்சினையாகிறது?

நம்முடைய தோற்றமளிக்கும் வழிகள் மற்றும் நம்மைப் பற்றிய உணர்வுகள் குறித்தும் நாம் அனைவரும் திருப்தியடைவதில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் சிலவற்றை அல்லது மற்றவர்கள் நாம் தோற்றமளிக்கும் வழிகளை மாற்ற விரும்புகிறோம். ஆனால் சிலருக்கு, இந்தத் திருப்தியின்மை நிரந்தரக் கவலையாக மாறுகிறது; அவர்கள் தங்களின் மற்ற பொறுப்புகள் – கல்வி, தொழில் அல்லது தினசரிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இது ஒரு உடல் தோற்றப் பிரச்சனையாகக் கருதப்படுகிறது.
உடல் தோற்றப் பிரச்சினைகள் ஆண்களையும் பெண்களையும் – வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. பெண்கள் இளமையுடன் மெலிவாக இருக்க விரும்புகின்றனர், அதே சமயம் ஆண்கள் தசைக்கட்டுடன் ஆண்மையுடன் இருக்க விரும்புகின்றனர்.

உடல் தோற்றமும் வளரிளம் பருவத்தினரும்

வளரிளம் பருவத்தினர் தங்களையும் தங்களைச் சூழ்ந்துள்ள உலகத்தையும் அடையாளம் காணும் மற்றும் புரிந்துகொள்ளும் செயல்முறையில் உள்ளனர். அவர்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் செயல்முறையிலும் அவர்களின் மாறும் உடலினைப் புரிந்து கொள்வதிலும் உள்ளனர். ஒரு வளரிளம் பருவத்தினர் அவன் அல்லது அவளுடைய உடலினை நோக்குகிறார் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன: குடும்பச் சூழல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள், விளம்பரம் மற்றும் நடைமுறையில் இருக்கும் ஆடை அலங்காரம் ஆகியவை அவற்றில் சில.

இன்று, சமூக ஊடகங்கள் வளரிளம் பருவத்தினர் அவர்கள் புகைப்படங்களுக்கு ‘லைக்’ பெறுவதின் மூலம் அவர்களின் நண்பர்களிடமிருந்து தகுதியாக்கத்தை நாடுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சில அனுபவங்கள் ஒரு வளரிளம் பருவத்தினரை எதிர்மறை உடல் தோற்றக் கருத்தை வளர்ப்பதற்கு இட்டுச் செல்லலாம் அவையாவன:

-- கேலிசெய்தல் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அவர்களின் உடலைக் குறித்த எதிர்மறைக் கருத்துக்கள், எடுத்துக்காட்டாக டாப்பா (கன்னடத்தில் குண்டு) அல்லது டிங்கு (இந்தியில் குள்ளம்)

-- பள்ளி அல்லது கல்லூரியில் அவர்கள் உடல் அளவு அல்லது வடிவத்தால் கிண்டலுக்கு உள்ளாதல்

-- ஊடங்களில் காணும் ‘சீர்மையான’ உடலிலிருந்து மாறுபட்ட உடலைக் கொண்டிருப்பது

-- கச்சிதமான மனப்பாங்கைப் பெற்றிருத்தல்

-- குறைந்த தன்-மதிப்பு அல்லது தன்னம்பிக்கை பெற்றிருத்தல்

-- கச்சிதமா மற்றும் ‘பொருத்தமாக’ தெரிய வேண்டும் என்று நண்பர்கள் குழு இயக்கங்கள் மற்றும் நட்பு அழுத்தங்கள்

மோசமான உடல்தோற்றக் கரு கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவயப்படும் மற்றும் சமூகச் சூழல்களைத் தவிர்ப்பவர்களாக மாறலாம் ஏனெனில் அவர்கள் தங்களைப் பொது இடங்களில் தோன்றுவதற்குப் பொருத்தமில்லாதவர்கள் எனக் கருதுகின்றனர். மோசமான உடல்தோற்றக் கருவைப் பற்றிய நீண்ட கால எண்ணங்கள் ஒருவரின் தினசரி வாழ்வைப் பாதித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம், அல்லது தீவிரமான நிகழ்வுகளில் சாப்பிடுவதில் குறைபாடுகள் அல்லது உடல்மாறுபாட்டுக் குறைபாடுகள் போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

மோசமான உடல் தோற்றக்கரு பற்றிய அடையாளங்கள்

ஒரு பெற்றோராக, நீங்கள் உங்கள் குழந்தைளில் மோசமான உடல்தோற்றக்கருவின் பாதிப்புகளின் அடையாளங்களைக் கவனிக்கலாம். அவையாவன:

-- எப்போதும் கண்ணாடியில் தங்களின் தோற்றத்தை அல்லது ‘குறைபாடுகளைப் பார்த்துக் கொண்டிருத்தல்

-- சமூகச் சூழல்களைத் தவிர்த்தல்

-- கலோரிகளை எண்ணுவதில் மனப்பற்று கொண்டிருத்தல், உடனடி எடைக்குறைப்பு உணவுமுறையைப் பின்பற்றல்

-- மற்றவர்களிடமிருந்து தங்கள் உடல் தோற்றங்களைக் குறித்து மீண்டும் மீண்டும் உறுதி செய்தல்

-- ‘நான் அசிங்கமாக இருக்கிறேன்’, ‘எனக்கு நன்றாக உடலமைப்பு இருப்பதற்கு விரும்புகிறேன’ இன்னும் பலவாறு தங்களின் உடலைக் குறித்து எதிர்மறையாகப் பேசுதல்

-- அழுகைக் கூட்டுவதற்காக, அழுகூட்டும் அறுவை சிகிச்சை வல்லுநரை நாடுவது பற்றிப் பேசுதல்

-- உடற்பயிற்சிக்கூடம் செல்வதில் மனப்பற்று கொண்டிருத்தல் அல்லது தங்களின் உடல்பருமனை முற்றிலும் தவிர்த்தல்

குழந்தைகள் சில நேரம் பெரியவர்களைப் போல் யோசிக்காமல் நடந்து கொள்ளலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் வீடுகளில் என்ன சாப்பிடுகிறோம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டும் அவர்களின் தோற்றம் குறித்து கச்சிதம் பார்ப்பவர்களாக இருந்தால், குழந்தைகளும் அவர்களைப் போல் நடக்கலாம். எனவே, பெற்றோர், தங்களின் புற உடல் மற்றும் தோற்றம் குறித்து, நேரடியாக மற்றும் மறைமுகமாக எப்படி உரையாடுகிறோம் என்பது குறித்து கவனமாக இருப்பது அவசியம்.

பெற்றோர் குழந்தைகள் நேர்மறை உடல்தோற்றக்கருவினை உருவாக்க உதவும் சில வழிகள் இதோ:

-- மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடல்களை – குறிப்பாகத் அவர்களின் தோற்றங்களைப் பற்றி ஒப்பிடல்களைத் தவிருங்கள்

-- உடன்பிறந்தோர், ஒன்றுவிட்ட உறவினர்களுடன் ஒப்பிடுவதை மற்றும் கேலிசெய்வதைத் தவிருங்கள்

-- குழந்தையை அவர்களின் மற்ற தகுதிகளான இரக்ககுணம், உதவும் தன்மை மற்றும் அவர்களின் திறமைகள் குறித்துப் பாராட்டுங்கள்

-- உடல்தோற்றம் குறித்துக் கேலிசெய்வதை நிறுத்துவது குறித்து குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் உரையாடுங்கள்

-- நன்றாக உண்பது மற்றும் உடற்பயிற்சிகளை குடும்ப வழக்கங்களில் ஒன்றாக ஆக்குங்கள்

பெற்றோர் தங்களின் குழந்தைகளிடம் வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்துப் பேச வேண்டும் மேலும் அவர்கள் தங்களின் உடல் மாறுபாடுகள் குறித்து அவர்களின் பிரச்சினைகளைக் குறித்து தங்களுடன் பேசலாம் என்பதை அவர்களிடம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த உள்ளடம் மரு பவுலோமி சுதிர், மருத்துவ உளவியல் வல்லுநர், NIMHANS அவர்ளின் உள்ளீடுகளால் உருவாக்கப்பட்டது.

உசாத்துணைகள்

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org