வளர்இளம்பருவத்தினர் தம்மைக் காயப்படுத்திக்கொள்ளுதல்

சங்கீதா, 16 வயதானவர், எப்போதும் புத்திசாலியான மாணவியாக இருந்து வந்தார், ஆனால் சமீபத்தில் அவளது கல்விச் செயல்பாடு குறையத் தொடங்கியது. அவளது அறிவியல் ஆசிரயர் இதைக் கவனித்ததுடன், சங்கீதா சமீபத்தில் தனிமையில் இருப்பதையும் உற்றுநோக்கினார். அவள், சங்கீதா புழுக்கமான தில்லியின் கோடைகாலத்தில் நீண்ட கைச்சட்டைகளை அணிவது விசித்திரமாக இருப்பதையும் கண்டார். வகுப்பு முடிந்தபின், அவள் சங்கீதாவை தனது அறைக்கு அழைத்துச் சென்று என்ன நடந்தது என விசாரித்தார். சங்கீதா அவளது பெற்றோரிடையேயான முரண்பாட்டை விவரிக்கும்போது உடைந்து அழுதாள். மேலும் ஆராய்ந்த போது, ஆசிரியர் சங்கீதா தனது மேற்கையை வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.

இக்கற்பனைக் கதை, உண்மை வாழ்க்கை சூழலில் இந்நிலையைக் வைப்பதன் மூலம் புரிந்துகொள்வதற்காகக் கட்டமைக்கப்பட்டது.

நாம் அனைவரும் இளம் பருவத்தினர் தங்களைத் தாங்களே வெட்டிக் கொள்வதின் மூலம், சுட்டுக் கொள்வதின் மூலம் அல்லது பிற சுயதீங்கு விழைவிக்கும் வடிவங்களால் காயப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறோம். இது தற்கொலையில்லாத தற்-காயப்படுத்தும் நடத்தை என அழைக்கப்படுகிறது, இது பொதுவாக வளரிளம் பருவத்தினர் மற்றும் 14-15 வயதான இளம் வயதுவந்தோரிடம் காணப்படுகிறது. அத்தகைய நடத்தைகள் கவனிப்பாளர் மற்றும் வல்லுநர்களுக்குச் சவலானது ஏனெனில் அதைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் கடினமானது.

தற்கொலையில்லா தற்-காயப்படுத்தலில் ஈடுபடுவோர்கள் ஏதேனும் தற்கொலை எண்ணம் இருப்பதை மறுப்பார்கள். அவர்கள் நடத்தையானது கடும் துன்பம் அல்லது எதிர்மறை எண்ணங்களை சமாளிக்க இயலாமையிலிருந்து வேர்விடுகிறது. பொதுவாக, இந்த உணர்ச்சி நிலைகள் கோபம் மற்றும் மனச்சோர்வில் உள்ளது, சில நேரங்களில் அது பல வகை உணர்ச்சிகளின் காரணங்களினாலும் இருக்கலாம். அவர்கள் அந்த நடத்தையை தங்களின் உணர்வை ஒழுங்கபடுத்த உதவுவதாகக் காண்கிறார்கள். இது குறிப்பாக ஆபாத்தானது, ஏனெனில் அவர்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டலாம், இருப்பினும் அது எப்போதும் பொருந்துவதில்லை.

தற்-காயப்படுத்தலில் ஈடுபடுபவர்கள் தங்களை நோக்கி கவனத்தைக் கவர அல்லது சூழ்நிலையை வளைக்கச் செயல்படுகின்றனர் என்பது மிகத் தவறான கருத்தாகும். இது உண்மையிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. மக்கள் தற்-காயப்படுத்தில் ஈடுபடுகின்றனர் எனென்றால்:

  • அவர்கள் தங்களின் உணர்வுத் துன்பங்களைக் கையாள முடியவில்லை மேலும் உடல் வலிகள் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர்களுக்கு உதவுகிறது.
  • அவர்கள் தம்மைப் பற்றி விட தங்களின் துன்பம்/பிரச்சினையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகின்றனர்.
  • அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பதற்காகத் தங்களைத் தாங்களே தண்டிக்க முயற்சிக்கின்றனர்

இருப்பினும், தற்-காயப்படுத்தல் என்பது பெரும்பாலும் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சிக்கலான நிகழ்வு என்பதை நினைவில் கொள்ளவது முக்கியம். ஒவ்வொரு தனிநபரும் தனித்த வகைக் காரணங்கள் (பெரும்பாலும் பல காரணங்கள்) கொண்டிருக்கின்றனர் மேலும் அத்தனிபரின் துன்ப நேரங்களில் உணர்வுடன் இருப்பது முக்கியம்.

சூழ்நிலை மற்றும் நடத்தைக் காரணிகளின் பங்கு

மேலே குறிப்பட்டது போல், தற்-காயப்படுத்தல் பல்வேறு காரணிகளுடன் தொடர்புடைய சிக்கலான நிகழ்வு. தங்களை வெட்டிக் கொள்ளும் அல்லது எரிக்கும் நபர் பெரும்பாலும் விரும்பத்தகா குழந்தைப் பருவ அனுபவங்களைப் பெற்றுள்ளார்கள். அவற்றில் உடல் மற்றும் பாலியல் துன்புறுத்தல், சீண்டல், மண வாழ்க்கை மோதல்கள் மற்றும் வீட்டில் நடைபெறும் கொடுமைகள், சில நேரங்களில் அவர்களின் பாலியல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் ஆகியவையும் அடங்கும். இது கச்சிதமான இருக்க விரும்பும், தங்களைத் தண்டிப்பதற்காக தற்-காயப்படுத்திக் கொள்ளும் இளம்பருவத்தினரிடமும் இளம்பருவத்தினரிடமும்  நிகழ்கிறது.  துன்பத்தின் காரணம் எதுவாக இருப்பினும், அந்நபருக்குத் தேவைப் படுவது என்னவெனில் உணர்வுரீதியிலான மற்றும் புரிந்துகொள்ளக் கூடிய, தீர்ப்பு வழங்கும் எண்ணிமிலாத காதுகளே ஆகும். 

ஒருவர் பார்க்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

தற்-காயப்படுத்திக் கொள்ளும் நபர்கள் தங்கள் பழக்கத்தைக் குறித்து மிக மறைமுகமா இருப்பர், எனவே அந்நபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். இருப்பினும், ஒரு வளரிளம் பருவத்தினன் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்கிறான் என்பதைக் காட்டும் சில ஆரம்ப அடையாளங்கள் உள்ளன. ஒருவர் அடிக்கடி கட்டுகள் போட்டிருந்தால் மற்றும் அடிக்கடி மறைத்து உடைகளை அணிந்தால், நீங்கள் அதுபோல் உடை அணிவதற்கான காரணங்களை விசாரிக்கலாம். காரணங்கள் பெரும்பாலும் நம்புவதற்குக் கடினமாக இருந்தால், அது, அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதின் அடையாளமாக இருக்கலாம். சில நேரங்களின், அவர்கள் தற்-காயப்படுத்தலின் பொதுவான இலக்கான அவர்களின் கைகளை மறைக்கும்படி நீண்ட கைச்சட்டைகளை அணிந்திருக்கலாம். இதை உணர்ந்து, சில நபர்கள் மேல் தொடை அல்லது கண்டுபிடிப்பதற்குக்கான கடினமான பிற பகுதிகளில் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். தங்கள் அறைகளில் தங்களைத் தாங்களே அடிக்கடி பூட்டிக் கொள்ளும் சிறுவர்கள் அல்லது அடிக்கடி பள்ளிக்கு வராதவர்களும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட நடத்தைகள் தற்-காயப்படுத்தலில் ஈடுபடும் நபர்களைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை. அவை தற்-காயப்படுத்தல் நடவடிக்கை கண்டுபிடிப்பதற்கு எப்படிக் கடினமானது என்பதைக் குறிப்பிடுபவை மட்டுமே.

தற்-காயப்படுத்தல் நடவடிக்கைக்கு சிகிச்சை அளிப்பது எப்படி?

தற்-காயப்படுத்தலுக்குச் சிகிச்சை அளிக்க ஒற்றை வழிமுறை இல்லை. அது ஒரு நபர் சந்திக்கும் தற்-காயப்படுத்தும் முடிவுக்கு இட்டுச் சென்ற குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்தது. அந்த நடத்தை மற்ற மன நலப் பிரச்சினைகளான கவலை அல்லது மனச்சோர்வு போன்றவற்றின்  விளைவாக இருந்தால், இந்தப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும். இதற்கு சிகிச்சையுடன் மருந்துகளும் தேவைப்படலாம். இருப்பினும், தற்-காயப்படுத்தல் நடத்தைக்கான சிகிச்சையானது முதன்மையாக அந்த நபர் உணர்வுத் துன்பங்களைக் கையாள உதவுதல் மற்றும் கடினமான சூழல்களைச் சமாளிக்க நல்ல வழிகளைக் கண்டிபிடித்தல் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ளது. காக்னிடிவ் நடத்தைச் சிகிச்சைகள் (CBT) மற்றும் மைன்புல்னஸ் சிகிச்சை முறை போன்றவை அந்த நபர்கள் அவர்களின் ஆரோக்கியமற்ற எண்ணங்களைக் அடையாளம் கண்டு, அவற்றை நேர்மறையான, ஆரோக்கியமனாவற்றால் பதீலீடு செய்ய உதவுகிறது. சில நிகழ்வுகளில், குடும்பத்தில் அமைதியின்மை மனத் துன்பத்தின் காரணமாக இருக்கலாம்; இங்கு அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குடும்ப கலந்துரையாடலை வைப்பது உதவலாம். 

தற்-தீங்கிழைத்தலில் ஈடுபடும் நபர்களுக்குத் தெரிந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?

தற்-தீங்கிழைத்தல் என்பது ஒருவர் கவனத்துடன் அணுக வேண்டிய உணர்வுரீதியிலான பிரச்சினையாகும். இப் பிரச்சினையை எதிர்கொள்வதில் மிகப்பெரும் பிரச்சினைகளுள் ஒன்று, இப்பிரச்சினையைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பிரச்சினை இருக்கும் நபர்கள் பற்றிய தவறான கருத்து. தற்-தீங்கிழைத்தல் பற்றி முயன்று சரியான அறிவினைப் பெறுவது மேலும் அச்சூழலை உணர்வுரீதியிலான முறையில் அணுகுவது அவசியம். தங்களைக் தாங்களே வெட்டிக் கொள்ளும் மற்றும் எரித்துக் கொள்ளும் நபர்களுக்கு பொறுமையாகக் கேட்டல் தேவை; ஒருவர் அவர்களின் பிரச்சினைகளை மதிப்பிடுவதை விட்டு அதைப் முயன்று புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்குச் சூழ்நிலை குறித்து எப்படிப் பேசுவது என்ற தெளிவில்லை எனில், தற்-தீங்கிழைத்தலில் நிபுணத்துவம் பெற்ற மனநல வல்லுநருடன் பேசுங்கள்.

இக்கட்டுரை மரு. பூர்ணிமா போலா, மருத்துவ உளவியல் துறை இணைப்பேராசியர், NIMHANS வழங்கிய உள்ளீடுகளின் உதவியால் எழுதப்பட்டது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org