பதின்பருவத்தினருடைய மூளை எப்படி வேலைசெய்கிறது?

"குடிகாரர்களை மது எப்படி மாற்றுகிறதோ, அப்படி இளைஞர்களை இயற்கை மாற்றுகிறது
– அரிஸ்டாட்டில்

வளரிளம் பருவத்தில் பல உணர்வு, நடத்தை மாற்றங்கள் வருகின்றன. இதனால், பதின் பருவத்தினரின் மனங்களும், அவர்களைச் சுற்றியுள்ள பெரியவர்களின் மனங்களும் குழப்பமடைகின்றன. பதின்பருவத்தினர் நினைத்ததைச் செய்கிறார்கள், உணர்வெழுச்சியோடு இருக்கிறார்கள், அதிகம் ஆபத்துகளைச் சந்திக்கத் துணிகிறார்கள், இதையெல்லாம் பெரியவர்கள் புரிந்துகொள்ள முயற்சிசெய்கிறார்கள்; அதேசமயம், அந்தப் பதின்பருவத்தினரே தங்களுடைய உணர்வுகள், எதிர்வினைகளைப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகிறார்கள் என்பதை அவர்கள் அறியவேண்டும்.

பள்ளியில் உயிரியல் பாடப்புத்தகம் வளரிளம் பருவத்தினரின் உடல் மாற்றங்களைப்பற்றிப் பேசுகிறது; ஆனால், அவர்களுடைய மூளையின் வளர்ச்சிபற்றியோ, வளரிளம் பருவத்தினர், இளைஞர்களுடைய நடத்தையை அது எப்படித் தீர்மானிக்கிறது என்பதுபற்றியோ பேசுவதில் அதிகப்பேர் கவனம் செலுத்துவதில்லை.

நாம் கண்டிருக்கக்கூடிய வளரிளம் பருவத்தினரைப் பின்னணியாகக்கொண்டு சில பழக்கமான சூழல்களைப் பார்ப்போம். வளரிளம் பருவத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு திரைப்படம் பார்ப்பதற்காக ஒரு மாலுக்குச் செல்கிறார்; திரும்பி வரும்போது அவர் கையில் ஒரு புதிய ஃபோன் இருக்கிறது, பல நாளாக அவர் சேமித்த பணத்தையெல்லாம் கொடுத்து அந்த ஃபோனை வாங்கியிருக்கிறார் அவர். இன்னொருவர், திடீரென்று ஸ்கேட்போர்ட் ஒன்றை வாங்குகிறார், கூரைமீது ஸ்கேட்போர்ட் விளையாடுகிறார், கீழே விழுந்து அடிபட்டுக்கொள்கிறார். இன்னொரு குழந்தை, 'புதுசா எதையாவது செய்யணும்' என்ற எண்ணத்தில் நண்பர்களுடன் போதை மருந்துகளை உட்கொள்கிறது, அல்லது, மது அருந்துகிறது. பதின்பருவத்தினரின் மூளையில் ஏதோ நடக்கிறது, சாத்தியமுள்ள ஆபத்துகளையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டுத் தானே சென்று அபாயத்தில் விழும்படி செய்கிறது. அது என்ன?

மூளை வளர்ச்சியின் பெரும்பகுதி, குழந்தைப்பருவத்தின் தொடக்க ஆண்டுகளில் நடைபெறுவதாக நம்பப்படுகிறது. மனிதர்களின் மூளை, ஆறு வயதில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது; ஆனால் இருபதுகளின் மத்தியப்பகுதிவரை அது தொடர்ந்து தன்னை மாற்றியமைத்துக்கொண்டே இருக்கிறது. ஒரு வலைப்பின்னலில் உள்ள கம்பிகள் மாற்றியமைக்கப்படுவதுபோல் அது மாறுகிறது: புதிய இணைப்புகள் உருவாகின்றன, பயன்படாத பழைய இணைப்புகள் நீக்கப்படுகின்றன. மூளையில் இணைப்புகள் என்றால், அதற்குள் தகவல்தொடர்பு நிகழ்த்தும் பல வலைப்பின்னல்களைக் குறிக்கிறது.

வளரிளம் பருவத்தினரின் நடத்தையைப்

வளரிளம்பருவத்தினருடைய நடத்தையைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், மூளையில் உள்ள இரண்டு பகுதிகளைத் தெரிந்துகொள்வது மிக அவசியம்: ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் மற்றும் லிம்பிக் அமைப்பு. பகுத்தறிவு, சிந்தித்தல், தர்க்கம், படைப்புணர்வு, தடுத்துநிறுத்தும் கட்டுப்பாடு போன்றவற்றுக்குப் பொறுப்பான மூளையின் பகுதி, ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ். கோபம், ஆபத்தை உணர்ந்திருத்தல் போன்ற உணர்வுகளைச் செயல்முறைப்படுத்துகிற, இதைச் செய்தால் இது கிடைக்கும் என்கிற செயல்முறையை ஒழுங்குபடுத்துகிற பொறுப்பு லிம்பிக் அமைப்பினுடையது.

ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் என்பது, லிம்பிக் அமைப்புக்குப்பிறகு உருவாகிறது. அதனால்தான் வளரிளம்பருவத்தினர் பெரும்பாலும் உணர்வுகளைச் சார்ந்திருக்கிறார்கள், பகுத்தறிவு, தர்க்கம் அல்லது அனிச்சை செயலைச் சார்ந்திருப்பதில்லை. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்கிற உணர்வைச் செயல்முறைப்படுத்தும் மையமும் குழந்தைப்பருவம், வளர்ந்த பருவத்தைவிட, வளரிளம்பருவத்தில் அதிக நுண்ணுணர்வோடு உள்ளது. ஆகவே, அவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட முனைகிறார்கள்.

உண்மையில், ஒருவர் தன்னுடைய செயல்களின் சாத்தியமுள்ள பின்விளைவுகளைப்பற்றிச் சிந்திக்க உதவும் மூளைப் பகுதியான ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் இருபதுகளின் மத்தியில்தான் முழுமையாக வளர்கிறது. அதனால்தான், பதின்பருவத்தில் இருப்பவர்கள் சாத்தியமுள்ள விளைவுகளைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. எதையாவது செய்வது அவர்களுக்குப் பிடித்திருந்தால், அந்த விநாடி மகிழ்ச்சிக்காக அதைச் செய்ய விரும்புகிறார்கள்.

அதேசமயம், வளரிளம்பருவத்தினரின் மூளை தொடர்ந்து வளர்கிறது, நெகிழ்வாகிறது என்பதால், அவர்கள் பல படைப்புத்திறன் மிக்க செயல்களையும் செய்யக்கூடும். ஆகவே, வளரிளம்பருவத்தினரிடம் பேசும்போது, அவர்களைப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவோ, ஏற்கெனவே அவர்களிடம் இருக்கும் திறன்களை மேம்படுத்தவோ ஊக்குவிக்கும்வண்ணம் பேசலாம். இந்த வயதில் மூளையில் எந்தெந்த இணைப்புகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றனவோ, அவை வலுவாகின்றன; எவை அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லையோ, அவை அகன்றுவிடுகின்றன. தோட்டக்காரர் ஒருவர் புதரின் பலவீனமான கிளைகளை வெட்டி, வலுவான கிளைகளை இன்னும் வலுவாக்குவதைப்போலதான்.

வளர்ந்தவர்கள் என்ன செய்யலாம்?

வளர்ந்த பெரியவர்கள், வளரிளம்பருவத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பது அவசியம். அதேசமயம், தங்கள்மீது யாரோ அதிகாரம் செலுத்துகிறார்கள், தங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்று அவர்கள் எண்ணும்படி நடந்துகொள்ளக்கூடாது. இந்த வயதில் மூளை நன்கு மாறக்கூடியது, ஆகவே, அதனை நன்றாக வளைக்கலாம், வளரிளம்பருவத்தினரின் மூளை வளர்ச்சியில் சரியான வழிகாட்டிகள், ஆதரவளிப்போர் பெரும் பங்காற்றலாம். அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது, ஆபத்துக்குத் துணிவது அல்லது தன்னை அறிந்திருப்பது போன்றவற்றைப்பற்றி இந்த வயதிலுள்ள குழந்தைகளிடம் இழிவாகப் பேசக்கூடாது. இதனால் அவர்கள் எரிச்சலடையலாம், கலகச்செயல்களில் இன்னும் அதிகமாக ஈடுபடலாம்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org