வளர் இளம் பருவம்

பதின்பருவத்திலிருக்கும் என் மகள் பருவமடையும்போது நான் அவளுக்கு எப்படி உதவலாம்?

வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்

உங்களுக்கு தற்போது பதின்பருவத்தில் நுழைந்த மகள் இருக்கிறாளா? உரையாட அல்லது அவளது நடத்தைக்குப் பொருத்தமாகப் பதிலளிப்பதற்கு நீங்கள் சவாலாக உணர்கிறீர்களா?  பெற்றோருக்கு பருவமடைதல் அல்லது பதின்பருவத்தில் தங்கள் மகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் ஆதரவு அளித்தல் என்பது பெரும்பாலும் கடினமான பணியாக இருக்கலாம். பெங்களூரைச் சார்ந்த ஆலோசகர் மவுலிகா சர்மா சில பரிந்துரைகளை வழங்குகிறார்:

 • பருவமடைதல் குறித்துப் பேசுதல்: சில பெற்றோர் தங்களின் குழந்தைகளிடம் பருவமடைதல் பற்றிப் பேசுவதற்கு வசதியில்லாமலும் கூச்சமாகவும் உணரலாம். இது குறிப்பாக அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போது அவர்களின் பொற்றோர் இதுபோன்ற உரையாடலில் ஈடுபட்டிருக்காததால் இருக்கலாம். ஆனால் நீங்கள் உடலியல் மாறுபாடுகள் நிகழத் தொடங்குவதைக் கவனித்தால், அவளுடன் திறந்த அமைதியான தொடர் உரையாடல்களில் ஈடுபடுவது முக்கியமானதாகும். இது உங்கள் மகள் அவளது உடல் மாறுபாடு அடையாத்தொடங்கும் பொது எளிதாக உணரவும் மேலும் அதைச் சமாளிக்கவும் உதவும். 
 • புரிந்துகொள்வதற்காகக் கேளுங்கள், பதில் கூறுவதற்கு இல்லை: அவளது உணர்வுகளைக் கேளுங்கள். அவள் பேச விரும்பினால் – நிறுத்து விட்டு உங்கள் முழுக் கவனத்தையும் அவளிடம் கொடுங்கள். நீங்கள் ஏதேனும் வேலைக்கு இடையில் இருப்பின், நீங்கள் கேட்கக்கூடிய நேரத்தை உருவாக்குங்கள். உங்கள் மகள் கவலைகளை வெளிப்படுத்தினால், அவள் வெளிப்படுத்துவதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தைக்கொடுக்க வேண்டியது முக்கியமானது. அதே நேரத்தில், அவளைக் கவனித்து பின்னர் பதிலளிப்பதும் முக்கியமானது.                -
 • ஏற்றுக் கொள்ளவும் மற்றும் அவளிடம் நிபந்தனையற்ற அன்பு செலுத்தவும்: அவளை மதிப்பிடுவது அல்லது விமர்சிப்பதிலிருந்து விலகி இருங்கள். அவளைச் சரிசெய்ய முயற்சிப்பதை விடுத்து அவளது திறனை அதிகப்படுத்த முயற்சிப்பதில் கவனம் செலுத்துங்கள். எ.கா. அவள் எதில் சிறப்பாக இல்லையோ அதைச் சரிசெய்வதை விடுத்து அவளது தன்மைகளான மற்றவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும் திறன், அவளின் தலைமைப்பண்பு அல்லது பிற குணங்களை பாராட்டுவதின் மூலம் அதிகப்படுத்தல். 
 • விளைவுகளை விடுத்து முயற்சிகள் மற்றும் திறன்களை ஒப்புக் கொள்ளுங்கள் அவளது கல்விச் செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்துவது உதவாது. அவளது ஆளுமையின் பிற அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, அவள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் அல்லது தரங்களைப் பெறாத போதும், அவளது முயற்சியை ஒப்புக் கொள்வது முக்கியமானதாகும்.  அவள் கல்விசார் செயல்களில் ஆர்வமின்றி இருந்தால், ஒருவர் அவள் சிறப்பாக இருக்கும் மற்ற திறன்கள் அல்லது திறமைகளைப் பார்த்து அந்த அம்சங்களில் அவளை ஊக்குவிக்கலாம்.   
 • நிறைவான பெற்றோர் என்ற ஒன்றில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்பதின்பருவத்தினரை வளர்ப்பது கடினமானதாக இருக்கலாம், ஆனால் உங்கள் மகளின் சாதனைகள் (மதிப்பெண்கள், பதக்கங்கள்/கோப்பைகள் அல்லது தோற்றம்) உங்கள் பொற்றோர் என்ற மதிப்பை வரையறுக்காது. உங்கள் இணைப்பு, ஆதரவு, உற்சாகப்படுத்தும் திறன் மற்றும் அவளை நம்புவது ஆகியவையே நீண்டகாலம் நீடிக்கும். அவளுடன் நட்பான ஆரோக்கியமான உறவைக் கட்டமைப்பதை நோக்கி பணியாற்றுங்கள்.
 • அவளின் முன்மாதிரியாக இருங்கள்:
  1. நீங்கள் உங்கள் உடல் அளவு குறித்து நன்றாக உணர்கிறீர்கள் என்று அவளுக்குக் காட்டுங்கள், உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள், ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் மற்றும் போதுமான அளவு தூங்குங்கள்.
  2. உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உடன்பணியாற்றுவோருடன் நேர்மைறையான உறவுகளை உருவாக்கித் தொடருங்கள். அவள் மரியாதையான, பிறரைப் புரிந்துகொள்ளும் மற்றும் முரண்பாடுகளை நேர்மறையாகத் தீர்க்கும் வழிகள் கொண்ட சூழல்களிலிருந்து உற்றுநோக்கி அறிந்து கொள்வாள். எடுத்துக்காட்டாக, அவள் நீங்கள் சமூக சந்திப்புகளில் மற்றவர்களுடன் எப்படித் தொடர்பாடுகிறீர்கள் மற்றும் பேசுகிறீர்கள் என்பதைக் கவனிக்கலாம்.
  3. கடினமான உணர்ச்சிகள் மற்றும் மனநிலையைக் கையாளுதில் ஆரோக்கியமான வழிகளைக் காட்டுங்கள். வார்த்தைகளை விடாதீர்கள் ஆனால் உங்கள் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை ஒப்புக் கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் தேவை மற்றும் விருப்பங்களை வலியுறுத்திக் கூறுவதும் முக்கியமானதாகும். 
 • அவளின் நண்பர்கள் குறித்து உண்மையில் ஆர்வம் கொள்ளுங்கள்: அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இது அவளது சமூக உறவுளுடன் தொடர்பிலிருப்பதில் உங்களுக்கு உதவும். இது நீங்கள் அவளுக்கு அவளது நண்பர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை ஏற்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.
 • உறவுகள், பாலியல் மற்றும் பாலியல் உணர்வு உட்பட பல தலைப்புகளில் கலந்துரையாடுவதற்கு திறந்த மனதுடன் வசதியாகவும் இருங்கள். நீங்கள் அவளுடன் உரையாடுவதற்கான தருணங்களை எதிர்பார்த்திருங்கள். 
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org