துன்புறுத்தலுக்குப்பிறகு: உணர்வு நலனை மேம்படுத்த விரிதிறனைக் கட்டமைத்தல்

உள் எதிர்ப்புத்திறன் என்றால், சவால்கள் வரும்போதும் அவற்றைச் சந்தித்து வெல்லும் திறன் ஆகும். ஒருவரிடம் உள் எதிர்ப்புத்திறன் அதிகமாக அதிகமாக, அவரால் விரோதமான வாழ்க்கைச் சூழல்களையும் சமாளித்து முன்னேற இயலும்சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலைச் சந்திக்கும் குழந்தைகளுக்குச் சில மனநலப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஆனால், அதுமட்டுமே இதனைத் தீர்மானிக்கும் விஷயம் அல்ல. குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான, அன்பான சூழலை வழங்குவதன்மூலம், குழந்தையின் பெற்றோர், குடும்பத்தினர் அந்தக் குழந்தையின் காயங்களை விரைவாக ஆற்றலாம், மன நலனைப் பாதுகாக்கலாம், அந்தக் குழந்தை தனது வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் திறனை வளர்க்கலாம்.

துன்புறுத்தலைச் சந்தித்த ஒரு குழந்தையின் பெற்றோர்/அதனைக் கவனித்துக்கொள்வோர் தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வருந்தவேண்டியதில்லை. அவர்களுடைய உள் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தப் பல வழிகள் உண்டு:

  • அவர்களுடைய உணர்வுகளை உறுதிப்படுத்தலாம்.அழாதேஎன்றோ அதை மறந்துவிடுஎன்றோ சொல்லாமலிருக்கலாம். சூழ்நிலை காரணமாக, அவர்கள் சோகமாக, பயமாக, காயப்பட்டதாக உணரலாம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இப்படி நடந்துகொள்வது இயல்பான விஷயம்தான் என்று அவர்களுக்கு நம்பிக்கை தரும்விதமாகப் பேசலாம். தாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதைப்பற்றிப் பேசும்படி அவர்களை ஊக்குவிக்கலாம்.
  • ஒரு வழக்கமான ஒழுங்கைப் பின்பற்றலாம். இளம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டமைப்பு இருந்தால் பாதுகாப்பைக் காண்கிறார்கள். குழந்தைக்கு முக்கியமாகத் தோன்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றலாம் - எடுத்துக்காட்டாக, அவர்கள் தூங்கச்செல்லும்போது ஒரு கதையைப் படித்துக்காட்டுவது, ஒவ்வொரு மாலையிலும் அவர்களுடன் இரவுணவு உட்கொள்வது போன்றவை.
  • அவர்கள் நம்பக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வலுவான பிணைப்புகளை உறுதியாக்கிக்கொள்ள உதவலாம்.
  • அவர்கள் அனுபவித்த துன்புறுத்தல் ஒரு பழங்கதை என்று அவர்கள் புரிந்துகொள்ள உதவலாம், மீண்டும் யாராவது தங்களைத் துன்புறுத்துவார்களோ என்று அவர்கள் யோசித்துக் கலங்கவேண்டியதில்லை என்று சொல்லலாம். அந்தத் துன்புறுத்தல் மீண்டும் நிகழாமலிருப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர்களுக்கு நினைவுபடுத்தலாம்.
  • அவர்கள் இலக்குகளைத் தீர்மானிக்க உதவலாம், அந்த இலக்குகளை எட்டுவதற்காகத் திட்டமிட உதவலாம். இலக்குகள் சிறியவையாக, எட்டக்கூடியவையாக இருக்கலாம், தங்களுடைய செயல்களைத் தாங்களே கட்டுப்படுத்த இயலும் என்று குழந்தை புரிந்துகொள்ள இது உதவும்.
  • குழந்தையுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களை மீறாமலிருக்கலாம், இதன்மூலம், பெரியவர்களை நம்பலாம் என்று குழந்தை புரிந்துகொள்ளும்.
  • அழுத்தம் தரும் விஷயங்களிலிருந்து விலகிச்செல்லக் குழந்தைக்கு உதவுதல்அவர்களைத் துன்புறுத்தியவர்கள் அல்லது, அவர்கள் சந்தித்த துன்புறுத்தலின் நினைவுகளை மீண்டும் கொண்டுவரக்கூடியவர்களிடமிருந்து அவர்கள் விலகியிருக்க உதவுதல். குழந்தையை வேறொரு/புதிய இடத்துக்கு அழைத்துச்செல்ல முயலுதல்.
  • குழந்தையின் சுயமதிப்பை, தங்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வளர்க்க உதவுதல்அவர்கள் முன்பு சவால்களைச் சந்தித்திருப்பதை நினைவுபடுத்தி, இந்தச் சூழ்நிலையையும் அவர்களால் கையாளமுடியும் என்று நம்புவதாகச் சொல்லுதல். அதேசமயம், அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், தாங்கள் இருப்பதாக நம்பிக்கை தருதல்.
  • அவர்களுக்கு நிறைய ஆதரவு, அன்பு மற்றும் பிரியத்தைத் தருதல். அவர்கள்மீது அன்பு செலுத்துகிறோம், ஆதரவு காட்டுகிறோம் என்று அவர்களுக்குப் புரியவைத்தல்.
  • அந்தச் சூழ்நிலை மீண்டும் நிகழ்ந்தால், அவர்கள் என்னென்ன செய்யலாம் என்று குழந்தைக்குப் புரியவைத்தல். அதனைச் சமாளிக்க உதவி கோரி அவர்கள் தங்களிடம் வரலாம் என்று நம்பிக்கை தருதல். அவர்களால் உடனடியாகத் தங்களை அணுக இயலவில்லையென்றால், வேறு என்ன செய்யலாம் என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக, குழந்தைகள் உதவித் தொலைபேசியை அழைத்தல் போன்றவை. குழந்தைக்கு வயதாகியிருந்தால், சில எளிய தற்காப்பு உத்திகளைச் சொல்லித்தரலாம், இதன்மூலம் அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவர்களால் தங்களைத்தாங்களே பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று அவர்களுக்குப் புரியவைக்கலாம்.
  • நிபுணர் உதவியை நாடலாம்

உசாத்துணைகள்:

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org