ஆட்டிசம்: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: ஆட்டிசம் என்பது ஒரு மன நோய்.

உண்மை: ஆட்டிசம் என்பது மூளையின் இயக்கத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு நரம்புசார்ந்த உயிரியல் குறைபாடு, அது ஒரு மன நோய் அல்ல.

தவறான நம்பிக்கை: பையன்களுக்குமட்டுமே ஆட்டிசம் குறைபாடு வரும்.

உண்மை: ஆட்டிசம் பெண்கள், பையன்கள் இருவரிடமும் காணப்படுகிறது. அதே சமயம், பெண்களுடன் ஒப்பிடும்போது பையன்களிடம் ஆட்டிசத்தை அதிகம் காண இயலுகிறது.

தவறான நம்பிக்கை: ஆட்டிசத்தைக் குணப்படுத்த முடியாது, அதற்கு எந்தச் சிகிச்சையும் இல்லை.

உண்மை: ஆட்டிசம் பிரச்னை கொண்ட குழந்தைகள் அதைச் சமாளிக்க உதவுவதற்காகப் பலவிதமான சிகிச்சைகள் மற்றும் பழக்க வழக்க மாற்றங்கள் உள்ளன. பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்து ஓரளவு சுதந்திரமாக இயங்கும் பெரியவர்களாக வாழ்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை எல்லாரையும்போலவே அமைகிறது. ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு IQ மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. ஆகவே அவர்கள் இதைப் பயன்படுத்தித் தாங்கள் விரும்பும் துறையில் மிகப்பெரிய நிபுணர்களாகலாம்.       

தவறான நம்பிக்கை: ஆட்டிசம் கொண்ட குழந்தைகளால் எப்போதும் பேச இயலாது.

உண்மை: குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்து பயிற்சி கொடுத்தால், அவர்கள் வேறு விதங்களில் பிறருடன் தொடர்பு கொள்ளச்செய்யலாம்.

தவறான நம்பிக்கை: ஆட்டிசத்தின் அறிகுறிகள் எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

உண்மை: ஆட்டிசம் என்பது பலதரப்பட்ட தன்மைகளைக் கொண்ட ஒரு குறைபாடு. காரணம், ஆட்டிசத்தின் அறிகுறிகள் மற்றும் தன்மைகள் பலவிதமான கூட்டணிகளில் அமைகின்றன, இவை வெவ்வேறு நபர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் சந்திக்கும் சவால், மற்ற குழந்தைகளிடமிருந்து மிகவும் மாறுபட்டிருக்கும்.

தவறான நம்பிக்கை: மருத்துவர்களுக்கு ஆட்டிசத்தைப்பற்றி எல்லாம் தெரியும்.

உண்மை: மருத்துவத்துறையில் உள்ளவர்களில் சிலருக்குமட்டும்தான் ஆட்டிசத்தைப்பற்றித் தெரியும். பெரும்பாலான மருத்துவர்களுக்கு ஆட்டிசத்தைப்பற்றித் தெரிந்திருக்காது, அல்லது அதைக் கண்டறிவதற்கான திறன் இருக்காது. ஆகவே, பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளதா என்று அறிய விரும்பினால், அத்தகைய குறைபாடுகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரைச் சென்று சந்திப்பது நல்லது.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org