குழந்தைப் பாலியல் வன்முறை: தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்

தவறான நம்பிக்கை: குழந்தைப் பாலியல் வன்முறை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நிகழ்கிறது.

உண்மை: ஒரு குழந்தை துன்புறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதில் பாலினம் எந்தப் பங்கும் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் குழந்தைகள் துன்புறுத்தல் மீதான ஆய்வு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007ல் நடத்தப்பட்டது, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிவிலான பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் குழந்தைகளில் 52.94 சதவீதத்தினர் ஆண்கள் எனக் கண்டறியப்பட்டது.  துருதிஷ்டவசமாக, பையன்கள் மீதான துன்புறுத்தலானது, குழந்தையின் உடல், மன மற்றும் பாலியல் பாதுகாப்பின் மீதான பாதிப்பாக இல்லாமல் ஒரு பாலியல் செயல்பாட்டின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

தவறான நம்பிக்கை: எனது குழந்தை துன்புறுத்தப்படாது. நான் அவர்களைப் புதியவர்களின் கவனிப்பில் விடாமல் கவனமாக உள்ளேன்.

உண்மை: பல நிகழ்வுகளில், குழந்தைகள் நன்கு அறிந்தவர்களால் பாதிக்கப்படுகிறார்கள் – குழந்தை மற்றும் அவர்களுடைய பெற்றோர் நன்கு அறிந்த மற்றும் நம்பும் நபர்கள்.  2007 ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத்த் துன்புறுத்துபவர்கள் ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமாக்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆவர்.  
 

தவறான நம்பிக்கை: அது குறைந்த வருவாய் உடைய குடும்பங்களில் மட்டும் நிகழ்கிறது. நான் துன்புறுத்தலுக்கு உள்ளான யாரையும் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அது இந்தியாவில் நிகழ்வதில்லை.

உண்மை: பாலியல் துன்புறுத்தல் என்பது பாலினம், தேசியம், சமூக நிலை அல்லது பொருளாதாரப் பிரிவுகளைத் தாண்டியது.

தவறான நம்பிக்கை: குழந்தைகள் இளையவர்கள். அவர்கள் வளர்ந்து அதைப் பற்றி மறந்து விடுவார்கள்.

உண்மை: குழந்தைப் பாலியல் வன்முறை குழந்தையின் மன நலனில் நீண்ட காலப் பாதிப்புகளைக் கொண்டிருக்கலாம். குழந்தைப் பாலியல் வன்முறையின் உடனடித் தாக்கம், ஒதுக்கம், பயம், அல்லது – சில நிகழ்வுகளில் – கோபம் ஆகியவையாக இருக்கலாம். குழந்தை மனச்சோர்வு, PTSD மற்றும் சேர்தல் குறைபாடுகள் அல்லது தொடர்பறு குறைபாடுகள் ஆகியவற்றின் இடரில் உள்ளது. தொலைநோக்கில் பார்க்கும்போது, சிறுவயதில் துன்புறுத்தலை அனுபவித்த குழந்தை எதிர்மறைச் சுய பார்வை கொண்டிருக்கலாம், பிறரை நம்பச் சிரமப்படலாம், மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் வன்முறையான உறவுகளுடன் இருக்கலாம். துன்புறுத்தலால் வருந்திய குழந்தை பதின்பருவம் மற்றும் பருவ வயதை அடையும் போது மனநலப் பிரச்னைகள் உண்டாவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

தவறான நம்பிக்கை: பாலியல் வன்முறையைப்பற்றிப் புகாரளிப்பது குழந்தையின் எதிர்காலத்தில் எதிர்மறைத் தாக்கம் கொண்டிருக்கலாம்.

உண்மை: இந்திய அரசால் உருவாக்கப்பட்ட POCSO சட்டம்(பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) குழந்தைகள் பாலியல் வன்முறைகளை புகாரளிப்பதைக் கட்டாயமாக்குகிறது (மருத்துவமனைகள் புகாரளிக்க்க் கடமைப்படுத்தப்பட்டுள்ளன). குற்றம் புரிந்தவருக்கு எதிராகக் குழந்தையின் குடும்பத்தினர் வழக்கைப் பதிவுசெய்யத் தீர்மானித்தால், சட்டம் குழந்தையைப் பாதுகாக்கப் பல விதிகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, குழந்தையின் வாக்குமூலம் நம்பகமான ஒரு பெரியவரின் முன்பு பதிவு செய்யப்படுகிறது, வழக்கின் போது அல்லது அதன்பிறகு குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் நிபுணர்கள் உள்ளனர் (எகா: ஆலோசகர், சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர்) இப்படி இன்னும் பல.

குழந்தைப் பாலியல் வன்முறை நிகழ்வு புகாரளிக்கப்படவில்லையெனில், குற்றம் புரிந்தவர் தண்டனையின்றிச் செல்வதோடு, தொடர்ந்து மற்ற குழந்தைகளைத் துன்புறுத்தலாம்.

தவறான நம்பிக்கை: ஆண்கள் மட்டுமே குழந்தைகளைத் துன்புறுத்துகின்றனர்.

உண்மை: பெரும்பாலான குற்றவாளிகள் ஆண்களாக இருந்தாலும், சிறிய சதவீதத்திலான பெண்களும் (தோராயமாக 4% அளவுக்கு) குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. பெண் குற்றவாளிகளின் வழக்குகள் பொதுவாகக் குறைவாகப் புகாரளிக்கப்படுகின்றன, ஏனென்றால் பெண் குற்றம் புரிபவர்கள் இளம் பையனைத் துன்புறுத்துவது ஒரு பாலியல் தொடக்கமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது, எனவே இதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை.

தவறான நம்பிக்கை: இளம் குழந்தைகள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள்.

உண்மை: குழந்தைப் பாலியல் துன்புறுத்தல் முதிர்ந்த குழந்தைகளுக்கும் நிகழலாம். உண்மையில், 2007 ஆய்வு பருவ வயதுக்கு முந்தைய மற்றும் பருவமடைந்த குழந்தைகளே பெரும்பாலும் ஆபத்தில் உள்ளதை வெளிப்படுத்தியது. 73 சதவீதம் வரையிலான மொத்த குழந்தைப் பாலியல் வன்முறை நிகழ்வுகள் 11 மற்றும் 18 வயதுக்கு இடையிலான குழந்தைகளிடையேதான் புகாரளிக்கப்பட்டுள்ளன.

தவறான நம்பிக்கை: வெற்றிகரமான மற்றும் இரக்க குணமுள்ள இந்த நபர் குழந்தையைத் துன்புறுத்தியிருக்க எந்த வழியும் இல்லை. குழந்தை இதனைக் கற்பனை செய்திருக்க வேண்டும்.

உண்மை: குழந்தைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்துபவர்கள் மற்ற நபர்களிலிருந்து வேறுபட்டிருப்பதில்லை. மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள் என்ற நூலில், மனநல நிபுணர், பாலியல் குற்றவாளிகளைப்பற்றி நன்கறிந்த சர்வதேச நிபுணர் மரு. அன்னா C சிலேட்டர் கூறுகிறார்: குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர்.  சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர். குழந்தைகள் பொய் சொல்வதில்லை, அல்லது பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டது குறித்துப் பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்குவதில்லை.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org