அடம்பிடிப்பதைப் புரிந்துகொள்ளுதல்

எனக்கு சாக்லேட் வேண்டும், எனக்கு அது இப்போதே வேண்டும். நீங்கள் எனக்கு இப்போதே தரவில்லையெனில், நான் தரையில் விழுந்து, நெஞ்சு வெடிப்பது போல் கத்தி, உங்களைச் சங்கடப்பட வைக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.”

சிறுகுழந்தைகளின் பெற்றோருக்கு ஒரு மோசமான கனவுக்காட்சி பிடிவாதம் ஆகும்குறிப்பாக பொது இடத்தில் பொங்கும் கோபம் மற்றும் அதிக சத்தமான அழுகை. ஆனால் சரியாகப் பிடிவாதம் என்றால் என்ன, மேலும் ஒரு குழந்தைய அதிகமாகப் படியான பிடிவாதப் பாதிப்புக்குள்ளாகியிருந்தால், அது மனநலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்க முடியுமா?  

இதைப் பற்றி விரிவாக அறிய, கோபமான பிடிவாதங்கள் குறித்து விரிவாகப் படித்த, மினசோட்டா பல்கலைக்கழக, குழந்தை நரம்பு-உளவியலாளர் மரு. மைக்கேல் போட்டிகல் உடன் தொலைபேசியில் உரையாடினோம். மேலும் படிக்கவும்

மரு. போட்டிகல், நீங்கள் உங்கள் தொழில், வாழ்க்கையின் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளை உற்றுநோக்குதல், பெற்றோர்களுடன் பேசுதல் மற்றும் குழந்தைகளின் பிடிவாதங்களின் வடிவங்களைப் புரிந்து கொள்வதில் செலவழித்துள்ளீர்கள். ஆரம்பமாக, நீங்கள் பிடிவாதம் என்றால் என்ன என்று எங்களுக்குச் சொல்ல முடியமா?

வழக்கமாக பிடிவாதம் என்பது குறுகியகால கோப எழுச்சி அல்லது அழுகை, கீச்சிடல்,கத்துதல் அல்லது பொருட்களை எறிதல் போன்ற பொருந்தாத நடத்தை பிடிவாதத்தின் அடையாளங்கள் வழக்கமாக 12 மாத வயதிலிருந்து வெளிப்படத் தொடங்கும். 18 மாத வயதில், பிடிவாதம் முழு அளவில் வளர்ந்திருக்கும். வரலாற்றுரீதியில், பால்குடி மறத்தல் இரண்டு வயதிற்குப் பக்கத்தில் நடக்கிறது மேலும் பிடிவாதமானது குழந்தை தாயின் கவனம் மற்றும் பேணுகையைப் பெற முயற்சிப்பதிலிருந்து பரிமாணம் அடைந்திருக்கலாம்

பிடிவாதம் இரண்டு பாகங்களைக் கொண்டது:  

  • கோபம்: கத்துதல் மற்றும் அலறுவதை உள்ளடக்கியது நடவடிக்கையில் இது அடிப்பது, பொருட்களை எறிவது,  arching the back என இன்னும் பலவகையில் வெளிப்படுத்தப்படும்
  • வருத்தம்: சிணுங்கள் மற்றும் அழுகை, தரையில் விழுந்து அழுதல், ஆறுதல் தேடுதல் இன்னும் பல.

இந்த இரண்டு பாகங்களுக்கும் வெவ்வேறான மூளையின் பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. கோபத்தின் போது இடது டெம்போரல் கதுப்பும், வருத்தத்தின் போது வலது பிராண்டல் கதுப்பும் செயல்படுத்தப்படுகிறது எங்கள் ஆய்வின் முதன்மைக் கண்டுபிடிப்பு, இந்த இரு கட்டங்களும் நேரத்தைப் பொருத்து மாறுபடுகிறது, அவை ஒரே நேரத்தில் அதிகமாக அல்லது குறைவாக ஏற்படுகிறது 

ஒரு குழந்தை பொதுவில் பிடிவாதத்தைக் காட்டும்போது, பெரும்பாலும் பெற்றோர் குழந்தையின் நடத்தையால் மதிப்பிடப்டுகின்றனர். வளர்ப்பு முறை பிடிவாத்திற்கு காரணம் என்பதை மறுக்கும் ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா? 

இல்லை, பெற்றோர் தண்டிக்கின்ற அல்லது திட்டுபவர்களாக இருந்தால், இது குழந்தையின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இரு பெற்றோரும் திட்டுபவர்களாக இல்லாத இயல்பான வீடுகளில் கூட, நீங்கள் குழந்தைகளைக் பிடிவாதம் செய்பவர்களாகக் காணலாம்.

அது எங்களை, எங்களின் அடுத்த கேள்விக்கு இட்டுச் செல்கிறது. எதற்காக குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்?

குழந்தைகள் சாதாரணமாக பின்வரும் மூன்று காரணங்களில் ஒன்றிற்காக பிடிவாதம் பிடிக்கிறார்கள்:

  • கவனத்தை ஈர்ப்பதற்காக
  • ஏதாவது கிடைக்கக் பொருட்களைப் பெறுவதற்காக (எடுத்துக்காட்டாக பிடித்தமான உணவு அல்லது பொம்மை)
  • எதாவது கட்டளைகளில் இருந்து தப்பிக்க

மேற்கண்ட அனைத்துச் சூழ்நிலைகளிலும், பெற்றோர் அல்லது காப்பாளர்கள் வழக்கமாக ஏன் குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என அறிவார்கள். இருப்பினும், குழந்தைகள் சிலநேரங்களில் தெளிவாகத் தெரியாத காரணத்திற்காகவும் பிடிவாதம் பிடிக்கலாம். எடுத்துக்காட்டாக, குழந்தைக்கு ஏதேனும் உடல்பிரச்சினை (எடுத்துக்காட்டாக உணவு மேலீடு, நெஞ்சு எரிச்சல்) மற்றும் அவர்களால் என்ன நடக்கிறது என விளக்குவதற்கு கடினமாக இருப்பவைஇச்சூழ்நிலைகள் பொதுவாக நடப்பதில்லை.

இந்தப் பிடிவாதங்கள் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை பிடிவாதம் பிடிக்கலாம் மேலும் ஒவ்வொரு பிடிவாதமும் 10 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். சிலநேரங்களில், குழந்தைகள் 10 நிமிடங்களைத் தாண்டியும் பிடிவாதம் பிடிக்கலாம். இது இயல்பானது.

குழந்தை வளர வளர பிடிவாதம் பிடிப்பதின் எண்ணிக்கை குறைகிறது, ஆனால் அதன் கால அளவு அதிகரிக்கிறது. பெரும்பாலான குழந்தைகளில், ஐந்து வயதாகும் போது பிடிவாதம் முற்றிலும் நின்றுவிடும்

சிலசமயங்களில், 25 சதவீதம் பேர்களில், பிடிவாதங்கள் குழந்தைப்பருவத்திற்குப் பின்னும் தொடரலாம். வயதுவந்தோர்களில் குற்ற உணர்வு அல்லது கழிவிரக்கம் போன்ற வருத்தங்களுடன் முடியும் கோப உணர்ச்சிகள், குழந்தைப் பருவப் பிடிவாதத்தின் எச்சங்கள்.

எப்போது இந்தப் பிடிவாதங்கள் கவலைக்குக் காரணமாகிறது மேலும் கவனப்பட வேண்டியதாகிறது?

அதிகப்படியான பிடிவாதம் (ஒரு குழந்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கு மேல் பிடிவாதம் பிடித்தால் மேலும் சராசரியாக இப்பிடிவாதங்கள் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால்) அது மறைந்திருக்கும் உளவியல் பிரச்சினையின் அடையாளமாக இருக்கலாம். இந்நிகழ்வில், முதலில் உடல் பிரச்சினை அல்லது நோயை அகற்ற வேண்டும் அடுத்ததாக, உளவியல் வல்லுநரின் உதவியை நாடுவது முக்கியமானது. கவனிக்காமல் விட்டால், இந்தப் பிரச்சினைகள் பின்னர் வெளிப்படை பிரச்சினைகளாக (கோபம்) அல்லது உள்ளார்ந்த பிரச்சினைகளாக (மன அழுத்தம் அல்லது வருத்தம்) வெளிப்படக் கூடும். ஆண்களில், நடத்தைகள் வழக்கமாக முழுவதும் வெளிப்படையானதாக அல்லது முழுவதும் உள்ளார்ந்ததாக அல்லது இரண்டின் கலவையாக இருப்பதை கவனிப்பது சுவாரசியமானது. மற்றொரு புறம், பெண்களில், முழுமையான வெளிப்படையான நடத்தைகளின் அடையாளங்கள் காணப்படவில்லை முழுவதும் உள்ளார்ந்ததாக (வருத்தம், கவலை, மன அழுத்தம்) அல்லது இரு நடத்தைகளின் கலவையாக உள்ளது

பிடிவாதத்திற்கு எந்த உடனடித் தீர்வும் இல்லை என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் பிடிவாதச் சூழலில் முடியைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கும் பெற்றோருக்கு, எது சிறந்த ஆலோசனையாக இருக்கும்? 

வழக்கமான ஆலோசனை பித்துப்பிடித்துபோல் மாறாதீர்கள். குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும்போது எதிர்வினையை எப்போதும் எதிர்பார்ப்பார்கள். நான் மூன்று வயதானவனாக இருந்தால், நான் எனது வாழ்வில்  பலவற்றைக் கட்டுப்படுத்த முடியாது. நான் என்ன சாப்பிட வேண்டும், எந்த நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும் இன்னும் பலவற்றை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால் கடவுள் அருளால், நான் அம்மாவிற்குப் பைத்தியம் பிடிக்கச் செய்ய முடியும். அது எனது கட்டுப்பாட்டில் உள்ளது. எதிர்வினையே பெரும்பாலான இளம் குழந்தைகள் திருப்திப் படும் விளைவு ஆகும். எனவே, நீங்கள் தயாராக இருக்க முடியுமெனில், அமைதியாக திறந்த மனதுடன் கையாளுங்கள், அது பாதி வெற்றி பெற்றது போல்.

குழந்தைகள் அடிக்கடி பெற்றோரின் உணர்ச்சி பாவங்களைப் பின்பற்றுவர் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. எனவே, நீங்கள் கோபமாக அல்லது கவலையாக இருந்தால், குழந்தையும் இந்த நடத்தைகளை மாதிரியாகக் கொண்டால் ஆச்சரியப்படாதீர்கள்.

குழந்தை கவனத்தைக் கவர அல்லது கிடைக்கக்கூடிய பொருட்களை பெற அடம் பிடித்தால், சிறந்த வழி அதைப் புறக்கணியுங்கள் அல்லது தேவைப்பட்டால் அவர்களைத் திசைத்திருப்ப முயற்சி செய்யுங்கள்குறிப்பாகத் திட்டமிட்ட புறக்கணிப்பு (இடைவேளை, அவர்களது சிணுங்கலைப் புறக்கணித்தல் இன்னும் பல) மிகவும் பயனுள்ளது. இருப்பினும் குழந்தை ஏதானும் வேலை அல்லது கட்டளையிலிருந்து (பல் தேய்க்க மறுப்பது போன்றது) தப்பிக்க அடம் பிடித்தால், உடனே தலையிட்டு குழந்தையைச் சம்மதிக்கச் செய்வது முக்கியமானதாகும். நீங்கள் இப்படிக் கூறலாம், “நீ உனது பல்லைத் தேய்க்கவில்லையெனில், நான் உன் கையைப் பிடித்துப் பல்தேய்க்க உதவுவேன்”. இது குழந்தையின் தன்னாட்சியைப் பறிக்கும், பெரும்பாலான குழந்தைகள் அதை விரும்ப மாட்டார்கள். நீங்கள் உறுதியாக இருந்தால் விரைவில் குழந்தை உங்கள் கட்டளைக்கு இணங்குவதற்குப் பழகும்.

இருப்பினும், நீங்கள் அவசரத்தில் இருந்தால், அல்லது குழந்தை இணங்க மறுத்தால், நீங்கள் விட்டுக் கொடுப்பது சரியானது. ஏனென்றால் நீங்கள் அதிகாரப் போட்டி செய்து பின்னர் குழந்தையை அவர்கள் வழியில் விட்டால், அது எவ்வளவு தூரம் விடாமல் முயற்சிக்கிறோமோ, அவ்வளவுக்கு நம் வழியில் செய்யலாம் என்று குழந்தைய நம்ப வைக்கும்.

Related Stories

No stories found.
logo
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org