கற்றல் குறைபாடு: உண்மை அறிவோம்

தவறான நம்பிக்கை: எல்லா கற்றல் குறைபாடுகளும் (LD) ஒன்றே தான்.

உண்மை: கற்றல் குறைபாடுகள் என்பவை ஒரு சிக்கலான நிலை ஆகும். இதில் டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராபியா, டிஸ்கால்குலியா மற்றும் டிஸ்பிராக்ஸியா போன்ற பல குறைபாடுகள் தொகுப்பாக இடம் பெறுகின்றன. இந்தக் குறைபாட்டின் தீவிரமும் அதன் அறிகுறிகளும் ஒருவருக்கொருவர் மாறுபடக் கூடும்.

தவறான நம்பிக்கை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுடைய IQ மிகக் குறைவாக இருக்கும்.

உண்மை: கற்றல் குறைபாடு என்பது நரம்புச் சார்ந்த பிரச்சனை, ஆகவே அது குறைவான புத்திசாலித்தனத்தின் அடையாளம் அல்ல. உண்மையில் கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் சராசரியான அல்லது சராசரிக்கு மேல் புத்திசாலித்தனத்தைக் கொண்டிருப்பார்கள்.

தவறான நம்பிக்கை: ஒரு குழந்தை பெரியவன் ஆகும் போது எல்லா கற்றல் குறைபாடுகளும் சரியாகிவிடும்.

உண்மை: ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கற்றல் குறைபாட்டைக் குணப்படுத்த இயலாது. அதற்காக அந்தக் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றியடையமாட்டார்கள் என்று எண்ணி விடக்கூடாது. சரியான அரவணைப்பு வழங்கப்பட்டால் அந்தக் குழந்தைகள் தங்களுடைய சிரமங்களைச் சமாளித்துக் கொண்டு, தங்களுடைய பலங்களைப் பயன்படுத்தி வாழ்க்கை லட்சியங்களை எட்டுவார்கள்.

தவறான நம்பிக்கை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் சோம்பேறிகள்.

உண்மை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகள் சிரமப்பட்டு உழைக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய உழைப்புக்குத் தகுந்த பலன் கிடைப்பதில்லை. இதனால் குழந்தைகள் மனம் தளர்ந்து ஊக்கமின்றி சோம்பேறிகளைப் போல் தோன்றலாம்.

தவறான நம்பிக்கை: கற்றல் குறைபாடுகளும் ADHDம் பல குழந்தைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றன.

உண்மை: கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு ADHDம் இருப்பது உண்மை.

Related Stories

No stories found.
வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன்
tamil.whiteswanfoundation.org